ஹோண்டா வாகனங்களை புறக்கணியுங்கள் – போராடும் ஹோண்டா தாபுகேரா தொழிலாளர்கள் விடும் கோரிக்கை

ஐந்து தொழிலாளர்கள் 8 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் – மீண்டும் வேலை கோரி போராட்டம்

தாபுகேரா ஹோண்டா தொழிற்சாலையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க கோரி ஐந்து தொழிலாளர்கள் கடந்து 8 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் தில்லியின் ஜந்தர்-மந்தரில் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். செப்டம்பர் 23 அன்று புது தில்லியில் உள்ள ராஜஸ்தான் பவன அருகில் நடந்த தர்ணாவில் 50 தொழிலாளர்கள் ஒரு நாள் கைது செய்யப்பட்டனர். அனைத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கோரியும், நிர்வாக உடைமைகளை சேதப்படுத்தியாக 73 தொழிலாளர்களின் மேல் போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க கோரியும் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

Workers at the Hunger Strike

Workers at the Hunger Strike

ஹோண்டா தாபுகேரா தொழிற்சாலையில் பிப்ரவரி 16 அன்று ஒரு கண்காணிப்பாளருக்கும் தொழிலாளருக்கும் நடைபெற்ற வாக்குவாதத்தை அடுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். நிர்வாகம், தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல், தொழிலாளர்களுக்கு எதிராக காவல் துறையை ஏவியது. காவல் துறையின் ஒடுக்குமுறையால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். நிர்வாக உடைமையை சேதப்படுத்தியதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் பொய் வழக்குகள் சுமத்தி 73 தொழிலாளர்கள் கைது செய்யபட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களையும் 200 நிரந்தரத் தொழிலாளர்களையும் நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. தொழிலாளர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தொழிற்சாலைக்கு அருகில் எந்த போராட்டங்களையும் நடத்தக் கூடாது என்று ராஜஸ்தான் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்கவோ அவர்கள் கோரும் தொழிற்சங்கத்தை பதிவு செய்யவோ அரசு தயாராக இல்லை. இந்நிலையில் ஹோண்டா மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியாவின் வேலை நீக்கம் செய்யப்பட்டத் தொழிலாளர்கள் மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

19 செப்டம்பர் 206 அன்று ஐந்து தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக 500 தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மாருதி சுசுகியின் நான்கு தொழிற்சாலைகள், ஹோண்டா மாநேசர், ஹீரோ மோட்டர் கார்ப், பஜாஜ் ஆட்டோ உட்பட 120 தொழிற்சாலைகளின் தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளன. ஐஎன்டியுசி, பிஎம்எஸ் தவிர மற்ற மத்திய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தில்லி பல்கலைகழகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைகழக மாணவர் அமைப்புகள் பல்கலைகழகங்களில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தியுள்ளனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் ஹோண்டா தொழிலாளர்கள் போராட்ட ஆதரவுக் குழு ஒன்றையும் கட்டமைத்துள்ளனர். மேலும் இ;ந்திய முழுவதும் ஆதரவு கோரியும் தொழிலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவாக நிதியுதவியும் கேட்டுள்ளனர்.

தொழிலாளர் உரிமைகளை மறுக்கும் ஹோண்டா வாகனங்களை புறக்கணிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் ஹோண்டா அலுவலகங்கள் முன்னர் போராட்டங்கள் நடத்த தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் தாபுகேரா பகுதியில் தொழிலாளர்களின் போராட்டத்தில் காவல் துறை வன்முறை

 

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.