தவறாக தண்டனை அளிக்கப்பட்ட ‘பிரிக்கால் 8’ன் ஆறு தொழிலாளர்களுக்கு விடுதலை – 10 வருடங்களுக்கு பின்னர் கிடைத்த நீதி

திடீரென்று வேலை செய்யாத சிசிடிவி கேமரா, ஒரு மரணம், மாற்றம் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை. மாநேசர் மாருதியில் நடந்த சம்பவத்தைப் போல பிரிக்கால் நிறுவன மேலாளர் ராய் ஜார்ஜ் மரணத்திலும் தகவல்கள் குறித்த குழப்பங்களே தென்படுகின்றன. குழப்பமான செய்திகள் இருந்தும் அரசு கட்டமைப்பு 8 தொழிலாளர்களை சிறையில் வைக்கத் தயங்கவில்லை. 10 வருடங்களுக்கு பின்னர் தவறாக தண்டனை அளிக்கப்பட்டதாக ‘பிரிக்கால் 8’ என தொழிலாளர் வட்டாரத்தில் அழைக்கப்பட்ட 8 தொழிலாளர்களில் 6 பேரை சென்னை உச்ச நீதி மன்றம் விடுவித்துள்ளது.

Source: AICCTU

2009 செப்டம்பர் 21 அன்று பிரிக்கால் மனித வள துணைத் தலைவர் ஜார்ஜ் அவருடைய அலுவலகத்தில் இறந்து கிடந்தார். சில ஆண்கள் அவரை இரும்புக் கம்பிகளால் தாக்கியதனால் அவர் இறந்தார் எனக் கூறப்பட்டது. ஜார்ஜ் மீது தாக்குதல் காலை 11:40 மணிக்கு நடந்ததாகவும், அவரைத் தாக்கிய ஆண்கள் சென்றவுடன் அவர் மருத்தவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவர் இறந்தார் எனவும், அவருடன் இருந்த இன்னும் 4 பேர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் கூறப்பட்டன. மாலை 4:30 மணியளவில் மருத்துவமனை இது குறித்து காவல் துறைக்கு செய்தி தெரிவிக்க, உள்ளுர் துணை ஆய்வாளர் புகாரைப் பதிவு செய்துள்ளார். மாலை 6:30 மணிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அன்று இரவு 10 மணிக்கு 6 பிரிக்கால் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். காவலில் இருந்தபோது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறை கூறியுள்ளது. ஆளால் வழக்கில் உள்ள முரண்பாடுகள் சீக்கிரமே வெளியாகின.

அடுத்த நாள் முதல் தகவல் அறிக்கையை மாவட்ட குற்றவியல் நடுவர்(மாஜிஸ்ட்ரேட்) முன்னர் சமர்ப்பித்த போது, இன்னும் பல தொழிலாளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. முதலில் கொடுத்தப் புகாரிலேயே தகவல்கள் மட்டுமல்லாமல் ‘கணிப்புகள்’ சேர்க்கப்பட்டுள்ளதாக நீதி மன்ற தீர்ப்பு கூறுகிறது. ஜார்ஜ் அவர்களின் அலுவலகத்தின் வெளியே உள்ள சிசிடிவி கேமரா அன்று மர்மமான முறையில் பழுதாகி எதையும் பதியவில்லை. ’11:40 மணியளவில் மேலாளர் அறையில் தாக்குதல் நடந்ததாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. ஆனால் அதே சமயம் குற்றத்தை விசாரித்த காவலர் 11:41 முதல் 11:46 வரை தொழிற்சாலைக்குள் மனித வளத் துறைப் பகுதியில் மஃப்டியில் இருந்ததாக கூறியுள்ளார். அபபோது தொழிற்சாலைக்குள் கொலைத் தாக்குதல் நடக்கிறது என்று பிரிக்கால் நிர்வாகம் தன்னிடம் கூறவில்லை என நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்’. இது குறித்து முன்னாள் எழுதிய கட்டுரையில் மதுமித்தா தத்தா பதிவு செய்துள்ளார்.

