பரிதாபாத் மஸ்தூர் சமாச்சார் ஆகஸ்ட் இதழ் – தொழிலாளர்களின் குரல்கள்

பரிதாபாத் மஸ்தூர் சமாச்சார் மாதப்பத்திரிக்கை இந்தியில் வெளியிடப்படுகிறது. 1982ல் தொடங்கப்பட்டது. தில்லி பரிதாபாதில், முக்கால்வாசி தொழிற்சார்ந்த தொழிலாளர்கள் (தொழிலாளர் சட்டங்களின்) பார்வைக்கு வராதத் தொழிலாளர்கள் ஆவர். 85 சதத் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்படும் தற்காலிகத் தொழிலாளர்கள். இங்கு தற்போது மாதம் ரூ3914 ஆக குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுவும் 80 சதத் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 6 மாதங்கள் வரை சம்பள பாக்கி உண்டு. இங்கு மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில், 15 வருடங்கள் கழித்தும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் தரப்படுவதில்லை.

ஒவ்வொரு இதழிலும் பரிதாபாத் மஸ்தூர் சமாச்சார் 50-60 தொழிலாளர்களின் குரல்களை பதிவு செய்கிறது. 1000 பத்திரிக்கைகளிலிருந்து ஆரம்பித்து தற்போது 7000 பத்திரிக்கைகள் மாதம் விநியோகிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் அதிகமாக உள்ள பரிதாபாத் மற்றும் சுற்று  பகுதிகளில் ரோட்டோரமாக ஷிஃப்ட் மாறும் போது சமாச்சார் தொழிலாளர் தொண்டர்கள் தொழிலாளர்களுக்கு பத்திரிக்கையை இலவசமாக விநியோகிக்கின்றனர்.

தொழிலாளர் கூடம் இந்த பதிவுகளை மாதம் ஒரு முறை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடும்.

(நிர்வாகங்கள்) தொழிலாளர் சட்டங்களை மீறுவது சர்வ சாதாரணமாகி விட்டது. சட்டவிதிகளின் படி நடக்கும் தொழிற்சாலைகள் அபூர்வமாகி விட்டன. இன்றைய சட்டங்கள் வேலை செய்வதில்லை, அவைகள் தேவையற்றவைகளாகி விட்டன என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இது வழக்கமாக உள்ளதா அல்லது வழக்கத்திற்கு மாறாக புதிய நடைமுறையா? இந்த நடைமுறை மூலதனத்திற்கும் தொழிலாளருக்கும் உள்ள பாரம்பரிய சமூக உறவை மாற்றுகின்றதா? மூலதனத்தின் இன்றைய பரிமாணத்தில் எழும் சமூக உறவுகள் என்ன? இதைக் குறித்து உலகின் 700 கோடி மக்களும் சிந்திக்க வேண்டாமா? இந்த உரையாடலில் தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பங்கு பெற வேண்டும். இந்த உரையாடலுக்கு பயன் சேர்ப்பதற்கு மஸ்தூர் சமாச்சர் (தில்லி-மாநேசர்-பரிதாபாதில் உள்ள) தொழில் சார்ந்த தொழிலாளர்களின் பேட்டிகளை தொகுத்துள்ளது.

