ஹோண்டா தொழிலாளர்களின் 18ஆம் நாள் உண்ணாநிலை போராட்டம் – 5 நாள் நீதி கோரும் பேரணி; தமிழ்நாடு தொழிலாளர்களின் ஆதரவு

ஹோண்டா தொழிலாளர்களின் உண்ணாவிரதம் 18 நாட்களாக நீடிக்கும் நிலையில் ராஜஸ்தான் அரசு தொழிலாளர்களின் நிலையை புறக்கணித்து வருகின்றது. போராட்டத்திற்கு ஆதரவாக சுமார் 70 வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் 28 முதல் அக்டோபர் 2 வரை ஹரியானா தாருஹேராவில் இருந்து ஜந்தர்-மந்தர் வரை நீதி கோரிப் பேரணி நடத்தினர். ஹோண்டா தாபுகாரா தொழிற்சாலையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரி 5 தொழிலாளர்கள் செப்டம்பர் 19 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை முன்று தொழிலாளர்களின் உடல் நிலைமை மோசமாகிய பின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அனைத்துத் தொழிலாளர்களும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.

செப்டம்பர் 28 அன்று தமிழ்நாட்டில் இருந்து ஏஐசிசிடியு, அகில இந்திய மாணவர் அமைப்பு மற்றும் புரட்சிகர இளைஞர் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களும் மாணவர்களும் ஜந்தர் மந்தரில் ஹோண்டா போராட்டத்தில் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அக்டோபர் 5 அன்று டிடியுசி, என்டியுஐ மற்றும் சென்னைத் தொழிலாளர்கள் ஹோண்டா மண்டல அலுவலகம் முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் மேலும் ஹோண்டா தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து துண்டறிக்கை விநியோகித்தனர்.

Workers at the Hunger Strike

Workers at the Hunger Strike

தாருஹேராவில் இருந்து ஜந்தர் மந்தர் வரை நடைபெற்ற நீதி கோரும் பேரணி 5 நாட்களில் 100 கிலோ மீட்டர் பயணமாக நடைபெற்றது. தொழிலாளர்கள் தொழிற்பேட்டைகள் ஆகிய மாநேசர்,குர்காவ், காப்சேடா பகுதிகள் வழியாக சென்று தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரினர். ஐஎம்டி மாநேசர் பகுpயில் மாருதி, பெல்சோனிகா மற்றும் மாநேசர் ஹோண்டா தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அங்கு காவல்துறையின் தடையை மீறி அங்குள்ள தொழிற்சங்கங்களின் உதவியோடு தொழிலாளர்கள் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினர். காப்சேடா பகுதியில் பீகுள் மஸ்தூர் தஸ்தா தொழிலாளர் போராளிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர்.

தங்களது கோரிக்கைகளுக்கு மாணவர்களிடம் ஆதரவு கோர தொழிலாளர் பேரணி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்திற்கு சென்ற போது, பல்கலைகழக நிர்வாகம் அவர்களை உள்ளே விட மறுத்தது. ஆனால் மாணவர்களும் மாணவர் சங்கப் பிரதிநிகள் கேட்டுகளை திறந்து தொழிலாளர்களை உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர் மத்தியில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. நீதி கோரும் பேரணி அக்டோபர் 2 அன்று 600 தொழிலாளர்களின் பொதுக் கூட்டத்துடன் முடிவு பெற்றது. இதில் பங்கு கொண்;ட மத்தியத் தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அக்டோபர் 5 அன்று தேசிய அளவில் தொழிலாளர்கள் ஆதரவு அமைப்புகள் ஹோண்டா தயாரிப்புகளைப் புறக்கணித்துப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஹோண்டா அலுவலகங்கள் மற்றும் விற்பனைக் கடைகள் முன் இப்போராட்டங்கள் நடத்தப்பட்டன. ராஜஸ்தான் ஜெய்பூர் நகரில் ஹோண்டா விற்பனை அலுவலகத்தின் முன்னர் தொழிலாளர்கள் பிரச்சாரம் நடத்திய போது தாக்கப்பட்டதில் ஒரு தொழிலாளர் மற்றும் ஆதரவாளர் காயமடைந்தனர்.

