ஹூண்டாய் ஆலையில் விபத்து – காண்டிராக்ட் தொழிலாளி கால் முறிவு

இன்று காலை 09.12.2014 காலை சுமார் 5.17 மணியளவில் ஹூண்டாய் ஆலையில் உள்ள பாடி ஷாப் பிரிவில் உள்ள SIDE LH லைனில் CITIDALE என்ற காண்டிராக்ட் நிறுவனத்தை சேர்ந்த மணி என்ற தொழிலாளியை CITIDALE சூப்பர்வெசைர் அண்ணாமலை என்பவர்  SIDE LH உள்ளே சென்று சுத்தம் செய்யுமாறு ஹூண்டாய் சூப்பர்வைசர் மோகன்ராஜ் கூறிய பணியை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு லைனை சுத்தம் செய்ய 5 காண்டிராக்ட் தொழிலாளர்கள் SIDE LH லைன் உள்ளே சென்றுள்ளனர். ஆனால்  சுத்தம் செய்துகொண்டிருந்தபோதே லைன் இயக்கப்பட்டதால் மணி என்ற தொழிலாளி மட்டும் நகரும் இயந்திரம் ஆன ஷட்டில் உள்ளே தனது இரண்டு கால்களும் சிக்கிக்கொண்ட நிலையில் விபத்துக்குள்ளானார். மற்ற 4 தொழிலாளர்களும் அங்கிறுந்து குதித்து அதிர்ஷ்டவசமாக தப்பினர். கால்கள் சிக்கிக்கொண்ட நிலையில் மணி அவர்கள் சுமார் 20 நிமிடங்கள் இருந்துள்ளார். சிக்கிய நபரை எடுக்க பராமரிப்பு துறையை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கிய இயந்திரத்தை வெளியே நீக்கி 20 நிமிடம் கழித்தே மணியை காப்பாற்றி வெளியே எடுத்து உள்ளனர். ஹூண்டாய் ஆலை தொடர்ந்து தொழிலாளர்களின் நலனில் பாதுகாப்பின்றி செயல்படுகிறார்கள் என்ற நமது குற்றச்சாட்டிற்கு இந்த விபத்து ஓர் உதாரணம். மேலும் விபத்துக்குள்ளான தொழிலாளி மணி அவர்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா எம்ப்ளாய்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் ஸ்ரீதர் நேரில் சென்று  ஆறுதல் கூறினார். மணி அவர்களுக்கு விபத்தில் இடது கால் கீழ் பின் புறம் உள்ள சதைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது என்றும் இடது கால் கீழ் இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன என அரசு ஸ்டான்லி மருத்துவர்கள் கூறினார்கள். விபத்துக்குள்ளான தொழிலாளியை அருகில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையிலோ அல்லது மியாட் மருத்துவமனையிலோ சேர்க்காமல் தொலை தூரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் ஹூண்டாய் நிர்வாகத்தினர். மணி அவர்களின் குடும்பத்தார் நம்மிடையே பேசும் போது மணி அவர்களுக்கு காயம் பட்ட இடத்தில் இருந்து இரத்தம் காலை முதலே வடிந்து கொண்டிருந்த்ததாகவும் அது பலமுறை கட்டு போட்டதால் மதியம் தான் நின்றது என்று மிகவும் வேதனையோடும் கண்ணிரோடும் கூறினர்
DSCN3924
This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , . Bookmark the permalink.