மாருதி மாநேசர் தொழிலாளர் போராட்டங்களுக்கு தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் ஆதரவு

மாருதி மாநேசர் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தொ.மு.க, ஏஐடியுசி, சிஐடியு, எச்.எம்.எஸ், பி.எம்.எஸ், ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு ஆகிய தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் ஹரியானா மாநில தொழிலாளர் அமைச்சருக்கும், மத்திய தொழிலாளர் ஆணையருக்கும் கீழ்கண்ட அறிக்கையை அனுப்பியுள்ளனர்.

கடந்த ஜுலை 18 அன்று மாநில அடக்குமுறை, தொழிலாளர் உரிமைகளை முடக்குவதற்கு எதிhhன தொழிலாளரின் போராட்டம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. கடந்த வருடம் இதே நாளில், நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் தொழிற்சாலையில் பேச்சுவார்ததை நடந்து கொண்டிருந்த போது, நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்ட ரௌடிகள் தொழிலாளர்களை கடுமையாக தாக்கினர். இதில் ஒரு மனித வள மேலாளர் மர்மமான முறையில் இறந்தார். நிர்வாகம் இதற்காக காத்திருந்தது போல தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவியுள்ளது. மாபெரும் காவல்துறை குவிப்பு, தொழிற்சாலையை மூடுதல், 2346 தொழிலாளர்கள்(546 நிரந்தரத் தொழிலாளர்கள், 1800 ஒப்பந்த தொழிலாளர்கள்) நீக்கம், தொழிலாளர்களின் வீட்டிலும், கிராமங்களிலும் காவல்துறை ரெய்டு நடத்துதல், எனப் பலவகையான அடக்குமுறைகள் தொழிலாளர்களின் மேல் ஏவப்பட்டன. ஆயுதம் தாங்கிய காவல் படைகள் ரோந்து என மாநில அரசு தன்பங்குக்கு தொழிலாளர்களுக்கு எதிராக போர் தொடுத்துள்ளது. தொழிலாளர்களுக்கு தங்கள் வீடுகளை வாடகை கொடுத்து வந்த பணக்கார விவசாயிகள் தொழிலாளர்கள் உடைமைகளை வீட்டுக்கு வெளியே வீசினர். மாருதியின் ஜப்பானிய முதலாளிகளுக்கு அரசும் அனைத்து பிற்போக்கு அதிகார வர்க்கங்களும் துணைபோகின்றன. ஒரு வருடம் கழித்து கொலை குற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 147 தொழிலாளர்கள் கைதாகி இன்னும் சிறையில் உள்ளனர். அவர்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடமாக தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிற்சங்கத்தை நடத்தவும் அஹிம்சை போராட்டங்கள் அனுமதி மறுப்பு, கைது என நசுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கீழ்கண்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நாங்கள் மாநில மத்திய அரசுகளை கோருகிறோம். சம்பவம் குறித்து உண்மைகளை நாங்கள் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. ஏற்கனவே அனைத்து உங்களுக்கு தெரியும். அதனால் இந்த கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்தி தொழில் அமைதியை நிலைநாட்டக் கோருகிறோம்.

கோரிக்கைகள்:
• மாருதி சுசுகி மாநேசர் தொழிற்சாலை, சுசுகி பவர்டிரெயின் இந்தியா, சுசுகி மோட்டார்சைகிள் தொழிற்சாலைகளில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களை உடனடியாக வேலையில் திரும்பவும் அமர்த்த வேண்டும்.
• குர்காவ் சிறையில் கடந்த ஒரு வருடமாக அடைக்கபட்ட 147 தொழிலாளர்களையும், கைத்தாலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரையும் எந்த நிபந்தனையும இன்றி விடுவித்து அவர்கள் மேல் உள்ள பொய் குற்றசாட்டுகளை நீக்க வேண்டும்.
• குர்காவ் மாநேசர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் உரிமை மீறல்களை குறி;த்து உயர்மட்ட நீதித்துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.
• 18 ஜுலை 2012 அன்று மாநேசர் தொழிற்சாலையில் நடந்த சம்பவம் குறித்து உயர்மட்ட நீதித்துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.
• தொழிற்சாலைகளில் ரௌடி கும்பல்கள், பௌன்சர்கள் ஈடுபடுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.
• ஆண்டு தோறும் நடக்கும் பணிகளில் ஒப்பந்த நிரந்தரமற்ற தொழிலாளர்கள் ஈடுபடுத்துவதை நிறுத்தி அனைத்து தொழிலாளர்களும் நிரந்தரம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

This entry was posted in Automobile Industry, News, Workers Struggles, Working Class Vision, தமிழ் and tagged , , , , , , , , . Bookmark the permalink.