சட்ட விரோத ஆலை மூடுதல் – கும்மிடிப்பூண்டி கிரீவ்ஸ் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

UPDATE : 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்படாமல் இருக்கும் நிலையில், நேற்று தொழிலாளர்களை அழுத்தம் கொடுத்து வெளியேற்றும் வகையில் குழாய் நீர் வசதி துண்டிக்க பட்டிருக்கிறது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

கும்மிடிபூண்டி SIPCOT தொழிற்சாலை வளாகத்தின் மிக பழமையான பெரும் நிறுவனங்களில் ஒன்றான Greaves Cotton Construction Equipment Business (CEB) ஆலை தொழிலார்கள் 300 க்கும் மேற்பட்டோர் திடீர் வேலை பறித்தலை தவிர்க்க போராடி வருகின்றனர். விதிகளுக்கு உட்பட்ட முன் அறிவிப்போ அரசாங்க அனுமதியோ இல்லாத ஆலை மூடலையும் அதை தொடர்ந்த பணி இழப்பையும் சட்ட விரோத அநீதியாக குற்றஞ்சாட்டி, ஒப்பந்த பணியாளர்களுடன் சேர்ந்து 150 நிரந்தர பணியாளர்கள் எதிர்த்து கொண்டிருக்கின்றனர். 15.9.2014 அன்று, ஜனநாயக தொழிற்சங்க மையம் (DTUC) தலைமையில் தொழிலாளிகள் கதவை உடைத்து சென்றே, ஆலை நிர்வாகத்தின் ஒடுக்குமுறைகளை கண்டிக்கும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர வேண்டி இருந்திருக்கிறது.

சந்தேகத்திற்குரியவாறு இரண்டு மாத விடுப்பு அறிவித்திருந்த 11.08.2014 தேதியிட்ட நோட்டீசை திரும்ப பெற கோரி, DTUC தலைமையில் தொழிலாளிகள் வாயில் கதவை உடைத்து உள்ளே சென்று தொடர்ந்து போராட தொடங்கி இருந்தனர். செவி கொடுக்காத நிர்வாகம், அடுத்த நாளே தற்காலிகமாக உற்பத்தியை ரத்து செய்வதாக தெரிவித்தது இணையதளத்தில் பதிவாகி உள்ளது. அதன் பின்னர் அறிவிப்பை 24.08.2014 அன்று நிர்வாகம் திரும்பபெற்ற போதும், நிறுவனத்தை விற்க போவதாக (தற்போது உறுதியாகி உள்ள) தகவல்கள் வெளிவந்தன. மேலும் தொழிலாளி விரோத போக்கை கைவிடாத நிறுவனம், உற்பத்திக்கான இயந்திரங்களை நகர்த்தி வந்தது மட்டும் அல்லாமல், ஆலையை (Heavy Engineering Unit I, II) நிரந்தரமாக இழுத்து மூடுவதாகவே கடந்த 13.9.2014 அன்று அறிவித்துள்ளது. ” நஷ்டம் ஏற்பட்டுள்ளது “, அதாவது லாபம் குறைந்தது, என்ற பொய்யான காரணத்தை நம்ப வைக்க முயற்சிக்கின்ற அறிக்கையையே இணையதளத்திலும் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. ரூ.1700 கோடிகள் மதிப்புள்ள கிரீவ்ஸ் காட்டன் தொழிற்சாலையானது 1859 இல் ஆங்கிலேய முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்க ஆரம்பித்து, 1947 இல் இருந்து Thapar Group of Companies இன் முக்கிய அங்கமாக இருந்திருக்கிறது. இக்குழுமத்தின் மற்றும் ஒரு கிளை தான் உலகமறிந்த Crompton Greaves நிர்வாகத்திற்கு பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்க உரிமையை கூட அங்கீகரிக்காத Greaves Cotton Ltd., சில மாதங்களுக்கு முன் 200-250 ஒப்பந்த தொழிலாளர்களை எந்த விளக்கங்களும் அளிக்காமல் வேலையை விட்டு நீக்கியும் இருக்கிறது. பத்துக்கும் மேல்பட்ட நிரந்தர தொழிலாளர்களை ‘attendance deficit’ இன்
பெயரிலும் ‘உற்பத்தி குறைவின்’ பெயரிலும் பணி நீக்கம் செய்திருக்கிறது. உயர் நிர்வாகிகளுக்கு குறைந்தது ரூ.40 Lakh p.a என்றும், ITI பயிற்சி பெற்ற ஆரம்ப நிலை தொழிலாளிக்கு மாதம் ரூ.7000 கு கீழ் ஊதியம் என்றும் முதலாளித்துவ தர்க்கத்தை அப்படியே பின்பற்றி தான் வந்திருக்கிறது. 20 இல் இருந்து 37 வருட உழைப்பு போட்டவர்களுக்கும் ரூ.20,000 மட்டுமே அதிகபட்ச சம்பளம்!

சட்டத்தில் வழிவகுத்து இருப்பதை விட ‘VRS திட்டம்’ போன்ற நஷ்ட ஈடுகள் மிகையானவை என்று கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள், தொழிலாளி ஒற்றுமைக்கு ஈடு கட்ட முடியாமல் இருப்பது தெளிவாகிறது. தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் 100 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணி செய்யும் ஒரு நிறுவனத்தை அரசின் அனுமதி இன்றி மூட இயலாது. மோடியின் BJP அரசு புதுப்பிக்க துடிக்கும் முடங்கிய திட்டங்கள், நில கையகப்படுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் ஒப்புதல்களின் ‘தேக்கம்’ (அதாவது ஒட்டுமொத்த கட்டுமான தொழில் சந்தை போக்கின் “underperformance”) காரணமாககூட, Greaves Cotton விற்பனை மதிப்பீடு குறையுமென அச்சத்தில் மூழ்கியதாக இல்லை. அதிலும் விவசாய உபகரண உற்பத்திக்கு மானியம், Overtime உழைப்பு வார இறுதிக்கு நீண்டாலும் சுரண்டப்படுதல், இப்படி 30% கும் அதிகமாக தொடர்ந்து லாபம் தீட்டி வந்த இந்த நிறுவனம், “நிலை தவறாத வளர்ச்சியினால் மொத்த மதிப்பை ஏராளமாக உயர்த்தி” இந்த நிதி ஆண்டின் முதல் கால் பகுதியில் ‘கடன் அற்ற (debt free)’ தரத்தை அடைந்துள்ளதாக முதலீட்டாளர்களுக்கு விளம்பர படுத்தி கொள்கிறது. தொடர் புதிய தயாரிப்புகளின் வெளியீடும் முக்கிய பின்னடைவுகள் எதையும் குறிப்பதாக தெரியவில்லை. (தொழிலாளர்களின் பேட்டி இங்கே)

வேலை – வாழ்க்கை உத்திரவாதத்திற்கான கோரிக்கைகளை கலைக்க எண்ணும் Greaves Cotton, நீதிமன்றத்தை நாடி இருக்கிற ஏமாற்று தந்திரங்களையும் தொழிலாளர்கள் வீழாமலே எதிர்கொண்டு வருகின்றனர்.

(மேலும் செய்திகளுக்கு இந்த பக்கத்தை கவனிக்கவும், தொடர்புக்கு: கார்கிவேலன் (மையக் குழு உறுப்பினர், ஜனநாயக தொழிற்சங்க மையம் (DTUC)) 9840327140)

This entry was posted in Agriculture, தமிழ். Bookmark the permalink.