Vazhakku en 18/9 – of manufactured trials, pricey justice and unfelt pleasure

ஒவ்வொரு நாளும் நீதி மன்றத்தில் நூற்றுகணக்கான வழக்குகள் வாதாடபடுகின்றன .பண பலமும் பதவி பலமும் உண்மையை திரித்து நீதி தேவதையை நிலை குலைய செய்யும் வழக்குகளும் அவற்றுள் அடக்கம்.அப்படி ஒன்று தான் வழக்கு எண் 18 /9.
    கொடிது கொடிது வறுமை கொடிது.அதனிலும் கொடிது இளமையில் வறுமை.முறுக்கு கம்பெனியில் கொத்தடிமையாகவும்,கை ஏந்தி பவனில் எடுபிடி ஆகவும் நிலம் இழந்த பெற்றோர்களின் கந்துவட்டி கடனை தீர்க்க தன் இளமையை தொலைத்து கொண்டிருக்கும் பையன். பெற்றோர் இறப்பிற்கு கூட போக அனுமதிக்கப்படாத இப்பாத்திரத்தின் கதை, சமீபத்தில் தமிழகத்தில் முறுக்கு கம்பெனியில் இருந்து தப்பித்த சிறுவனின் தவிப்பை கண் முன்னே கொண்டு வருகிறது. அவன் விரும்பும் வீட்டு வேலை செய்யும் பெண் என்று குழந்தை தொழிலாளி … எதிர் துருவமாக அபரிதமான பணத்தில் புரண்டு பணத்தை தவிர எதையும் எவரையும் மதிக்காத பள்ளி மாணவன். அவனை உண்மையான தோழனாக நம்பி அலைக்கழிக்கப்படும் மேல்தட்டு பெண். எப்பொழுதும் போல், பணக்காரன் குற்றம் புரிய , வலுவான போதிய ஆதாரம் கிடைத்தும், பழி ஏழை மேல் தலை கீழாக சுமத்தப்படுகிறது. போலிசும் சட்டமும் விலை பேசப்பட்டு விட பாதிக்கப்பட்ட பெண் பாடம் புகட்டுகிறாள்.

தவறாக கையாளப்படும் கைபேசியும் பெற்றோரின் சுயநலமான மிரட்டல் அணுகுமுறையும் இன்றைய இளைஞர் சமுதாயத்தை எந்த அளவுக்கு சீரழிக்கிறது என்பதை அழுத்தமாக சொல்கிறது படம். அத்துடன் ,தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ச்சி அடைந்த காலத்திலும்  வாங்கிய சொற்ப கடனுக்காக பிள்ளைகளும் கொத்தடிமைகளாகும் கொடுமை இன்றளவும் தொடரும் உண்மையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
     ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கும் பொழுது ஒருவருடன் ஒருவர் பேச கூடாது, பழக கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் இளைய தலைமுறையை நல்வழி படுத்துகிறோம் என்று “கல்வி தந்தைகள் ‘ பிதற்றி கொண்டிருக்க,  இப்படத்தில் பாதிக்கப்பட்ட பெண் ‘பெண்கள்-மட்டுமே- பயிலும்’ பள்ளியின் மாணவி ஆக காட்டப்பட்டிருப்பதன் மூலம் டைரக்டர் மறைமுக message கொடுத்திருப்பதாக தோன்றுகிறது.
    .நகரத்தின் நடைபாதையில் பிழைப்பு நடத்தும் இட்லி கடைக்காரன் , பசியால் மயங்கி கிடக்கும் எவனோ ஒருவனுக்கு பலன் பார்க்காமல் recommend செய்யும் பாலியல் தொழிலாளி, இவர்களின் பாசம் ,பரிவு, காதல், நகைச்சுவை என்று பலவற்றையும் படம் பிடித்திருக்கும் விதம் திகட்டாத நெகிழ்வு. வேலைக்கு கூட்டிக்கொண்டு வரப்பட்டிருக்கும் இடத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசையில் மாநகரத்தை சுற்றிவரும் அந்த நிஜ தெருகூத்து கலைஞன் ஆன சின்ன பையன் வெகு சுட்டி. “எங்கே police -காரன் இருப்பானோ, அங்கே தான் கஞ்சா விற்பவனும் இருப்பான்” – எவ்வளவு துல்லியம்! 

நல்ல படம் தந்த டைரக்டர் மேலும் நல்ல படங்கள் தர வேண்டும் என்று விரும்பும் வேளையில், மற்றும் ஒரு வழக்கு எண் மட்டும் வேண்டாம் என்று கேட்டு கொள்வோம். ஏன் எனில் நாம் விரும்புவது குற்றங்களற்ற ஓர் உலகத்தை.

This entry was posted in Art & Life and tagged , , , , , . Bookmark the permalink.