தொழிலாளர்கள் போராட்ட நிகழ்வுகள் – அக்டோபர் 30 – நவம்பர் 5

பேக்டரி – மாருதி தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்த ஆவணப்படம் திரையிடல்
நோக்கியா தொழிற்சாலை மூடி ஒரு வருடம் – தொழிலாளர்களின் சந்திப்பு
மனிதக் கழிவு அகற்றும் தொழிலை ஒழிப்பது குறித்து அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் விவாதக் கூட்டம்
பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு ஒப்பந்த செவிலியர்கள் நலச் சங்கம் போராட்டம்

பேக்டரி – மாருதி தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்த ஆவணப்படம் திரையிடல்
அக்டோபர் 31 அன்று சென்னை மார்க்ஸ் நூலகத்தில் மாருதி தொழிற்சாலைகளின் பிரச்சனைகள் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. மாருதி தொழிலாளர்களுக்கான சென்னை ஆதரவு குழுவின் சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.maruti_strike

மாருதியில் 2012ல் நடந்த தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது ஒரு மேலாளர் இறந்தார். இவரைக் கொலை செய்ததாக 147 தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் இன்னும் 30 பேர் ஜாமின் இல்லாமல் சிறையில் உள்ளனர். மற்றவரகளுக்கு இரண்டு வருடங்கள் கழித்தே ஜாமின் கிடைத்தது. சுமார் 2500 தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டத்தை பேக்டரி படம் ஆவணப்படுத்துகிறது.

நிகழ்ச்சியில் நடந்த விவாதத்தில் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களின் நிலைமைகளை குறித்து விவாதிக்கப்பட்டது. ஊழல் நிர்வாகங்களுடன் தங்களுடைய போராட்டங்களை குறித்து புதிய ஜனநாயக தொழிலாளர் முண்ணனியின் சங்கத் தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர். முதலாளி;த்துவ-அரசு வன்முறை கட்டமைப்பிலிருந்து தொழிலாளர் நலன்களை எவ்வாறு காப்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
மாருதி தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு வேண்டிய நிதிகளை திரட்டுவதற்கு சென்னை ஆதரவுக் குழு கேட்டுக் கொண்டது. மாருதி தொழிலாளர்களின் வழக்குகள் முடியும் நிலையில் நாடு முழுவதும் பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.

நோக்கியா தொழிற்சாலை மூடி ஒரு வருடம் – தொழிலாளர்களின் சந்திப்பு
நவம்பர் 1 அன்று நோக்கியா தொழிற்சாலை மூடி ஒரு வருடம் ஆகிறது. நோக்கியா மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் மூடியதனால், 22000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் நிலைமை குறித்து விளக்கவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி விவாதிக்கவும், சி;ஜடியு தொழிற்சங்கம், நவம்பர் 1 அன்று தொழிலாளர் கூட்டத்தை நடத்தியது. இதில் நோக்கியா, பாக்ஸ்கான், சன்மீனா மற்றும் ஹண்டாய் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Nokia Workers Meet after one year of plant shutdownநோக்கியாவிலிருந்து வெளியேற்றபட்ட தொழிலாளர்கள் தங்களுடைய இன்றைய வேலை நிலைமைகள், வாழ்வு நிலைமைகளைப் பற்றி பகிர்ந்து கொண்டனர். நோக்கியா தொழிற்சாலையில் செய்த வேலை அனுபவம் எங்கும் தேவைப்படவில்லை என்று நோக்கியா தொழிலாளர்கள் கூறினர். குறைந்த ஊதியம், நெடு நேர லேலை, கட்டாய ஓவர்டைம், மோசமான பணிநிலைமைகள் குறித்து அவர்கள் பேசினர். உதாரணமாக, நோக்கியாவில் வேலை செய்த தொழிலாளர் இன்று ஃபிளிப்கார்டில் டெலிவரி ஆளாக வேலை செய்கிறார். அவருக்கு மாத ஊதியம் 7000ரூபாய். அவருடைய சொந்த பைக்கை அவர் உபயோகப் படுத்த வேண்டும். அதற்கு கிமீக்கு ரூ3.50 என்ற அலவன்ஸ்.

ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டிஎம்சி நிறுவனத்தில் 5000 தொழிலாளர்களுக்கு 2 டாய்லட்டுகள் தான் உள்ளன என இன்னொரு தொழிலாளர் பகிர்ந்து கொண்டார். அங்கு டீ சாப்பிடுவதற்கு 10 நிமிட இடைவெளி தான். அதற்கும் நடக்க வேண்டும். ஊதியம் 4500 ரூபாய். நோக்கியாவில் இந்த தொழிலாளர்கள் 16000 ரூபாய் வாங்கி; கொண்டிருந்தனர். இது குறித்து பேசிய ஆய்வாளர் மதுமிதா, தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் நலனிற்காக நோக்கியா தனது வருமானத்தில் 1.54 சதமே செலவிட்டது எனக் குறிப்பிட்டார்.

