சுரண்டல் மற்றும் அரசு ஒடுக்குமுறை குறித்து ஹோண்டா தாபுகாரா தொழிலாளர்களுடன் பேட்டி

ராஜஸ்தான் தாபுகாராவில் உள்ள ஹோண்டா தொழிற்சாலை குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. பிப்ரவரி 16 அன்று அங்கு வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது காவல்துறையும் நிர்வாகத்தின் குண்டர்கள் வன்முறையை அவிழ்த்தனர். 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமுற்றனர். 44 தொழிலாளர்கள் கைது செய்யப

Source: Workers Solidarity Center

Source: Workers Solidarity Center

ட்டு கல்வீசி கலகத்தை உண்டாக்கியதாகவும், காவலர்களை கொல்ல முயற்சித்தாகவும் அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. 

ஹோண்டா தொழிற்சாலையில் உள்ள பணி நிலைமைகள் குறித்தும் அடக்குமுறைகள் குறித்தும் தில்லியில் மூன்று நிரந்தரத் தொழிலாளர்களுடன் உரையாடினோம். இவர்கள் அனைவரும் 22-24 வயதுக்குள் உள்ளவர்கள் அவர்கள் தொழிற்சாலையில் சங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் குறித்தும் அதை தடுப்பதற்காக நிர்வாகமும் மாநில அரசும் கட்டவிழ்த்த தாக்குதல்கள் குறித்து விவரித்தனர். தொழிலாளர்களின் பெயர்கள் அவர்களின் நலன் குறித்து மறைக்கப்பட்டுள்ளன.

கே: தொழிற்சாலை குறித்தும் உற்பத்தியில் தங்களுடைய பொறுப்புகள் குறித்தும் கூறுங்கள்?

உ: இந்த தொழிற்சாலை 2011ல் நிறுவப்பட்டது. தொழிற்சாலையில் 4000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் நிரந்தரத் தொழிலாளர்கள் 472 பேர் மட்டுமே. மற்றவர்கள் பல ஏஜன்சிகள் மூலம் நியமிக்கபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகைகள் உட்பட 22000ரூபாய் மாத ஊதியம் கொடுக்கப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 10000ரூபாய் ஆகும். ஆனால் நாங்கள் அனைவரும் ஒரே வேலையை தான் செய்கிறோம்.

அ: 2011ல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இருந்து நாங்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டோம் பெரும்பாலான நிரந்தரத் தொழிலாளர்கள் அவ்வாறு எடுக்கப்பட்டவர்கள். நாங்கள் பயிற்சியாளராக 3 வருடத்திற்கு பணி செய்தோம். அதன் பின்னர் 6 மாதத்திற்கு தற்காலிக தொழிலாளராக வேலை செய்து பின்னர் நிரந்தரத் தொழிலாளர் ஆனோம். பயிற்சியாளராக இருந்து தற்காலிகத் தொழிலாளராக நாங்கள் மாறிய போது எங்களுக்கு கொடுக்கபட்ட ஊதிய உயர்வு என்னவென்று தெரியுமா? மாதம் 20ரூபாய்!

க:  நாங்கள் நிரந்தரத் தொழிலாளர் ஆவதற்கு எவ்வாறு உழைக்க வேண்டி இருந்தது என்பதை வலியுறுத்துகிறோம். இந்த தொழிற்சாலை உற்பத்தி செய்வதற்கு நாங்கள் தான் தூணாக இருந்தோம். இதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

கே: நீங்கள் சங்கம் அமைக்க முடிவெடுத்ததற்கு என்ன காரணங்கள் என்று கூறுங்கள்?

க: பணி நிலைமைகள் கடினமாக இருந்தன. நாங்கள் கூறிய பிரச்சனைகளை தீர்க்க நிர்வாகம் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இணைத்து சங்கம் அமைத்தால் தான் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வரும் என்று நாங்கள் உணர்ந்தோம்.

