September 2nd National Strike: கடும் அடக்குமுறையிலும் மாருதி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – மாநேசரில் 80சத தொழிற்சாலைகள் முடக்கம்

தொழிலாளர் சட்டசீர்திருத்தங்களை எதிர்த்தும், தொழிலாளர்கள் மேல் அவிழ்க்கப்படும் அடக்குமுறைகளை எதிர்த்தும், செப்டம்பர் 2 அன்று 12 மத்திய தொழிற்சங்கங்கள் சேர்ந்து தேசிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அவை,  INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, AICCTU, LPF, WPTUC, MLF, and LLF, BMS ஆகும். இதில் ஆர்எஸ்எஸ்சின் தொழிற்சங்கம் பிஎம்எஸ் வேலை நிறுத்தத்தில் இருந்து வாபஸ் செய்தது. ஆனாலும் மற்ற 11 மத்திய தொழிற்சங்கங்களின் தலைமையில் வேலை நிறுத்த ஆயத்தங்கள் நடைபெற்றன. வேலை நிறுத்தத்தை வெற்றிபெற செய்வதற்கு, மத்திய தொழிற்சங்கங்கள் மட்டுமல்;லாமல், இதர தொழிற்சங்கங்கள், அமைப்புகள் வேலை செய்தன. தொழிலாளர் ஒற்றுமை மையம்(Workers Solidarity Center) குர்காவ், மாநேசர், தாருஹேரா பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் ஆகஸ்ட் 20 முதல் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதன் விளைவாக, ஆட்டோமொபைல், கார்மெண்ட் மற்றும் பார்மா உட்பட 4000 தொழிற்சாலைகளில், 10 லட்ச தொழிலாளர்கள் செப்டம்பர் 2 அன்று வேலை நிறுத்தம் செய்தனர்.
1Sept WSC Rally (2)
இப்பகுதியில் உள்ள தொழிற்துறை தொழிலாளர் வர்க்கத்தின் மனதில் உள்ள அதிருப்தியை தொழிலாளர் ஒற்றுமை மையம் கூர்ந்து கவனித்து வந்துள்ளது. அதன பலனாக, ஒரு புலம் பெயர் தொழிலாளரின் வாழ்வினை, ‘விஸ்வகர்மா’ என்ற தலைப்பில் தெரு நாடகமாக வடிவமைத்து நான்கு நாட்களாக நடத்தியது. வேலை நிறுத்தத்திற்கு முதல் நாள் செப்டம்பர் 1 அன்று இப்பகுதியில் பேரணி நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இம்முயற்சிகள் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கு பெறுவதற்கு முன்மாதிரியாக இருந்தன.

campaign Hero Honda chowk

செப்டம்பர் 2 அன்று பிரச்சாரம் காலை 4:30 மணியிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. அதன் பலனாக, மாருதி சுசுகி, ஹோண்டா, HMSI, FCC ரிக்கோ,JNS உட்பட மாநேசர் தொழிற் டவுன்ஷிப்பில் 80% தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் சக்தியை கண்டு சில தொழிற்சாலைகள் தாங்களாகவே மூடின. பாவால் இண்டஸ்டிரியல் டவுன்ஷிப்பில் கான்சாய் நெரோலக் பெயிண்ட்ஸ், அசாஹி கிளாஸ், எக்சைட் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலையில் குவிந்தனர். உத்யோக் விஹார் பகுதியில் உள்ள தொழிற்சங்கங்கள் இயங்காத கார்மென்ட் தொழிற்சாலைகளில், வேலை நிறுத்தம் ஆங்காங்கே நடைபெற்றது. கௌரவ், ரிச்சா, பாரத், மாடெலமா எக்ஸ்போர்ட்ஸ் தொழிற்சாலைகள் மூடின. மற்ற தொழிற்சாலைகளில் சிறிதளவு உற்பத்தி நடைபெற்றது. அங்கேயும் பல தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.

பல இடங்களில், காவல்-நிர்வாகம்-ஒப்பந்ததாரர் குழுக்கள் தொழிலாளர்களை வேலைக்கு செல்லுமாறு நிர்ப்பந்தித்தனர். அவர்கள் தொழிலாளர்களுடனும், தொழிலாளர் ஒற்றுமை மையத்தின் ஆர்வலர்களுடனும் சச்சரவில் ஈடுபட்டனர். குறிப்பாக மாநேசரில் உள்ள இந்தோ தொழிற்சாலையில், மூன்று கம்பெனி பஸ்களில் வந்த தொழிலாளர்கள், பிரச்சாரத்தை பார்த்து தொழிற்சாலைக்குள் செல்ல மறுத்தனர். காவல்-ஒப்பந்ததாரர் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர்.

2012ல் நடந்த மாருதி மாநேசர் கலவரத்திற்கு பின்னர், அதிகாரவர்க்கம் – காவல் துறையின் அடக்குமுறை அதிகமாகியுள்ள நிலையில், எந்த ஒரு போராட்டத்திற்கோ பிரச்சாரத்திற்கோ அனுமதி  வழங்கப்படாத நிலையில், இப்பகுதியில் இந்த வேலை நிறுத்தம் ஒரு மாபெரும் வெற்றியே. இதன் மூலம் குர்காவ்-மாநேசர்-தாருஹேரா பகுதிகளில், தொழிலாளர் ஒற்றுமை ஏற்படும் சாத்தியம் உருவாகியுள்ளது. மத்திய தொழிற்சங்கங்களின் பெயரளவு வேலை நிறுத்தம், அதிகாரத்துவவாதத்தை தாண்டி நிரந்தர-ஒப்பந்த-டிரெயினி தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் சாத்தியத்தையும், இந்த வேலை நிறுத்தம் உருவாக்கியுள்ளது. மேலும் பெண் தொழிலாளர்கள், நிரந்தர-ஒப்பந்த-டிரெயினி தொழிலாளர்கள் தங்கள் குரலை உயர்த்திடும் தருணத்தை பலப்படுத்தியுள்ளது.

This entry was posted in Automobile Industry, Factory Workers, Garment Industry, labour reforms, Migrant Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.