மாருதி சூசுகி தொழிலாளர் ஆதரவு குழு, சென்னை: மாருதி சூசுகி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்

மாருதி சூசுகி தொழிலாளர் ஆதரவு குழு, சென்னையின் சார்பாக அறிக்கை

மாருதி சூசுகி நிறுவன நிரந்தர தொழிலாளர்களுக்கு நேற்று ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாருதி சூசுகி (மனேசார் பிளாண்ட்) 3000 ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கும் ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டி இன்று காலை முதல் வேலை நிறுத்த செய்து வருகின்றனர்.

அமைதியான முறையில் தங்கள் ஊதிய உயர்வு கோரிக்கைக்காக போராடும் ஒப்பந்த தொழிலாளர்களை ஹரியானா காவல்துறையும், அடியாட்களும் கடுமையாக தாக்கியுள்ளனர். நூற்றுக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது.

உழைக்கும் மக்களே, மாருதி சூசுகி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவு தாருங்கள் !

மாருதி சூசுகி நிர்வாகமே, ஹரியானா அரசே,

தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை உடனே வாபஸ் பெறு!

ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்று! 2012இல் அறிவித்தது போல் ஒப்பந்த முறையை ஒழித்து தொழிலாளர்களை நிரந்தரமாக்க சட்டப்படி நடவடிக்கைகள் எடு!

போராடும் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Press Releases, Workers Struggles, தமிழ் and tagged . Bookmark the permalink.