தொழிற்சாலை விபத்து எனும் உயிர்பலியும், சில சமாளிப்புகளும்

‘SGH’ என்று அழைக்கப்படும் Sungwoo Gestamp Hitech Ltd. இன் திருபெரும்புதூர் SIPCOT தொழிற்சாலையில் கடந்த ஜூன் 11 அன்று ஏற்பட்ட கொடூர விபத்திற்கான எந்த அடையாளமோ தயக்கமோ இல்லாமல் வேலை தொடர்வது, உழைக்கும் வர்க்கத்திற்கு பழகி போன யதார்த்தங்களில் ஒன்றாகவே வரலாறு நிரூபிக்கிறது. புதன்கிழைமை மாலை 6.45 மணி அளவில் ( இரண்டாவது shift ) விபத்தில் வாசுதேவன் என்கிற 32 வயது நிரந்தர ஊழியர் பலியான செய்தி வெளியே வந்த பின்னர், நாங்கள் அறிந்து கொள்ள முடிந்த விவரங்களையும் சந்தித்த நிகழ்வுகளையும் இங்கே பதிவு செய்கிறோம்.
13 ஆம் தேதி factory வளாகத்திற்கு செல்லும் முன், இணையதளத்தின் வழியாக, SGH Ltd. Chennai தனது பூனே (மகாராஷ்டிரம்) ஆலை போலவே, இங்கும் தென் கொரிய – போர்சுகீய ஒப்பந்தத்தின் கீழ் இயங்குகிறது என்றும், வாகன உற்பத்திக்கு pressed/stamped sheet metal பாகங்கள் supply செய்யும் நிறுவனம் என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது. இன்று வரை நிர்வாகம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கிடைக்கும் தகவல்கள் அவ்வளவு தான். சம்பவம் ஏற்பட்டு ஒரு நாள் கடந்திருந்த பட்சத்தில், ஒரு ‘கண்ணீர் அஞ்சலி’ banner உம் சில துண்டு அறிக்கைகள் மட்டுமே SGH ‘குடும்பம்’ வாசுதேவனின் இழப்பிற்கு இரங்கல் தெரிவிப்பதாய் அறிவித்து கொண்டிருந்தன. அறிக்கையை படித்து கொண்டு இருந்த எங்களை சந்திக்கத்தான் இரண்டு நிர்வாகிகள் உள்ளிருந்து வெளியே ஓடி வருகின்றனர் என்று நினைக்கையிலேயே, அவசரம் அவசரமாக இருவரும் banner ஐ அவிழ்த்து உள்ளே கொண்டு சென்று விட்டனர். இன்னொரு பக்கம் மூன்று uniform அணிந்த தொழிலாளர்கள் எங்கள் அருகே வந்து தொழிலாளர் செயற்குழு பிரதிநிதிகள் ஆக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். நாங்கள் அங்கு சென்றிருந்த காரணத்தை தீர அலசிவிட்டு, விபத்தின் விளைவுகள் எல்லா தரப்பிலும் சுமூகமாக அணுகப்படும் நிலையில், அதை பற்றி எழுதி யாரும் “ஒரு சின்ன விஷயத்தை பெரிதாக்குவது தேவையே இல்லை” என்று உறுதி கொடுத்து விட்டு சென்றனர். தொழிலாளர் நலத்துறை மற்றும் ஆலைகள் கண்காணிப்பாளர் மேற்கொள்ள வேண்டிய விசாரணை பற்றிய கேள்விகளுக்கும், ‘மூன்றாவது நபர் குறுக்கிடுதலை’ தவிர்க்கும் வகையில் எல்லாம் நடந்து முடிந்திருப்பதாக தெரிவித்து எங்கள் வருகையின் மீது புரியா எரிச்சலையும் வருத்தத்தையுமே காண்பித்து போயினர். போலீசாரை உடனே ஆஜராக்க தெரிந்த நிர்வாகம், அதன் ஊழியர்களுக்கு யாரிடம் பேச அனுமதி உண்டு என கண்காணிக்கும் அளவிற்கு அதிகாரத்துவத்தையும் அனுபவித்து வருகிறது என்று புரிந்தது.
அங்கே தேநீர் கடை நடத்தும் ஒருவரின் வர்ணிப்பு படி, 5 tonne Stamping அச்சின் (Die) இயக்கத்தில் கோளாறு ஏற்பட்ட சமயத்தில், வாசுதேவனின் உடல் நசுக்கப்பட்டது என்று தெரிகின்றது. புட்லூரை சேர்ந்த அவரின் குடும்பத்தாரிடம் பேசும் போது, காவல்துறை விசாரணை, உண்மை அறியும் முயற்சிகள் இவை எல்லாம் வெளிப்படையாக பின்பற்ற படுவதாகவே தோன்றவில்லை. SGH நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்க முன்வராமல் இருப்பது, உயிர் பிரிந்து 4 மணி நேரம் கழித்து கூட குடும்பத்தாருக்கு நேரடியாக தெரியப்படுத்தாமல் இருந்ததின் தொடர்ச்சியாகத்தான் தோன்றுகிறது. இறந்து போன தொழிலாளியின் கைபேசி அழைப்பு பதிவுகளில் அதிகம் அக்கறை செலுத்தி வரும் காவல்துறை, என்ன நோக்கத்தோடு செயல்படுகிறது என்கிற சந்தேகத்தை தான் குடும்பத்தினரால் பகிர்ந்து கொள்ள முடிந்தது. 8 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட திறமைக்காக பாராட்டப்பட்ட வாசுதேவன், இயந்திரத்தை சரிபார்க்கும் போது அஜாக்கிரதையாக நடந்து கொண்டார் என்று கூறி வரும் நிறுவனம், அரசு அதிகாரிகளின் வலியுறுத்தலையும் சாதகமாக்கி கொள்ள ஆர்வம் காட்டும் என்பது யூகிக்க முடியாதது ஒன்றும் அல்ல.
சக ஊழியர் ஒருவர் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த தகவல் (http://m.newindianexpress.com/chennai/323193) குறித்து விசாரிக்கையில், ‘Safety Bar’ பழுதடைந்து இருப்பது போக, சென்சார்களே தொடர்ந்து ‘bypass’ செய்ய பட்டு வருகின்றன என்று சொல்ல படுகிறது. இது பல்வேறு sector ஐ சேர்ந்த நிறைய ஆலைகளில் உற்பத்தி நேரம் ‘வீணாகாமல்’ இருப்பதற்கான யுக்தியாகவே சகஜமாக்கப் பட்டிருப்பதை தொழிலாளர்கள் பொது கவனித்தற்கு கொண்டு வர முயற்சித்து கொண்டு தான் இருக்கின்றனர்.
தீர்வுக்கு ஒன்றும் பதட்ட பட வேண்டியதில்லை – Mileage, spare parts, engine speed, accessories இப்படி வங்கி கடனுக்கு தகுதியான ஒவ்வொரு இன்பத்தையும் தேர்ந்தெடுக்கும் காலத்தில், உயிர்களுக்கான விலையும் ‘rating’ கு வசதியான எண்ணாக மாற்றப்படனும், அவ்வளவு தானே?
This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , . Bookmark the permalink.