உ: நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து தொழிற்சாலைக்கு செல்வதற்கு எந்த போக்குவரத்து சேவையும் இல்லை. நாங்கள் ஆட்டோக்கள் எடுத்து செல்ல வேண்டியுருந்தது. ஒரு ஆட்டோவில் 7-8 பேர் உட்காரலாம். ஆனால் இரவில் நாங்கள் 30 பேர் உட்கார்ந்து சவாரி செய்ய வேண்டும். எட்டரை மணி நேர கடும் உழைப்பிற்கு பின்னர் எப்படி இவ்வாறு செல்ல முடியும் என்று நீங்களே யோசித்து பாருங்கள். நாங்கள் தங்கி இருந்த இடங்களில் குண்டர்கள் இருந்தார்கள். இரவில் அவர்கள் தொல்லை வேறு. அதனால் தான் நாங்கள் வெகுகாலமாக போக்குவரத்து வசதி வேண்டி குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் நிர்வாகம் அதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.

உணவகத்தில் கொடுக்கப்படும் உணவின் தரம் வெகு மோசமாக இருந்தது. அதன் தரத்தை குறிப்பிடுவதற்கு வார்த்தையே இல்லை. எங்கள் உணவில் கரப்பான்பூச்சிகளை காண்பது சாதாரணம். நாங்கள் குறை கூறினால் எங்கள் சூப்பர்வைசர் வேண்டுமென்றால் சாப்பிடு இல்லை பட்டினி கிட என்பார். நாங்கள் வேண்டாம் என்றால் கூட அடிக்கடி ஓவர்டைம் பார்க்க வேண்டியுள்ளது.

அ: எங்களுடைய தொழிலாளர் தோழர் ஒருவர் 3 நாள் தொடர்ந்து ஓவர்டைம் செய்து வந்தார். தொடர்ந்து நான்காவது நாள் ஓவர்டைம் செய்ய மறுத்த போது, அவரை சூப்பர்வைசர் கன்னத்தில் அறைந்துள்ளார். நாங்கள் தொழிற்சாலை தளத்தில் இவவாறு தான் நடத்தப்படுகிறோம். ஒப்பந்த தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம். மருத்துவப் பிரச்சனைக்காக கூட ஒப்பந்த தொழிலாளர் ஒருநாள் விடுமுறை எடுத்தால் கூட, அடுத்த வருடத்தில் அவருடைய ஒப்பந்தத்தை நீடிக்கமாட்டோம் என்று மிரட்டுவார்கள். சின்ன பிரச்சனைகளுக்கு கூட நிரந்தரத் தொழிலாளர்களை அவமானம் செய்வார்கள், ஒப்பந்த தொழிலாளர்களை வேலை விட்டு நீக்குவார்கள்.

க: ஆக்டிவா போன்ற ஹோண்டா பைக்குகளை எங்கள் தொழிற்சாலை பொருத்துகின்றன. இதற்கான பாகங்கள் வெளியிலிருந்து வருகின்றனர். ஒரு ஸ்கூட்டரை அசெம்பிள் செய்வதற்கு எங்களுக்கு கொடுக்கும் நேரம் வெறும் 22 வினாடிகள். இரண்டு அசெம்பிளி லைன்கள் இருக்கின்றன. ஆனால் எந்த லைனிலும் ஆள் மாற்று தொழிலாளர்(ரிலீவர்) இல்லை. அரை மணி நேர மதிய உணவு இடைவெளி மற்றும் இரண்டு தேனீர் இடைவெளி தான். மற்ற நேரம் நாங்கள் ஓயாமல் வேலை செய்ய வெண்டும். தொழிற்சாலையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பது எங்களது முக்கிய கோரிக்கை. ஒரு ஒப்பநத தொழிலாளர் பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டால் அவரை உடனடியாக வேலை நீக்கம் செய்;து விடுவார்கள். ஒரு நிரந்தரத் தொழிலாளர் கேட்டால் மிரட்டப்பட்டு வேலையை மட்டும் செய்யுங்கள் என்று கூறுவார்கள்.