FCC தொழிலாளர் : மாநேசரில் உள்ள FCC  என்ற தொழிற்சாலையில் நான் வேலை செய்கிறேன். முன்னர், இது FCC ரிக்கோ என்று அழைக்கப்பட்டது. கடந்த ஜனவரியில் ரிக்கோ என்ற பெயரை நீக்கிவிட்டனர். முன்னர், 3 வருடத்திற்கு மேல் வேலை செய்த 10-12 ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்தார்கள். 2009ல், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்க,சில காண்ட்ராக்டர்கள்(ஒப்பந்ததாரர்கள்) ஆளுக்கு 1000ரூபாய் எங்களிடமிருந்து வாங்கினார்கள். அப்போது ஆண்டுக்கு 25 தொழிலாளர்களை நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், கடந்த 6 வருடங்களில், 50 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரத் தொழிலாளராகி உள்ளனர். தொழற்சாலையில் இப்போது 300 நிரந்தரத் தொழிலாளர்களும், 800 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். பல ஒப்பந்தத் தொழிலாளர்கள் 8-10 வருடமாக வேலை செய்கின்றனர். முன்னர் ஒவ்வொரு ஜனவரியும் ஊதிய உயர்வு தந்தனர். கடந்த 4 வருடமாக ஒப்பந்த தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்படவில்லை. ஆனால் நிரந்தரத் தொழிலாளருக்கு 12000ரூபாய் ஊதிய உயர்வு தந்துள்ளனர்.
தற்காலிகத் தொழிலாளர்களுக்கு முன்னர் 2 கேட் பாஸ்கள் குடுத்தார்கள். கடந்த ஒன்ரறை வருடமாக அதுவும் இல்லை. தற்காலிக தொழிலாளர்களுக்கு கடினமான வேலைகளையே தருகின்றனர். 8 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு ஊதியம் 5813 ரூபாய் கொடுக்கின்றனர். ஓவர்டைம் 50 மணியிலிருந்து 150 மணி வரை இருக்கும். அப்போது இரண்டு மடங்கு ஊதியம் கிடைக்கும். உற்பத்தி ஊக்கத் தொகை 5000-5500ரூபாய், அட்டெண்டன்ஸ் ஊக்கத் தொகை 500ரூபாய், ஷிஃப்ட் ஊக்கத் தொகை ஒரு நாளைக்கு 20-25 ரூபாய். ஹவுசிங் ஊக்கத் தொகை பழைய தொழிலாளர்களுக்கு 450ரூபாய், புதிய தொழிலாளர்களுக்கு 650ரூபாய். எப்படியாவது சமாளிக்க வேண்டியுள்ளது.

பென்னெக்ஸ் வெளிநாட்டுத் தொழிலாளர்: இந்த தொழிற்சாலை தில்லியில் உள்ளது. 500 சாம்பிளிங் டெய்லர்கள் இங்கு வேலை செய்கின்றனர். கடந்த 10 வருடங்களாக அனைத்து தொழிலாளர்களிடமிருந்தும் இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் பிடிக்கப்படுகிறது. ஆனால் 14 தொழிலாளர்களிடம் மட்டுமே இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் ஆதாரங்கள் உள்ளன. மற்றவர்களுக்கு இ.எஸ்.ஐ கார்ட் கொடுக்கப் படவில்லை. பி.எஃப் டெபாசிட் செய்யப் படுவதில்லை. ஜுன் 12 அன்று கிரிநகரில் உள்ள ஒரு சங்கத் தலைவரிடம் டெய்லர்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூறியுள்ளனர். அவர், தொழிற்துறை கண்காணிப்பாளரிடம் கம்பெளெயின்ட் செய்துள்ளார். அதன்படி கண்காணிப்பாளர்கள் 18 ஜுன் அன்று தொழிற்சாலையை சோதனையிட சென்றனர். அது குறித்து நிர்வாகத்திற்கு முன்னரே போன் செய்துள்ளனர். நிர்வாகம் 450 தொழிலாளர்களை பின் கேட் வழியாக வெளியேற்றி விட்டது. இன்ஸ்பெக்டர் சென்ற போது 50 தொழிலாளர்களே இருந்தனர். சங்கத் தலைவர் விடுவதாக இல்லை. இன்னொரு ரெய்டுக்காக ஏற்பாடு செய்யப் போகிறார்.