Source: AICCTU

இதைத் தவிர தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து நிர்வாகம் புகார் செய்ததால், தொழிற்சாலைக்கு வெளியே காவலர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் வேறு ஈடுபட்டிருந்தனர்.
இத்தனை முரண்பாடுகள் இருந்தும், வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் எட்டு தொழிலாளர்களுக்கு ‘இரட்டிப்பு ஆயுள் தண்டனை’ கடுமையான சிறைத்தண்டனையுடன் அளித்தது. 2012ல் தீர்ப்பு வந்ததில் இருந்து இதை எதிர்த்து நாடெங்கும் ‘பிரிக்கால் 8 பேரை விடுதலை செய்’ என்பதே தொழிற்சங்கங்களின், தொழிலாளர் போராளிகளின் முழக்கமாக இருந்தது.

பிரிக்கால் தொழிற்சங்க போராட்ட வரலாறு
பிரிக்கால் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். ட்ரைவர் இன்பர்மேஷன்ஸ் சிஸ்டம்ஸ், சென்சர்ஸ், ஸ்பீட் கவர்னர்ஸ் ஆகிய பாகங்களை தயாரிப்பதில் வல்லமை பெற்றுள்ளது. உள்ளுர் தயாரிப்பாளர்களான மஹிந்திரா, பஜாஜ், ஹோண்டா, மாருதி சுசுகி, ரெனால்ட் நிசான் ஆகிய நிறுவனங்களும், சர்வதேச தயாரிப்பாளர்களான ஹார்லே டேவிட்சன், வோல்வோ ஆகிய நிறுவனங்களும் பிரிக்காலின் வாடிக்கையாளர்கள். இந்தியா முழுவதும் இந்நிறுவனம் கோயம்பத்தூர், உத்தராக்கண்ட், பூனா, குர்காவ் ஆகிய பகுதிகளில் 7 தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து வருகின்றது. இந்தோநேசியா, சிங்கப்பூர், ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகளில் இதற்கு கிளைகள் உண்டு. மெக்சிகோவிலும் வியட்நாமிலும் கிளைகளை நிறுவுவதற்கு இந்நிறுவனம் முயற்சித்து வருவதாக ஏஐசிசிடியுவின் தேசிய பொதுச் செயலாளர் எஸ். குமாரசாமி கூறுகிறார்.

இந்நிறுவனம் வெற்றிகரமாக வளர்ந்து கொண்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் இதன் நிதி வருவாய் ரூ1000 கோடியை எட்டியது. இந்நிறுவனம் ரூ11.5 கோடி ரூபாய் லாபப்பங்காக கடந்த வருடத்தில் கொடுத்துள்ளது. 2020ல் ரூ3000 கோடி வருவாய் இலக்காக கொண்டுள்ளது. 2016 மார்ச் 31 நிலவரம் படி, இந்நிறுவனம் 5100 தொழிலாளர்களை பணியில் வைத்துள்ளது. இதில் 650 பேர் நிரந்தரத் தொழிலாளர்கள். 2016 ஆண்டு அறிக்கையில் மேலாண்மையில் இல்லாத தொழிலாளர்களுக்கு(உற்பத்தியில் ஈடுபடும்) ஊதிய உயர்வு 9சதம் கொடுத்துள்ளது. அதே சமயம் மேலாண்மை ஊழியர்களுக்கு கொடுத்துள்ள ஊதிய உயர்வு 160சதம் ஆகும்.
2007 ஆம் ஆண்டில் பிரிக்கால் தொழிலாளர்கள் உரிய ஊதியம் மற்றும் இதர கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கம் அமைத்தனர். மேலாளர் ஜார்ஜ் இறந்து 3 வருடங்களுக்கு பின்னர் 2012ல் கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் சங்கம் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. 25 வருடம் பணி புரிந்த ஒரு தொழிலாளருக்கு மாத ஊதியம் ரூ 8522, ஓய்வு பணிக்கொடை ரூ 1 லட்சம் தான. தற்போது 25 வருடம் பணி புரியும் தொழிலாளருக்கு மாத ஊதியம் ரூ24500 ஆகவும் பணிக்கொடை ரூ3.5 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.

