நீதிக்கான போராட்டத்தை வலுப்படுத்த கோரிக்கை – மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கம் (தற்காலிக குழு)

English Appeal available here
தோழர்களே,
ஹரியானா மாநேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில், 18 ஜுலை 2012 முதல் நிர்வாகம்-காவல்-அரசு நிர்வாகிகள்-அரசியல்வாதிகள் தொழிலாளர்களின் மேல் அடக்குமுறைகளை அதிகமாக ஏவி வருகின்றனர். எங்களுடைய 215 தொழிலாளர்கள் மேல் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. 147 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 546 நிரந்தரத் தொழிலாளர்கள் உட்பட 2300 தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்போதும் 35 தொழிலாளர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. அவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். தொழிலாளர்கள் மேல் சுமக்கப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வரவுள்ளன. நிர்வாகமும், மாநில அரசும் இந்த வழக்கில் தொழிலாளர்களுக்கு கடும் தண்டனை வழங்க தயார் செய்து வருகின்றனர். இதன் மூலம், தொழிலாளர் வர்க்கத்திற்கு பாடம் புகட்ட நினைக்கின்றனர்.

தேசிய-சர்வதேச முதலீட்டார்களின் நலன்களை காப்போம் என்று தங்களுடைய விசுவாசத்தை காட்டத் தயாராக உள்ளது அரசு. முதலீடுகளுக்கு இடையாக வரும் எந்த இடையூறுகளையும் கலைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இந்த ‘வளர்ச்சிக்காக’ தொழிலாளர்களை பலி வாங்கவும் தயாராக உள்ளது. மாருதி தொழிலாளர்களின் மேல் அவிழக்கப்படும் அடக்குமுறையும் சரி தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களும் சரி, இந்த நோக்கத்தின வெளிப்பாடுகள் ஆகும். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், கைது செய்யபட்டிருக்கும் மாருதி தொழிலாளர்கள், முதலீட்டாளர் வர்க்கத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையே நடக்கும் போரின் அரசியல் கைதிகள் ஆவர். ஓரியன்ட் கிராஃப்ட் மற்றும் கிராசியானோ தொழிலாளர்களின் நிலையும் அதே மாதிரி தான் இன்றும் சிறையில் வாடுகின்றனர். அதனால் தான் மாருதி தொழிலாளர்களுக்கு ஜாமீன் கொடுத்தால், அன்னிய முதலீடு பாதிக்கப்படும் என்று சன்டிகர்ஹ் உயர்நீதி மன்றத்தின் நீதிபதி கூறுகிறார். இந்நிலையில், தொழிலாளர் வர்க்க அமைப்புகளும், போராளிகளும் ஒன்று சேர வேண்டியுள்ளது.

குர்காவ் விசாரணை மன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் தருவாயில், நாங்கள் நாடு தோறும் நீதிக்கான போராட்டத்தை எடுத்துச் செல்கிறோம். இதன் மூலம் அரசிற்கும் நிர்வாகத்திற்கும் உள்ள பிணைப்பை நாங்கள் அம்பலப் படுத்துகிறோம். உங்கள் ஆதரவோடு இவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோம். அடுத்த கட்டமாக நடக்கும் இந்த போராட்டத்தில் உங்களை பங்கு பெற அழைக்கிறோம். இது குறித்து உங்கள் நகரங்களிலும் பகுதிகளிலும் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த கோருகிறோம். இதில் நாங்களும் வந்து பங்கேற்க தயாராக உள்ளோம்.

குர்காவில் 27 நவம்பர் அன்று தொழிலாளர்கள் நீதி மாநாடு நடக்கவுள்ளது. இதில் தாங்கள் கலந்து கொண்டு தொழிலாளர் போராடடங்களை பலப்படுத்த கோருகிறோம்.

புரட்சிகர வாழ்த்துகளுடன்,
மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கம் (தற்காலிக குழு)
தொடர்புக்கு : ராஜ்பால் – 9466167876, ராம்நிவாஸ் – 8901127876

APPEAL to Strengthen Campaign for JUSTICE
by MARUTI SUZUKI WORKERS UNION (Provisional Working Committee)

Dear Comrade,

As you know, since 18th July 2012 in the Maruti factory in Manesar-Haryana-India, as per the nexus of management-police-administration-government, we have had to face the heavy hand of injustice and repression, which continues to this day. 215 of our fellow workers have baseless fabricated cases on them, 147 workers have been jailed, 2300 workers have had their jobs terminated including 546 permanent workers. Today, more than three years later, 35 workers continue to languish in jail without bail. The last stages of debate on the trial is approaching. The company management and state are in full preparation to set an example by handing the harshest sentence on workers, so that workers fear to raise their voices in struggle.

The state is keen to show its commitment to the interests of national-international capital, by clearing all ‘bottlenecks’ to the logic of their business, by crushing all resistance put up by workers who make and suffer this senseless model of development. The pro-corporate changes in labour laws to the repression of Maruti workers are sides of the same coin. So the Maruti Suzuki workers who languish in jail for more than three years without any semblance of concrete proof of their ‘guilt’ are political prisoners in the conflict between the class of owners and the working class. This is the reason that workers of Orient Craft and Graziano have to be behind bars for years on end. And this is the reason that the Judge in the Chandigarh High Court has to say that ‘the bail of Maruti workers will affect foreign investment’. In such a scenario, all pro-worker forces and individuals will again have to come together against this conspiracy of power.

As the last debate in the Trial Court in Gurgaon approaches, we have decided to undertake ‘Campaign for Justice’ in various parts of the country to expose this unholy nexus of the company management and the State. It is with your solidarity till date that our struggle has seen this long mile. It is our appeal that you again participate and take this campaign up in whatever capacities and ways possible. It is our appeal that you organize programs in your own cities and localities with various pro-worker and pro-people forces, in which we would also come and participate.

Towards the end of this campaign, on 27th November 2015, come and attend the ‘Workers Justice Convention’ in Gurgaon and make the program successful and a marker of continued and strengthening united resolve of forces struggling against state-corporate nexus.

With Revolutionary Greetings,
Provisional Working Committee
Maruti Suzuki Workers Union

[Rajpal- 9466167876, Ramniwas-8901127876]

This entry was posted in Automobile Industry, தமிழ் and tagged , . Bookmark the permalink.