நோக்கியாவில் வேலை செய்ததற்காக தங்களை வேலைக்கு சேர்ப்பதில்லை என பல தொழிலாளர்கள் கூறினர். நோக்கியாவில் இருந்த பணிநிலைமைகள் அதற்கான போராட்டங்களை அவர்கள் காரணம் காட்டுகின்றனர் எனத் தொழிலாளர்கள் தங்கள் மீது உளவியில்ரீதியான போராட்டத்தை முதலாளித்துவம் நடத்துவதாக குறிப்பிட்டனர். பலத் தொழிலாளர்கள் இன்னும் 30 வயது தாண்டாத நிலையில் தங்களுடைய வயதைக் காரணம் காட்டி வேலை கொடுக்க மறுப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நோக்கியா தொழிற்சாலை மூடுவதற்கு காரணமாக அரசுடன் உள்ள வரி பிரச்சனை என்று கூறப்படுகிறது. அது வரை அரசும் நிர்வாகமும் சுமூகமாக உறவில் இருந்த போது ஏன் இந்த பிரச்சனையை அவர்கள் சுமூகமாக தீர்க்கவில்லை என்று தொழிலாளர்கள் கேள்வி எழுப்பிகின்றனர். அதற்கு ஒரு காரணம், நோக்கியாவை வாங்கிய மைக்ரோசாப்ட், வியட்நாமில் உற்பத்தியை பெருக்க தீவிரம் காட்டியாது தான். தற்போது பாக்ஸ்கான் இந்தியாவில், 1.3 லட்ச வேலைகளை உருவாக்குவதாகக் கூறியுள்ளது. ஆனால் ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கானால் 1300 வேலைகளை கூட தக்கவைக்க முயற்சிக்க வில்லை.

இன்றைய முதலாளித்துவ நிலைமைகளில் தொழிற்சாலைகளை மூடி இன்னொரு இடத்தில் எளிதாக திறக்கவும் முடிகிறது. இதற்கு தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்தி அரசுகள் துணை போகின்றன. நோக்கியா சென்று விட்டதனால் நோக்கியா தொழிலாளர்களை சமூகம் மறந்து விடக் கூடாது என சிஐடியு காஞ்சிபுர மாநிலத் தலைவர் தோழர் கண்ணன் கூறினார். அரசின் பொருளாதாரக் கொள்கைகளே தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு அடிப்படையான காரணம் என்பதை அவர் சுட்டிகாட்டினார். பாக்ஸ்கான் இன்று நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு சலுகைகளை கேட்டுள்ளது. மேலும், இங்கு வேலை செய்த தொழிலாளர்களை மீண்டும் எடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளது. இது ஏற்கனவே போடப்பட்;ட ஒப்பந்தத்திற்கு புறம்பானது எள அவர் குறிப்பிட்டார். அரசும் முதலாளிகளும் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்க விட மாட்டோம் என்று தொழிலாளர் வர்க்கம் உறுதி எடுக்கவேண்டும் என அவர் கூறினார்.

மனிதக் கழிவு அகற்றும் தொழிலை ஒழிப்பது குறித்து அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் விவாதக் கூட்டம்
கடந்த மாதம் மதுரையில் கழிவுநீர் தொட்டியில் அடைப்பை நீக்குவதற்கு இறங்கிய இரண்டு ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்கள் நச்சுவாயு தாக்கி இறந்தனர். மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்களில் தொழிலாளர்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த தொழிலாளர்களை ஈடுபடுத்துவதை ஒழிப்பதற்கு ஒரு நீடித்த வலுவான போராட்டத்தை கட்டமைப்பதற்கான விவாதத்திற்கு சென்னையில் நவம்பர் 1 அன்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் அழைப்பு விடுத்திருந்தது.

இதில் ஆதித் தமிழர் பேரவையின் தோழர் ஜக்கையன், மார்க்சிய லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(மக்கள்

Com. Jaggaiyyan addressing the audience

Com. Jaggaiyyan addressing the audience

விடுதலை)யின் தோழர் சதீஷ், தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் தோழர் லெனின், மனித் கழிவு வேலைக்கு எதிரான அமைப்பின் தோழர் சரவணன், இந்திய குடியரசு கட்சியின் தோழர் அன்புவேந்தன், பாட்டாளி படிப்பு வட்டத்தின் தோழர் பீட்டர் மற்றும் எம்.ஐ.டி.எஸ்சின் பேரா. லட்சுமணன் ஆகியோர் கலந்து பேசினர். பத்திரிக்கையாளர் ஜெயராணி வாதத்தை வழிநடத்தினார்.

