ராஜஸ்தான் தாபுகேரா பகுதியில் தொழிலாளர்களின் போராட்டத்தில் காவல் துறை வன்முறை

The English version of Honda Workers Repression in Rajasthan can be read here.

பிப்ரவரி 17: ராஜஸ்தான்-ஹரியானா பார்டரில் உள்ள அல்வார் பகுதியில் தாபுகேரா ஹோண்டா மோட்டர் சைகிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா தொழிற்சாலையில் நிரந்தரம்-ஒப்பந்த-டிரெய்னி-அப்பிரன்டைஸ் தொழிலாளர்கள் 2000 பேர் பிப்ரவரி 16ல் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தனர். மேலும் பி மற்றும் சி ஷிஃப்ட் தொழிலாளர்கள் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் ஒரு பெயின்ட் ஷாப் ஒப்பந்த தொழிலாளர் ஓவர்டைம் செய்ய மறுத்ததை அடுத்து சூப்பர்வைசர் அவரை தாக்கியுள்ளார். பல நாளாக ஓவர்டைம் செய்து நோய்வாய் பட்டிருந்ததால் வேலை செய்ய மறுத்துள்ளார் ஒப்பந்த தொழிலாளர். ஆனாலும் அவரை  சூப்பர்வைசர் கழுத்தை பிடித்து தாககியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே சங்கம் அமைப்பதை தடுத்தும் சங்க நிர்வாகிகளை வேலையிட்டு நீக்கியும், நிர்வாகம் தொழிலாளர் துறையின் உதவியுடன் தடுத்து வந்ததால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் இந்த தாக்குதலை அடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை ஆதரித்து குர்காவ் பகுதி ஹோண்டா தொழிலாளர்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.  நிர்வாகம் 4 தொழிலாளர்களை வேலை நீக்கியும், 8 தொழிலாளர்களை தற்காலிமாக நீக்கி பழிவாங்கியுள்ளது. தொழிலாளர் தலைவர்கள் நரேஷ் குமார் மற்றும் ராஜ்பால் ஆகியோரை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது. இதற்கிடையில் இரவு 7 மணி அளவில் ராஜஸ்தான் மாநிலமும் நிர்வாகத்தின் பவுன்சர்களும் தொழிலாளர்களின் மீது தடியடி மற்றும் பலமான வன்முறையை நடத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர். அரசின் காட்டுமிராண்டி வன்முறையால் பல தொழிலாளர்கள் தலைமறைவாகி உள்ளனர். தாபகேராவை சுற்று அரசின் காவல் துறை சுற்றியுள்ளது. இதை அடுத்து இன்று காலை தாருஹேராவில் கூடிய 1500 தொழிலாளர்கள் கைது செய்யபட்டுள்ளனர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற தொழிலாளர்களை காணவில்லை.

Source: Workers Solidarity Center

Source: Workers Solidarity Center

ஹோண்டா தொழிலாளர்கள் சங்கத்தின் பொது செயலாளரின் பேட்டி:

பிப்ரவரி 19 அன்று சுமார் தாபுகேரா தொழிலாளர்கள் உட்பட குர்காவ், மாநேசர், தாருஹேரா, பாவல், நீம்ராணா, ஜெய்பூர் பகுதிகளை சேர்ந்த 8000 தொழிலாளர்கள் பெரும் பேரணியாக பாதாபூரில் உள்ள ஹோண்டா தலைமை அலுவலகத்தின் முன் கூடியுள்ளனர். கடும் குளிர், போதுமான உணவு இல்லாத போதும், தொழிலாளர்கள் அங்கேயே உட்கார்ந்து கைது செய்யபட்ட அனைத்து தொழிலாளர்களையும் விடுவத்தல், அனைத்து பொய் வழக்குகளை வாபஸ் வாங்குதல், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துதல், காவல் துறை அராஜகத்தை விசாரணை செய்தல் என்று கோரி வருகின்றனர்.

12705603_10153596762153922_7858867560264288568_n

பிப்ரவரி 20 அன்று ஹோண்டா தொழிலாளர்கள் 1 வாரமாக போராடி வரும் ஜெ.என்.யு மாணவர்களை சந்தித்து பேசினர்.

12729163_10207252994554517_4781033917082759209_n

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.