ஒருமுறை அசெம்பளி லைனில் வேலை செய்யும் போது, ஒரு ரொடேட்டிங் பார் என்னுடைய முகத்தில் பட்டு என்னுடைய வலது கன்னத்தை வெட்டி விட்டது. நான் முதலில் கவனிக்கவில்லை. என்னுடைய முகத்தில் வடியும் ரத்தத்தை பார்த்து என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். நான் உடனடியாக சூப்பர்வைசரை கூப்பிட்டேன். அவர் வந்து விசாரித்த போது என்ன நடந்தது என்று கூறினேன். அவருக்கு வேறு வேலை இருப்பதாக கூறி மனித வளத் துறைக்கு போகுமாறு கூறினார். அங்கு அவர்கள் எனக்கு 500ரூபாய் கொடுத்து, என்னுடைய நண்பருடன் என்னை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வி;ட்டனர். இரண்டு நாளைக்கு வேலைக்கு வரவேண்டாம் என்று கூறி விட்டனர்.

அ: சிலசமயம், தொழிற்சாலை கண்காணிப்பாளர்கள் தொழிற்சாலையை பார்வையிட வரப் போகிறார்கள் என்று எங்களை உற்பத்தியை நிறுத்தி லைன்களை சுத்தம் செய்ய சொல்வார்கள். அதனால் சில மணி நேரம் உற்பத்தி பாதிக்கப்படும். உடனே அசெம்பிளி நேரத்தை 20 வினாடிக்கு குறைத்து விடுவார்கள். நாங்கள் இன்னும் வேகமாக வேலை செய்ய வேண்டும். பல நேரங்களில் நிர்வாகக் கோளாறால், உதாரணமாக பாகங்கள் வரவில்லை என்றால் லைன் நின்று விடும். அப்போதும் இழந்த நேரத்தை ஈடுகட்ட அசெம்பிளி நேரம் குறைக்கப்படும். ஓவர்டைம் என்றால் இன்னும் மோசம் மிருகங்களை போல நடத்துவார்கள்.

கே: எப்பொழுது நீங்கள் சங்கம் அமைக்க ஆரம்பித்தீர்கள்? அதற்கு நிர்வாகத்தின் பதில் என்ன?

அ: ஜுலை 26 2015 அன்று நாங்கள் சங்கம் அமைப்பதற்கு முடிவெடுத்தோம். ஆகஸ்ட் 6 அன்று அரசிடம் பதிவு செய்ய விண்ணப்பத்தோம். 4000 தொழிலாளர்களில் ஏறத்தாழ அனைவரும் சங்கம் அமைப்பதற்கு கையெழுத்திட்டனர். பதிவின் போது 227 முக்கிய பிரதிநிதிகளின் பெயரை பதிவு விண்ணப்பத்தில் கொடுத்துள்ளோம். ஆனால் இதற்கான எந்த பதிலும் அரசிடமிருந்து வரவில்லை. முதலில் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 227 கையெழுத்துகளில் பிரச்சனை உள்ளதாக 3 நோட்டிஸ்களை சிவில் நீதிமன்றம் அனுப்பியுள்ளார்கள் என்று அவர்கள் சமீபத்தில் எங்கள் வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர். ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த நோட்டிசும் வரவில்லை. 227 பேரில் 21 தொழிலாளர்கள் சங்கம் வேண்டாம் என்ற கூறியதாக ஒரு வாக்குமூலத்தை நிர்வாகத் தரப்பிலிருந்து பதிவு செய்துள்ளதாக நோட்டிஸ் கூறுகிறது. அதைப் பற்றி சம்பந்தபட்ட 21 தொழிலாளர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. இன்னும் அவர்கள் எங்கள் கூடவே உள்ளனர். எப்படி ஏமாற்றுகிறார்கள் எங்களை!

