ரெனால்ட் நிசான் தொழிற்சாலையில் தொழிலாளர் மரணம்

ஜனவரி 6 அன்று மாலையில் 26 வயதான ஜுனியர் என்ஜினியர் தியாகராஜன் ரெனால்ட் நிசான் தொழிற்சாலையில் பாராமரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போது ஹைட்ராலிக் பிரஸ்சினால் நசுக்கப்பட்டு இறந்து விட்டார். என்ஜின்களை பொருத்தும் பவர் ட்ரெய்ன் செக்ஷனில் உள்ள இயந்திரங்களை அவர் அப்போது பராமரித்து கொண்டிருந்தார். விபத்திற்கான முழு விவரங்கள் இதுவரை விவரிக்கப்படவில்லை. விபத்திற்கு பின்னர் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு திட்டங்களை பரிசீலனை செய்வதற்காக தொழிற்சாலை இன்றும் மூடப்படுவதாக நிறுவனம் கூறியுள்ளது.

Renault Nissan Statement on Workers Death

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கற்றுள்ள தொழிலாளர் தியாகராஜன் நிரந்தரத் தொழிலாளராக சில வருடங்களாக ரெனால்ட் நிசான் தொழி;ற்சாலையில் பணி புரிந்து வந்தார். அவருக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்ததாக அவர் உறவினர் கூறினார். குடும்பத்தினருக்கு உடனடியாக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் 3 மணி நேரம் கழித்து தான் தகவல்கள் கூறப்பட்டன என அவர் குற்றம் சாட்டினார். காவல் துறை முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பிக்காததால், குரோம்பேட்டைக்கு எடுத்து செல்லப்பட்ட அவருடைய உடலை குரோம்பேட்டை பொது மருத்துவமனை நேற்று இரவு பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ளவில்லை. ஆனால் ஓரகடம் காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 6 மாதங்களில் இப்பகுதிகளில் உள்ள முக்கிய ஆட்டோ தொழிற்சாலைகளில் நடக்கும் மூன்றாவது விபத்தாகும். இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹுண்டாய் தொழிற்சாலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு கட்டிடத் தொழிலாளர் விபத்தில் மரணம் அடைந்தார். அதே தொழிற்சாலையில் ஒரு பயிற்சியாளர் தொழிலாளருக்கு; கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இத்தகைய விபத்துகள் தொழிற்சாலைகளில் உள்ள பாதுகாப்பின்மையையும் அரசின் மெத்தனப்போக்கையும் வெளிக்காட்டுகின்றன. தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவதன் மூலம் தொழிலாளர் ஆய்வாளர்களின் பணிகளை இன்னும் நீர்த்து செய்ய மத்திய அரசு சட்டங்களை மாற்றி வருகிறது. இதனால் இன்றும் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , . Bookmark the permalink.