பெர்ஃபெக்ட் மெக்கானிக்கல் இன்டஸ்டிரீஸ் தொழிலாளர்: இந்த தொழிற்சாலை பரிதாபாதில் உள்ளது. இங்கு 150 நிரந்தரத் தொழிலாளர்கள், 70 ஒப்பந்தத் தொழிலாளர்கள், மற்றும் 42 காண்ட்ராக்டர்கள் கீழே 200 தற்காலிகத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். 12 கார் டைப்புகளுக்கு பாடிகள் தயாரிக்கின்றோம். மற்றும் ஆர்மி பஸ்கள், புல்லட் தாக்காத கார்கள், பணம் கொண்டு செல்லும் ஆர்மர் வேன்கள் ஆகிய பாடிகளையும் தயாரிக்கிறோம். ரயில்களுக்கும் சில உற்பத்திகள் செய்கின்றோம். சில நாட்கள் காலையில் 9 மணியிலிருந்து இரவு 9:30 வரைக்கும் ஒரு ஷிஃப்ட், அப்படியே இரவிலிருந்து அடுத்து 9 மணிவரை, அங்கிருந்த அடுத்த 12 மணிநேர ஷிஃப்ட் என 36 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்திருக்கிறோம். ஒரு மாதத்தில் 80லிருந்து 150 மணிநேரம் ஓவர்டைம் வேலை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் நாரமல் ஊதியமே தருகின்றனர் ஓவர்டைம் இரண்டு ஊதியக் கணக்கு இல்லை. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டும் போனஸ் உண்டு. 8-9 வருடத்திற்கு முன், ஒரு எலெக்ட்ரீஷன் கிரேனை ரிப்பேர் செய்யும் போது ஷாக் அடித்து இறந்து விட்டார். 1 வாரம் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்த பின்னர், அவருடைய குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கொடுத்தார்கள்.

ரூப் ஆட்டோ தொழிலாளர்: எங்களுடைய தொழிற்சாலை மாநேசரில் உள்ளது. 25 நிரந்தரத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். 3 காண்ட்ராக்டர்களின் கீழ் 400 தற்காலிகத் தொழிலாளர்கள வேலை செய்கின்றனர். வாகனங்களுக்கு ஸ்டியரிங் ஷாப்ட் தயாரிக்கின்றோம். 150 ஸ்டாப்கள் உள்ளனர். மொத்தம் 2 ஷிஃப்ட். காலையில் 6:30யில் இருந்து மாலை 5மணி வரை உள்ள மார்னிங் ஷிஃப்ட் இரவு 9-10 மணிவரை நீடிக்கும். ஈவினிங் ஷிஃப்ட் மாலை 6 மணியில் இருந்து காலை 6:30 வரை. ஒவர்டைம் ஊதியம் மணிக்கு 35-36 ரூபாய் கிடைக்கும். மாதம் 30 நாளும் வேலை செய்கிறோம். ஞாயிறு அன்று 10 மணி நேர வேலைக்கு 460ரூபாய் கொடுப்பார்கள். தொழிற்சாலையில் நிறைய விபத்துகள் நடக்கின்றன.

தில்லி மெட்ரோ தொழிலாளர்: தில்லியில் உள்ள சரிதா விஹார் மேம்பாலத்திற்கு அருகே தில்லி மெட்ரோ சிமென்ட் கேசிங் வேலை நடக்கிறது. இதில் 150 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அங்கு வேலை செய்யும் காவல் தொழிலாளர்கள் தினமும் 2 ஷிஃப்டில் 12 மணி நேரம் வேலை செய்கின்றனர். வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கிடையாது. மாதம் 8000ரூபாய் ஊதியம் அதுவும் நேரத்தில் தருவதில்லை. மே மாத ஊதியம் கொடுக்காததால், ஜுன் 28 அன்று தொழிலாளர்கள் குரல் எழுப்பினர். அதற்கு பின்னர் ஜுன் 30 அன்று மே மாத ஊதியம் கொடுத்தார்கள்.

பனேஷியா பயோடெக் தொழிலாளர்: தில்லியில் உள்ள இந்த தொழிற்சாலையில், போலியோ சொட்டு மருந்து மற்றும் குழந்தைகளுக்கான 5 மருந்துகளுடன் உள்ள சிரிஞ்சுகள் தயாரிக்கின்றோம். இவற்றை உலக மருத்துவ கழகம்(WHO) வாங்குகிறது. இங்கு உள்ள பழைய மெஷின்களை கண்டு WHO ஆட்சேபித்தது. திடீரென்று ஏப்ரல் மாதத்தில் இந்த தொழிற்சாலையை மூடுவதாகவும், இன்னொரு தொழிற்சாலைக்கு அனைவரையும் சேர நிர்வாகம் கூறியது. அவரவர் வேலை அனுபவத்தின் அடிப்படையில் 1000ரூ-3000ரூ ஊதிய உயர்வும் கொடுப்பதாகக் கூறியது. 15 தொழிலாளர்கள் அங்கு சென்றனர். மற்றவர்கள் நிவாரணம் கேட்டனர். அங்கு 15 வருடம் வேலை செய்தவர்களுக்கு 21 மாத ஊதியம் நிவாரணமாக கொடுக்கப் பட்டது.