தமிழ்நாடு தொழிலாளர்களின் ஆதரவு
தமிழ்நாட்டில் இருந்து ஏஐசிசிடியு, அகில இந்திய மாணவர் அமைப்பு மற்றும் புரட்சிகர இளைஞர் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களும் மாணவர்களும் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதத்தில் உள்ள தொழிலாளர்களையும் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஏஐசிசிடியு மாநில செயற் குழு உறுப்பினரும் ஹுண்டாய் தொழிலாளருமான தோழர் ராஜகுரு தொழிலாளர்கள் மத்தியில் பேசினார். ஹோண்டாவில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனை இங்கு மட்டுமல்ல ஹுண்டாய் போன்ற பல வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலைகளிலும் இந்தியா முழுதும் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் நடக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஒரு பக்கம் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சங்க உரிமைகளை மறுக்கும் நிர்வாகம் இன்னொரு பக்கம் ஒப்பந்தத் தொழிலாளர் முறை, பயிற்சியாளர்கள் என்ற பல வகைகளில் தொழிலாளர்களை சுரண்டுவதாக அவர் குறிப்பிட்டார். இன்று முதலாளிகள் பல்வேறு அமைப்புகள் மூலம் தங்கள் நலன்களை பாதுகாக்கும் வேளையில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட வேண்டியுள்ளது என்று கூறிய அவர் வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உள்ள சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டமைப்பு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Com. Rajaguru addressing workers at Jantar Mantar

Com. Rajaguru addressing workers at Jantar Mantar

பிரிக்கால் தொழிலாளர்களுக்காக வாதாடும் தோழர் பாரதி மாருதி, பிரிக்கால் மற்றும் ஹோண்டா தொழிலாளர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் மற்றும் அவர்களின் ஒற்றுமைக்கான எதிர்ப்பை ஒடுக்கும் முறைகளில் உள்ள ஒற்றுமையை குறிப்பிட்டார். மோடி அரசின் வளர்ச்சியும், தேசியவாதமும் அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் மட்டுமே துணை போகக் கூடியது என்று கூறிய அவர், தொழிலாளர், மாணவர், பெண்கள் அமைப்புகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பைக் கட்ட வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்க அங்கீகாரச் சட்டத்திற்கான கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

மஸ்தூர் அதிகார் சங்கர்ஷ் அபியான், டிடியுசி, என்டியுஐ மற்றும் இதரத் தொழிற்சங்கங்கள் இணைந்து தமிழ்நாட்டில் ஹோண்டா தயாரிப்புகளை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை அக்டோபர் 5 அன்று சென்னையில் நடத்தினர். பிரச்சாரத்தை ஒட்டி அலுவலகத்திற்கு காவல்துறை தடுப்புகளையும் காவலர்களையும் நிறுத்தி இருந்தனர். சுமார் 15 சங்கப் பிரதிநிதிகள் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து என்டியுஐ தோழர் சுஜாதா மோடி, தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருக்கும் தோழர்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தார். இப்போராட்டத்தை ஆதரித்து இன்னும் பெரிய அளவில் தொழிலாளர்களை இணைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

DTUC, NTUI, MASA activists protest

DTUC, NTUI, MASA activists protest

ஹோண்டாவின் நெடிய போராட்டத்தை டிடியுசி சங்கப் பிரதிநிதி தோழர் சதிஷ் எடுத்துரைத்தார். சங்க உரிமைக்காக போராடிய 200 நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் 3000 ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நீக்கியதை தோழர் சதிஷ் கண்டித்தார். பல்வேறுப் போராட்டங்களை நடத்திய தொழிலாளர்கள் கடைசியில் வேறு வழியின்றி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். இதுவரை தொழிலாளர்கள் 15 கிலோ வரை எடை குறைந்துள்ளதாக அவர் கூறினார். தொழிலாளர் போராட்டங்களை புறக்கணித்து வரும் ஹோண்டா நிறுவனத்தை தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை தரக் கோரி வலியுறுத்தி நிர்வாகப் பிரதிநிதிக்குப் போராட்டக் குழுவினர் மனு அளித்தனர். மேலும் இது குறித்த துண்டறிக்கையை போராட்டக் குழுவினர் அங்குள்ள பகுதி மக்களுக்கு விநியோகித்தனர்.

Auto Drivers read the pamphlet on Honda struggle

Auto Drivers read the pamphlet on Honda struggle

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.