பிரிக்கால் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க மய்யங்களின் ஒருமைப்பாடு – பத்திரிக்கை செய்தி

10/12/2015

கோவை பிரிக்கால் தொழிலாளர்களின் பாதிப்புகள் குறித்தும், 8 தொழிலாளரகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ள நீதிமன்ற நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் உள்ள மத்திய தொழிற்சங்க அமைப்புகள் 10.12.2015 அன்று எழும்பூரில் உள்ள ஹெச்.எம்.எஸ் தலைமை அலுவலகத்தில் காலை பத்து மணிக்கு சிறப்பு கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்தில் ஹெச்.எம்.எஸ், ஏஐசிசிடியு, சிஐடியு, ஏஐடியுசி, ஏஐயுடியுசி, ஐஎன்டியுசி, உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.தமிழக பாட்டாளி வர்க்கத்திற்கு மேற்கண்ட தொழிற்சங்க தலைவர்கள் பின்வரும் கூட்டு வேண்டுகோளை முன் வைக்கிறார்கள்.

  • நாடெங்கும் தொழிலாளர் விரோதச் சட்டதிருத்தங்கள் நடவடிக்கைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 37 மாருதி தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பிணையின்றி விசாரணைக் கைதிகளாய் உள்ளனர். அவர்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. இந்நிலையில், 03.12.2015 அன்று கோவை குண்டு வழக்குகள் நீதிமன்றம், எஸ்.சி. 75ஃ2011 வழக்கில் எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.
  • 20.09.2009 கொலைச் சதி என்ற அஸ்திவாரத்தின் மீது 21.09.2009 கொலைச் சம்பவம் என்ற கட்டிடம் நிறபதாக வழக்கில் சொல்லப்பட்டது. இப்போது 03.12.2015 தீர்ப்பில் நீதிபதி, கொலைச் சதி நிரூபிக்கப்படவில்லை எனச் சொல்லி விட்டார். ஆனால் 8 பேருக்கு கொலை மற்றும் அத்துமீறி நுழைந்தது என்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாகச் சொல்லி, இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளார். (ஏற்கனவே காவல் துறையினர் துன்புறுத்தலுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன், தீரப்பு எதிர்மறையாகச் சொல்ல வாய்ப்பு உள்ளது என்ற பேச்சுகளைக் கேட்டு தற்கொலை செய்து கொண்ட, வழக்கில் 6ஆம் எதிரயான சம்பத்குமார் என்பவரின் மனைவி ஆகிய இருவரின் உயிர்களை இவ்வழக்கு பறித்து கொண்டுவிட்டது).
  • பிரிக்கால் தொழிலாளர்கள் தீர்ப்பு சாட்சியங்களுக்குப் புறம்பானது, இரட்டை ஆயுள் தண்டனை என்ற அதீத தண்டனையே கூட, முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க விரோதத்தை பிரதிபலிக்கிறது எனச் சொல்லி, தீர்ப்பிற்கெதிராக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதாகவும், மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்கப் போவதாகவும் சொல்லி உள்ளனர்.
  • 8 தொழிலாளர்கள் இரட்டை ஆயுள் தண்டனைக்கெதிராக நியாயம் கோரும் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு அனைத்து தொழிற்சங்க மய்யங்களும் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கின்றோம். சிறை சென்றுள்ள எட்டுத் தொழிலாளர்களின் ஜாமீன் மற்றும் விடுதலைக்கு அனைத்து தொழிலாளர்களும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் உதவிடுமாறு கோருகிறோம்.
This entry was posted in Automobile Industry, Factory Workers, News, தமிழ் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.