க: பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வந்தால் அவர்கள் மத்தியில் ஒற்றுமை இருக்காது என்று நிர்வாகம் நினைத்தது. ஆனால் அவர்கள் கூற்று பொய்யாகி விட்டது. நிரந்தரத் தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமை பலமாக உள்ளது அது மட்டுமல்ல எங்களை விட மேலும் அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒப்பந்த தொழிலாளர்களுடன் எங்களுடைய ஒற்றுமை ஓங்கி உள்ளது.

உ: ஆட்டோமொபைல் தயாரிப்பில் உலக வழிகாட்டியாக ஹோண்டா பரை சாற்றுகிறது. ஆனால் முக்கிய தேவைகளாகிய பாதுகாப்பு உபகரணங்கள் கூட தர கோரினால் அதற்கான வசதி இங்கு இல்லை என்று மனிதவள துறை கூறுகிறது. சின்ன விஷயங்களை தீரப்பதில் கூட அவர்கள் ஒரு சிறிய நிறுவனம் போல தான் நடக்கின்றனர்.

கே: தற்போதைய நிலவரம் என்ன?

உ: உங்களுக்கு தெரிந்திருக்கும் இப்போது நிலைமை கவலைக்குறியதாக உள்ளது. பொய் வழக்குகளில் கைது செய்யபட்டு எங்களுடைய தோழர்கள் 44 பேர் இன்று சிறையில் உள்ளனர். அதில் பல பேர் பிப்ரவரி 16க்கு பின்னர் அவர்களுடைய வீட்டில் கைது செய்யபட்டனர். ஊடகங்களை இதைப் பற்றி எழுதவில்லை. நாங்கள் தொழிலாளர் துறையுடன் பேசுவதற்கு முயற்சிக்கிறோம். நாங்கள் தொலைபேசியில் கூப்பிட்டால் இது தொழிலாளர் துறை இல்லை தப்பான நம்பருக்கு போன் செய்துள்ளோம் என்கின்றனர்! ஊடகங்களிலிருந்து அரசு வரை அனைவரும் நிர்வாகத்துடன் துணை போவதாக நாங்கள் நினைக்கிறோம்.

தற்போது நிர்வாகம் அனைத்து நிரந்தரத் தொழிலாளர்களை தற்காலிக வேலை நீக்கம் செய்து வருகிறது. எங்களின் நிரந்தர முகவரிக்கு சஸ்பென்ஷன் லெட்டர் அனுப்பியுள்ளனர். மற்ற இடங்களில் இருந்து புது ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு வந்து இறக்கியுள்ளனர். இதில் பல பேர் நடுநிலைப் பள்ளி கூட முடிக்காதவர்கள். அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக அவர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்து அவர்களை 24 மணி நேரம் தொழிற்சாலையிலேயே தங்க வைப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். தற்போது உற்பத்தி நின்றுள்ளது. அவர்களுக்கு எங்களை நீக்கி இன்னொருவரை கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல. நாங்கள் ஆரம்பித்தில் இருந்து வேலை செய்து அனுபவம் பெற்றவர்கள்.

க: நாங்கள் வேலை நிறுத்தம் செய்து காவல்துறை எங்களை தாக்கிய அதே நாளில், குஜராத்தில் ஹோண்டா ஒரு மாபெரும் தொழிற்சாலையை ஆரம்பித்தது. நாங்கள் உற்பத்தியை நிறுத்தினாலும் அவர்களால் இன்னொரு இடத்தில் உற்பத்தியை உருவாக்க முடிகிறது. இந்த சூழ்நிலையில் எங்களுடைய போராட்டம் இன்னும் கடினமாக உள்ளது.

அ: ஆனால் நாங்கள் உறுதியோடு உள்ளோம். எங்களுடைய தொழிலாளர்களை ஜாமினில் கொண்டு வருவோம்*, எங்களுடைய சங்கம் அமைக்கும் போராட்டத்தை தொடர்வோம்.

*இந்த பேட்டியின் நான்கு நாட்கள் கழித்து கைது செய்யபட்ட 44 தொழிலாளர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர்.

This entry was posted in Analysis & Opinions, Automobile Industry, Factory Workers, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.