2016ல் தொழிலாளர் கூடத்திடம் தோழர் குமாரசாமி கூறியது போல, ‘மாவோயிஸ்டுகளும், இடது சாரி தீவிரவாதிகளும் தொழிற்சங்கத்தை கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர்களால் தொழிற்சாலைக்கு தீங்கு விளையும், நாங்கள் கோயம்புத்தூரை விட்டு வெளியே செல்ல நேரிடும் என நிர்வாகம் கூறியது. பின்னர் அவர்கள் பல்வேறு பழிவாங்கல் நடவடிக்கைகளில் இறங்கினர். தொழிலாளர்கள் அதை தாங்கினர். 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் தொழிலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டன. பெண் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். குற்ற வழக்குகளை கையாள்வது மிகவும் சிரமமாக இருந்தது. 150 தொழிலாளர்களுக்கு மேல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஊதியத்தை பிடித்து ஊதிய உயர்வை மறுத்தனர். பல்வேறு தொழிலாளர்களுக்கு வேலை தொடர்ச்சி மறுக்கப்பட்டது. ஆனாலும் இதை எல்லாம் மீறி தொழிலாளர்கள் போராடியதன் விளைவாக, நிர்வாகம் 2011ல் தொழிற்சங்கத்தை அங்கீகரித்தது’.

ஆதாரம் போதாமலும் தண்டனை
சிறையில் உள்ள எட்டுத் தொழிலாளர்களில் 6 தொழிலாளர்களை விடுவக்கக் கோரி சென்னை உயர் நீதி மன்றம் 2017 ஜனவரி 19 அன்று ஆணை பிறப்பித்தது. விசாரணை நீதி மன்றத்தில் கொடுத்த உத்தரவை எதிர்த்துத் தாக்கப்பட்ட மேல் முறையிPட்டை கேட்ட இரண்டு நீதிபதிகள் மற்ற இரண்டுத் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஆயுள் தண்டனையைக் குறைத்து ஒரு ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளனர். இரண்டுத் தொழிலாளர்களின் மேலான தண்டனை தொழிற்சாலையின் ஒரு உதவி மேலாளர் சாட்சியின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. மற்ற 6 தொழிலாளர்கள் மீதான உதவி மேலாளரின் சாட்சியம், இறந்தவரின் பிரேதப் பரிசோதனைக்கு முரண்பட்டிருந்ததால், சாட்சி நிராகரிக்கப்பட்டது.
அரசு தரப்பு வக்கீல் மேலும் 5 நேரில் கண்ட சாட்சிகளை நீதி மன்றத்தில் சமர்ப்பித்தனர். ஆனால் அவர்களின் சாட்சியை நீதிபதிகள் பல்வேறு காரணங்களால் நிராகரித்தனர். ஒரு சாட்சி நிறையத் தொழிலாளர்கள் இரும்புக் கம்பிகளுடன் தொழிற்சாலைக்குள் வந்து ஜார்ஜை தாக்கியதாகக் கூறினார் ஆனால் அவரால் எந்தத் தொழிலாளரையும் அடையாளம் காண முடியவில்லை. இன்னொரு சாட்சி சம்பவத்தை நேரடியாக பார்க்கவில்லை. ஒரு சாட்சி குற்றம் சாட்டப்பட்டத் தொழிலாளரை அடையாளம் காட்ட முடியவில்லை. பிரிக்கால் நிர்வாகத்தில் வேலை செய்த ஒரு சாட்சி கூறிய தகவல் மருத்துவ சாட்சியுடன் ஒத்துப் போகவில்லை.

இந்த எட்டுத் தொழிலாளர்கள் தவிர முதல் வழக்கில் குமாரசாமி உட்பட இன்னும் 19 பேர் மேல் இத்தாக்குதலை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 2012 விசாரணை நீதிமன்றம் 19 பேர் மேல் உள்ள குற்றச்சாட்டை ரத்து செய்தது. ஆனால் பிரிக்கால் நிர்வாகம் சாட்சி உதவி மேலாளரை வைத்து மேல் முறையீடு செய்தது. உயர் நீதி மன்றம் மேல்முறையீட்டை நிராகரித்து 19 பேரை விடுதலை செய்த தீர்ப்பை நிலை நிறுத்தியது. நிர்வாகத் தரப்பு சாட்சிகள் இரண்டு பேரும் பழிவாங்குவதற்காக கொண்டுவரப்பட்ட சாட்சிகள் என்று நீதி மன்றம் கூறியுள்ளது.

பிரிக்கால் 8 தொழிலாளர்களுக்கு இது ஒரு முக்கிய தீர்ப்பாகும். ஆனால் அவர்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை. தண்டனை அளிக்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி தொழிற்சங்கம் உச்ச நீதி மன்றத்தில் முறையிட உள்ளது.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.