மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கத்தின் ‘தொழிலாளர்கள் நீதி கோரும் மாநாடு” அறிக்கை

தோழர்களே,
கடந்த 2012 ஜுலை 18 முதல், ஹரியானா மாவட்டத்தின் மாநேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் நிர்வாகம்-காவல்-அரசு களின் கூட்டு முயற்சியால், தொழிலாளர்களாகிய நாங்கள் பெரும் அநீதியையும், அடக்குமுறையையும் சந்தித்து வருகிறோம். எங்களுடைய 215 சக தொழிலாளர்கள் மேல் பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன, 147 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர், 560 நிரந்தரத் தொழிலாளர்கள் உட்பட 2300 தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். மூன்று வருடங்களாகி, 36 தொழிலாளர்கள் ஜாமீனின்றி இன்றும் சிறையில் வாடுகின்றனர். வழக்குகள் கடைசி வாதத்திற்கு வந்துள்ளன. தொழிலாளர்களின் வழக்குறைஞர்களுக்கு மாருதி நிர்வாகம் பல ஆதாரங்களை தர மறுக்கிறது. அதனால் இன்னும் வழக்கு தாமதமாகி கொண்டே வருகிறது. குற்றம் சுமத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக கொலைக்கான போதுமான ஆதாரங்கள் இன்றியும், மாருதி நிர்வாகமும் அரசும் தொழிலாளர்களுக்கு கடுமையான தண்டனையை சுமத்தி தொழிலாளர் வர்க்கத்திற்கு பாடம் கற்பிக்க முயற்சிக்கின்றன. தொழிலாளர்கள் எந்த போராட்டத்தையும் கையில் எடுக்கக் கூடாது என்பதே அவர்கள் எண்ணம்.

இந்நிலையில் மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கத்தின் தற்காலிகக் குழு சிறையில் உள்ள தொழிலாளர்களுக்கு நீதி கோரி, 27 நவம்பர் 2015 அன்று ‘தொழிலாளர்கள் நீதி கோரும் மாநாடு” ஒன்றை நடத்தியது. இதில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் வெகுவாரியாக கலந்து கொண்டு போராட்டத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். தங்களுடைய வேலையில் மத்தியிலும், குர்காவ் மற்றும் மாநேசர் தொழிற்சாலைகளில் இருந்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாருதி குர்காவ் நிரந்தரத் தொழிலாளர்கள் சங்கம், மாநேசரின் மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கம், மாருதி சுசுகி பவர்டிரெயின் இந்தியா தொழிலாளர்கள் சங்கம், சுசுகி மோட்டர்சைக்கிள் இந்தியத் தொழிலாளர்கள் சங்கம், ஹீரோ மோடோகார்ப் தொழிலாளர்கள் சங்கம், பஜாஜ் மோட்டர்ஸ் தொழிலாளர்கள் சங்கம், பெல்சோனிகா தொழிலாளர்கள் சங்கம், சன்பீம் தொழிலாளர்கள் சங்கம், என்டியூரன்ஸ் தொழிலாளர்கள் சங்கம், பாக்ஸ்டர் தொழிலாளர்கள் சங்கம். மஞ்சால் ஷோவா தொழிலாளர்கள் சங்கம், எஃப்.சி.சி ரீகோ தொழிலாளர்கள் சங்கம், பிரட்ஜ்ஸ்டோன் தொழிலாளர்கள் சங்கம், போர்ட் இந்தியா தொழிலாளர்கள் சங்கம்(சென்னை), ஹ{ண்டாய் மோட்டர்ஸ் இந்தியா தொழிலாளர்கள் சங்கம்(சென்னை), டாடா மார்கோபோலோ கிரான்திகாரி தொழிலாளர்கள் சங்கம்(கர்னாடகா), ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் எஸ்எஸ்கேயு (மேற்கு வங்காளம்), வீனஸ் இன்டஸ்டிரியல் கார்பரஷேன் தொழிலாளர்கள் சங்கம் (பரிதாபாத்), ஆட்டோ லைன் தொழிலாளர்கள் சங்கம்(உத்தரகாண்டம்), மகிந்த்ரா சிஐஈ தொழிலாளர்கள் சங்கம்(உத்தரகாண்டம்), வோல்டாஸ் தொழிலாளர்கள் சங்கம்(உத்தரகாண்டம்), எல்ஜிபி தொழிலாளர்கள் சங்கம் (உத்தரகாண்டம்), ஜன சங்கர்ஷ் மன்ச் (ஹரியானா), இன்கிலாபி மஸ்தூர் கேந்த்ரா, தொழிலாளர்கள் ஒற்றுமை மையம் (குர்காவ்-பாவல்), ஷ்ரமிக் சங்க்ரம் கமிட்டி, சதிஸ்கர் முக்தி மோர்ச்சா, மஸ்தூர் கிரான்தி பரிஷத், இன்கிலாபி கேந்திரா (பஞ்சாப்), பிகுல் மஸ்தூர் தஸ்தா, மஸ்தூர் பத்திரிகா, மஸ்தூர் ஏக்தா கேந்த்ரா, என்டியுஐ, டியுசிஐ, டிடியுசி, டபிள்யுயுடியு, சிஐடியு, ஏஐடியுசி, ஏஐயுடியுசு, ஏஐசிசிடியு, ஹெஎம்எஸ்,இன்டஸ்ட்ரிஆல் மற்றும் பியுடிஆர்,பிஏடிஎஸ்,கேஎன்எஸ்,சன்ஹதி,நவ்ரஸ், மேஹ்னாத்கஷ் மகிலா சங்கடன், டிஎஸ்எஃப், ஆர்ஐபி ஆகிய முற்போக்கு அமைப்புகள் இந்த ஒருநாள் மாநாட்டில் கலந்து கொண்டனர். சிறையில் உள்ள தொழிலாளர்களை உடனடியாக விடுவித்தல், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல், அனைத்து தொழிலாளரகளின் மேல் உள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறுதல் ஆகிய கோரிக்கைகள் மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர்களின் போராட்டத்தை வலுப்படுத்தவும், நிர்வாகம்-அரசு-நீதித்துறையின் முயற்சியை முறியடிக்கவும் மாநாட்டின் பிரதிநிதிகள் உறுதியேற்றனர்.