மனித்கழிவுகளை மனிதரே அகற்றுவதை தடை செய்தும் நடைமுறையில் இந்தத் தொழில் உள்ளதை அனைவரும் சுட்டக்காட்டினர். இது தொழிலாளர் பிரச்சனை மட்டுமல்ல இது முக்கியமாக சாதி பிரச்சனை என்பதை அவர்கள் குறிப்பிட்டனர். இத்தொழிலில் உள்ள தொழில்நுட்பத் தேவைகளையும், இதில் ஈடுபடு;ம் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு பற்றிய அரசு மெத்தனத்தையும் குறித்தும்; உண்மை சம்பவங்களை வைத்து அவர்கள் தங்களுடைய வாதத்தை வைத்தனர். இவை அனைத்தும் சாதிய, வர்க்க சமமின்மை மற்றும் பாகுபாடுகளை அனுமதிக்கும் கலாச்சாரக் குறியீடுகளாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மனிதக் கழிவுகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை இல்லை என்பதையும், இதில் இறக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தரப்படும் நிவாரணங்கள் குறித்த சரியான தகவல்கள் கொடுக்காதது, மற்றும் 1993 மற்றும் 2013 சட்டங்களின் கீழ் வழக்குககள் பதியப்படாதது ஆகியவை குறித்தும் வாதங்கள் எழுப்பப்பட்டன. இதில் வேலை செய்வது ஏறத்தாழ அனைவரும் தலித்துகள் என்பதானால் இது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை என்று அவர்கள் எடுத்துரைத்தனர்.

சென்னை மாகராட்சியில் பணி செய்யும் தோழர் பீட்டர், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் உத்தரவுகள் மேலிடத்தில் இருந்து வருகின்றன என்றும், பிரச்சனைகளை குறைந்த தர அலுவலர்கள் மேல் சாத்துவது சரியல்ல என்றார். மனித் கழிவு அகற்றும் தொழிலாளர்களை எண்ணும் பணியில் தொழிலாளர்கள் தாங்களே வந்து பதிவு செய்ய கோரியும் யாரும் வரவில்லை என்று அவர் வாதிட்டார். குடிசைப்பகுதிகளில் பெரிய சாக்கடைகளை நிறுவவதற்கு சாத்தியமில்லை என்றும், அங்கு இயந்திரங்களை இயக்குவதில் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது குறித்த தகவல்களை சேர்ப்பது, ஒருநாள் கூட்டம், பிரபலங்களை இப்போராட்டத்தில் ஈடுபடுத்துவது, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இதுகுறித்து விவாதம் நடத்துவது, நகராட்சி தொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பிரச்சனைகளை குறித்து ஆழ்நத விவாதம் நடத்துவது என்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு ஒப்பந்த செவிலியர்கள் நலச் சங்கம் போராட்டம்
அரசு மருத்துவமனைகள் மற்றும் முதன்மை சுகாதார மையங்களில் வேலை செய்யும் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி நவம்பர் 5 அன்று உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடைபெற்றது. பணி நிரந்தரம் மற்றும், இந்திய மெடிக்கல் கவுன்சிலின் பரிந்துரையின் படி போதுமான நர்ஸ்களை வேலை ஈடுபடுத்த கோரி தொழிலாளர்கள் போராடினர்.

தமிழ்நாட்டில் சுமார் 3500 நர்சுகள் ஒப்பந்தத்தில் வேலை செய்கின்றனர். இரண்டு வருடம் கழித்து நிரந்தரம் செய்யப்படும் என அரசு வாக்குறுதி தந்தும் அவர்கள் ஏறக்குறைய 5-7 வருடங்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாதம் ரூ7000-8000 ஊதியத்தில் வேலை செய்கின்றனர். 6நாட்ளுக்கு ஒரு நாள் விடுமுறை என்றாலும், ஆள் பற்றாகுறைக்கு அவரகள் தான் வேi செய்ய வேண்டும். அடுத்த ஷிஃப்டிற்கு நர்ஸ் வரவில்லை என்றால் இவர்கள் அடுத்த ஷிஃப்ட் வேலையும் செய்ய வேண்டும் ஆனால் ஓவர்டைம் கிடையாது. இதனால், சுகாதார மையங்களில் செவிலியர்கள் எண்ணிக்கையை 3லிருந்து 6ஆக உயர்த்த கோருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 450 நர்சுகள் இதே கோரிக்கைகளோடு ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நவம்பர் 5 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். சேப்பாக்கில் நடந்த இந்த போராட்டத்திற்கு காவல்துறை 5மணி வரை அனுமதி அளித்ததால், டிஎம்எஸ் வளாகத்தில் தொடரும் என்று செவிலியர் நலச் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து போராட்டத்தின் போது காவல்துறை குவிந்து இருந்தது. போராட்டம் துவங்கிய நாளி;ல் பிரச்சனையை தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், போராட்டம் ஒரு நாளில் முடிவு பெற்றது.

ஏற்கனவே 2012ல், சென்னையின் தனியார் மருத்துவமனைகளிலும்(அப்போலோ,போர்டிஸ், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்) அரசு மருத்துவமனைகளிலும், நர்சுகள் ஊதிய உயர்வுக்காக போராடி வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This entry was posted in Automobile Industry, Contract Workers, Electronics Industry, Factory Workers, Manual Scavenging, Public Sector workers, தமிழ் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.