“உபரி ஆள் வலிமை ” – ஹயுண்டாய் தொழிற்சாலையில் இயந்திரமயமாக்குதல்

இருங்காட்டுக்கோட்டை ஹயுண்டாய் தொழிற்சாலையில் தானியங்கிகளின் நுழைவு body shop பிரிவில் வேகப்படுத்த பட்டிருப்பதினால் 50 ல் இருந்து 80 தொழிலாளிகள் வரை மிகுதியானவர்களாக கருதப்படுகின்றனர். நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட United Union of Hyundai Employees(UUHE) சங்கத்தின் தலைவரான விநாயகம் பேசுகையில்,  ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் ரோபோக்களோடு 3 புதிதாக அறிமுகமாக உள்ளதை உறுதி படுத்தினார். பாதிப்புக்கு உள்ளாக கூடிய தொழிலாளர்களில் ஒருவர் 80 பேர் வரை வேலை நீக்காமோ இல்லை வேலை மாற்றமோ செய்யப்பட கூடும் என கூறும் நிலையில், சங்கம் என்னவோ ஒரு shift இல் 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தது. 2350 நிரந்தர ஊழியர்களும் 3000+ ஒப்பந்த தொழிலாளர்கள்/ பயிற்சி பெறுபவர்கள் இங்கே வேலை செய்கின்றனர். 
நிர்வாகமிடையே கடிதம் எழுதி “எந்த ஒரு தொழிலாளர் மாற்றமும் எங்களோட கலந்துரையாடி மட்டுமே செய்ய வேண்டும், அதுவரை இயந்திரமயமாக்கலை நிறுத்த வேண்டும்’ என கட்டாயப்படுத்தி உள்ளதாக சங்கம் தெரிவித்தாலும், நிர்வாகம் இன்னும் பதிலளிக்காமலே இருக்கிறது. இருப்பினும், நிரந்தர தொழிலாளர்கள் மத்தியில் எந்த ஆள் குறைப்பும்  நடக்காது என்று விநாயகம் நம்பிக்கையாக உள்ளார். ஒப்பந்த  தொழிலாளர்கள்  மற்றும் பயிற்சி தொழிலாளர்களின் கதியோ கேள்விக்குறியாகவே இருக்கிறது, 2008 இல், 1200 கும் மேற்பட்ட பயிற்சி தொழிலாளர்கள் வேலையில் இருந்து துண்டிக்க பட்டது இந்த ஆலையில் தான். 
இந்த நேரத்தில், 35 தொழிலாளர்களை திறன் மேம்படுத்தல்/புதுப்பித்தல் பயிற்சிக்கு நிர்வாகம் அனுப்பி இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், முக்கிய உற்பத்தி பிரிவுகளில் இருந்து துணை சேவைகளுக்கு தங்களை நகர்த்துவதற்காகவும் , மேலும் ஒப்பந்த முறையை பரவலாக்குவதற்காக வும்  நிர்வாகம் கையாளும் யுக்தியாகவே இதை கண்டு அஞ்சுகின்றனர். பாதிக்கப்படுகின்ற தொழிலாளர் ஒருவர் சொல்லியவாறு ”  எங்கள் வாழ்க்கையில் இருந்து சுவையற்ற கடுமுழைப்பை நீக்கும் தானியங்கலுக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல, ஆனால் இயந்திரமயமாக்குதல் ஆலைகளில் இருந்து தொழிலாளர்களை அகற்றவே குறிவைக்கப்படுகிறது, இது எதிர்க்கப்பட வேண்டியது.” 
தொழிற்சாலைகள் இயந்திரமயமாக்கப்பட்டு தொழிலாளிகள் விலக்கப்படுவது சகஜமாக பல உற்பத்தி தளங்களில் முயற்சிக்கப்பட்டு வருகிறது  –   இதில் பிரதான உதாரணமாக, Foxconn அதனுடைய Apple பாகம்-ஒன்ருகூட்டிர்காக ரோபோட்ஸ் தயாரித்து வருகிறது – http://www.dailytech.com/Foxconn+Billionaire+Hints+at+Robotic+Apple+Factory+Criticizes+Dead+Employees/article36144.htm
This entry was posted in Automobile Industry, Factory Workers, Labour Laws, News, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.