மெஜஸ்டிக் தொழிலாளர்: எங்களுடைய தொழிற்சாலை பரிதாபாதில் உள்ளது. இங்கு வேலை செய்யும் 20 நிரந்தரத் தொழிலாளர்கள், ஒரு காண்டிராக்டர் கீழ் வேலை செய்யும் 40 தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் பெறுகின்றனர். 10-12 காண்டிராக்டர்கள் கீழ் வேலை செய்யும் 200 தொழிலாளர்களுக்கு எந்த பதிவும் இல்லை. இங்கு ஜே.சி.பி களுக்கு சீட்டுகள் தயாரிக்கின்றனர். காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை வேலை. ஓவர்டைம் வேலைக்கு சிங்கிள் ரேட் கொடுக்கின்றனர்.

எம்டெக் தொழிலாளர்: தொழிற்சாலை மாநேசரில் உள்ளது. மே மாதத்திற்கான ஓவர்டைம் பேமன்ட் ஜுலை 1 வரை கொடுக்கப்படவில்லை. காலை 9 மணிக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை கேட்டில் உட்கார்ந்து உள்ளே செல்ல மறுத்தனர். 10 மணிக்கு நிர்வாகப் பிரதிநிதி வந்து 2மணிக்கு பேமன்ட் செய்வதாக வாக்களித்த பின் அனைவரும் உள்ளே சென்றனர்.

பேச்ட்யன் எலெக்ட்ரானிக் தொழிலாளர்: 12000-15000 வரை ஊதியம் கொடுப்பதாக காட்டுகின்றனர் ஆனால் கொடுப்பதோ 5000-7000 வரை தான். கம்பெனியில் இரண்டு ரெஜிஸ்டர்கள் உள்ளன. இங்கிருந்து வெளியே சென்ற 10 தொழிலாளர்கள் லேபர் இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டனர். ஆனால் இன்ஸ்பெக்டர்கள் வரும் நேரம் நிர்வாகத்திற்கு தெரிந்தே உள்ளது. அப்போது ஜெனரேட்டர் அறையில் தொழிலாளர்களை மறைத்து வைக்கின்றனர். மே மாதம் இன்ஸ்பெக்டர் வந்த போது 35 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளனர் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. நிர்வாகத்திற்கும் அதிகாரிகளுக்கும் புரிதல் உள்ளது. அவர்கள் நன்றாகவே ஒருவருடன் ஒருவராக ஒத்து போகிறார்கள்.

ஐஐ ஆட்டேடெக் தொழிலாளர்: எங்கள் தொழிற்சாலை மாநேசரில் உள்ளது. தினமும் 2 ஷிஃப்டில் 12 மணி நேர வேலை. ஞாயிற்றுகிழமையிலும் வேலை உண்டு. வருடத்திற்கு 4 நாள் மட்டுமே விடுமுறை. முன்னர் 36 மணிநேரம் தொடர்ந்து வேலை வாங்கினார்கள். ஆனால் இதனால் ஒரு தொழிலாளர் இறந்த பின்னர் 24 மணி நேர ஷிஃப்ட்களாக குறைத்துள்ளனர். ஆனால் 12 மணிக்கு குறைவாக வேலை நேரம் கிடையாது. இங்கு மொத்தம் 2000 தொழிலாளர்கள் உள்ளனர். 100-150 தொழிலாளர்கள் மட்டுமே மஸ்டர் ரோலில் பதிவு செய்கின்றனர். 3 பெரிய காணட்ராக்ட் கம்பெனிகள் தொழிலாளர்களை சப்ளை செய்கின்றனர். அவர்களின் கீழ் 7-8 சிறிய காண்ட்ராக்டர்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஊதிய அட்டைக்கும், தொழிலாளர் வாங்கும் ஊதியத்திற்கும் 500-700 ரூபாய் வித்தியாசம் உள்ளது.

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, தமிழ் and tagged . Bookmark the permalink.