மாநாட்டிற்கு முன்னர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாருதி தொழிலாளர்களின் நிலை குறித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டன. சென்னை மாருதி சுசுகி ஆதரவு குழு நவம்பர் 14 அன்று சென்னை எம்ஆர்எஃப் தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிற்சங்க ஆதரவு கூட்டத்தை நடத்தினர். சென்னை 13 அன்று சன்ஹதி சென்னை ஆதரவு கூட்டத்தை நடத்தியது. 16 நவம்பர் அன்று ஐஐஎஸ்சி கன்ஸர்ன் பெங்களுரில் விவாதக் கூட்டத்தை நடத்தியது. 21 நவம்பர் அன்று தில்லியில் ஆதரவு கூட்டம் நடைபெற்றது. 25 நவம்பர் அன்று யுஜிசி ஆக்கிரமிப்பு குழு ஆதரவு கூட்டத்தை நடத்தியது. 22 அன்று பரிதாபாதில் ஐஎம்கே கூட்டம் ஒன்றை நடத்தியது. ஜன சங்கர்ஷ் மன்ச் ஹரியானா கைத்தாலில் (8 நவம்பர்), ஜிந்தில்(22 நவம்பர்), கோஹனாவில்(22 நவம்பர்) பேரணிகள் மற்றும் பொதுஜன கூட்டங்கள் நடத்தியது. மேலும் புனேயில் பஜாஜ் ஆட்டோ சங்கம், பெங்களுரில் டயோட்டா மற்றும் டியுஎஸ்சி, எம்கேபி, ஐஎம்கே, டிடியுசி, என்டியுஐ, டியுசிஐ. சிஎம்எம், எஸ்எஸ்சி ஆகிய அமைப்புகள் பூனே, மும்பய், பெங்களுர், கோல்கல்த்தா, ருத்ராபூர், சத்தீஸ்கர், காசியாபாத் ஆகிய இடங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். மேலும் வரும் நாட்களில் போராட்டங்கள் தொடரும்.

தோழர்களே, ஆளும் வர்க்கத்தை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்று கூடி போராட்டம் நடத்த வேண்டிய காலம் இது. மாருதி தொழிலாளர்களை வீழக்கவைக்கும் சக்திகளை மட்டுமல்ல நாட்டின் பல்வேறு இடங்களில் தங்களுடைய வேலைகள், உரிமைகள், சுதந்திரங்களை இழந்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் குரல் கொடுப்போம். போராட்டத்தில் தங்களுடைய ஆதரவை நாங்கள் கோருகிறோம்.

தொழிலாளர் வர்க்க போராட்டமும் ஒற்றுமையும் வாழ்க
தற்காலிக குழு,
மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம்
மாநேசர்,குர்காவ்

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Resources, தமிழ் and tagged , . Bookmark the permalink.