ரெனால்ட் நிஸ்ஸான் பணியாளர்களைத் தாங்கிச் சென்ற பேருந்தின் மீது சரக்குவண்டி மோதியதால் பன்னிரண்டு தொழிலாளர்களுக்குக் காயம்

மொழியாக்கம்: சாரு

தொழிற்சாலையிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள வாலஜாபாத் வழியாகச் சென்ற ரெனால்ட் நிஸ்ஸான் தொழிலாளர்களை உள்ளடக்கிய சார்ட்டர்ட் பேருந்து அக்டோபர் 18 அன்று விபத்துக்குள்ளானது. காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்த 12 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். தலையில் அடிபட்ட தொழிலாளி ஒருவர் அபாயகரமான நிலையில் தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார். இவ்விபத்தைப் பற்றிய செய்திகள் வெளிவராதது ஆச்சரியமில்லை என்று சொல்லும் தொழிலாளார்கள், இத்தகைய விபத்துகள் அரிதல்ல என்றே கூறுகின்றனர்..

Injured RN Workers

Injured RN Workers

பெயர் வெளியிட விரும்பாத தொழிலாளி ஒருவர் கூறியதாவது “கடந்த 3 மாதங்களில் இதுபோன்று 8 விபத்துக்கள் நடந்துள்ளன. ஓட்டுனர்களது ஓய்வின்மையே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம். போக்குவரத்தில் ஏற்படும் தாமதங்களுக்கு ஓட்டுனர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படுவதால், வாகன நெரிசல் அதிகமுள்ள் நேரங்களில் ஓட்டுனர்கள் விரைந்து செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றனர், மேலும் குறைவான விடுமுறைகளும  பயணங்களுக்கு இடையில் ஓய்வு எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பின்மையுமே ஓட்டுநர்களைக் களைப்படையச் செய்கின்றன.”

தொழிலாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்படுவதும், மருத்துவ செலவுகளைக் காப்பீட்டின் மூலம் பெற்றுக்கொள்ளும் அதே வேளையில் தொழிலாளர் இழப்பீடு சட்டத்தின்மூலமாகவும் பொருளுதவி பெற்றுக்கொள்ள இயலும் என்று ஒருங்கிணைந்த தொழிலாளர் முன்னணியின் உப தலைவர் ரமேஷ் கூறினார். மேலும் அவர், படுகாயமடைந்த தொழிலாளியின் மருத்துவ செலவுகளை நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறினார்.

இடைநீக்கம்

உள்விசாரணை முடிவுறாத நிலையில் ரெனால்ட் நிஸ்ஸானிலுள்ள அங்கீகாரம் பெறாத ஒ.தொ.மு சங்கத்தின் தலைவர் உட்பட 15 தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விடைநீக்கம் உட்பட மொத்தம் 62 இடைநீக்கங்களும் சுமார் நூறு விளக்கம் கோரும் கடிதங்show cause notices)களும் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தில் இணையாமல் ஒ.தொ.மு.யோடு ஈடுபடுத்திக் கொள்ளும் தொழிலாளிகளுக்கு வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்குள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு தொழிலாளி உட்பட இதுவரை நான்கு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் நடைமுறை வரம்புகளையும் தொழிலாளர் நிலையாணையையும் மீறியதாகக் காரணம் காட்டி கடந்த இரண்டு மாதங்களுக்குள் பல்வேறு தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரெனால்ட் நிஸ்ஸானின் பெயருக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஒ.தொ.மு.யின் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட டவுன் ஹால் கூட்டங்களுக்குச் செல்லாததால் மேலும் பலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத தொழிலாளார்கள் கூறியதாவது : அத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலம் நிறுவனத்தால் அங்கீகரிப்பட்ட சங்கத்தைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக புரிந்துகொள்ளப்படும் என்பதாலேயே அக்கூட்டங்களில் கலந்துகொள்ளாததாகவும் அதிலிருந்து விலகி இருப்பதற்கான தங்களது உரிமைகளை நிலைநாட்ட முடிவெடுத்ததாகவும் கூறுகின்றனர்.

இவ்வழக்குகளைத் தொடர்ந்து நடத்தி வருவதாக திரு.ரமேஷ் கூறுகிறார். முந்தைய தருணங்களில் இத்தகைய நடைமுறைகளை அலட்சியம் செய்த விசாரணை அதிகாரியின் நியமனத்தை எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். “தொழிலாளார்களுக்கு எதிராக ஓரவஞ்சனையுடன் நடந்துகொண்டதால் உள்விசாரணையின் தலைமையாக வழக்கறிஞர் சிங்க் பாலை நியமிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம், முந்தைய வழக்கு ஒன்றில் வேறொருவரை நியமிக்க ஒப்புக்கொண்டவர்கள் மீண்டும் அவரையே நியமித்துள்ளனர்.” இந்த வழக்கறிஞர் எதிர்காலத்தில் வேறெந்த விசாரணையிலும் நியமிக்கப்படக் கூடாது என்று ஒ.தொ.மு. வேலை நிறுத்த அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளது.

சம்பள ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தை முயற்சிகள்

சம்பள ஒப்பந்தந்திற்காகவும் சங்கத்தை அங்கீகரிப்பதற்காகவும் ஒரகடம் தொழிலாளர் துணை ஆணையரிடம் வழங்கப்பட்ட மனு இன்னும் நிலுவையில் உள்ளது. சுமார் 3000 தொழிலாளர்கள் வேலை செய்யும் ரெனால்ட் நிஸ்ஸானில் பாதிப்பேர் அந்நிறுவனம் அறிவித்துள்ள சம்பள உயர்வை ஒற்றுக்கொள்ளவில்லை. மேலும், ஏற்கனவே இருப்பது போல, நிறுவனத்திற்கு சாதகமான, நிறுவனத்திற்கும் தனி நபருக்குமிடையிலான சம்பள ஒப்பந்தமாக அல்லாமல், தொழிலாளர் சங்கத்திற்கும் நிறுவனத்திற்குமிடையிலான ஒப்பந்தமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பள உயர்வு பெற்றுள்ள 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மிகைத்தொகையை ஒரு வங்கிக் கணக்கில் சேமித்துவைத்துள்ளனர். இப்பிரச்சனைக்குத் தீர்வு காணவில்லை என்றால் வழங்கப்பட்ட சம்பளத்தைத் திரும்பப் பெறக் கோரி உள்ளனர்.

தொடர்ந்து கொண்டே இருக்கும் இடைநீக்கங்களுடன் போராடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் தெளிவான தீர்வுகளற்ற வகையில் ஒரு ஏமாற்றமிகுந்த முடிவுகளை நோக்கியே நிறுவனத்திற்கும் ஒ.தொ.மு.க்கும் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு, கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்காக, 12(1) விதியின் கீழ் வரும் சம்மன்களை ACL அனுப்பியுள்ளதாக திரு.ரமேஷ் கூறுகிறார். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளின் நிலவரத்தை வைத்துப் பார்த்தால், அவை தோல்வியிலே முடிவதற்கே அதிக வாய்ப்புள்ளது என்றும் இப்பிரச்சனை தொழிலாளர் நீதிமன்றங்களில் தான் தீர்க்க வேண்டி வரும் என்றும் அவர் உணர்கிறார்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.