மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதூர் போராட்ட தொகுப்புகள்

(Translation of updates from struggles in Sripembudur and Marailmalai Nagar)

டெக்சல் இன்டர்நேஷனல் தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை

மறைமலை நகரில் உள்ள டெக்சல் தொழிற்சாலையில் வேலை செய்யும் 78 நிரந்தரத் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் ரூபாய் 1 லட்சத்துடன் விருப்ப ஓய்வு அறிவித்தது. 41 நிரந்தரத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெற்று பணியை விட்டு விலகிய நிலையில் 37 தொழிலாளர்கள் தங்கள் வேலைக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். உயர் நீதி மன்றத்தி;ல் தொழிலாளர்கள் சார்பாக இது குறித்து தீர்ப்பு வந்துள்ள நிலையில், நிர்வாகம் தொழிலாளர்களை காலை 3 மணிக்கு வேலைக்கு வர சொல்லி நிர்ப்பந்தித்துள்ளது. அவ்வாறு 3மணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு 4 மணி நேரம் வேலை கொடுத்து 4 மணி நேர இடைவேளைக்கு பின்னர் மீண்டும் 4 மணி நேர வேலை என்று வேலை நேரத்தை அதிகரித்துள்ளது நிர்வாகம். தொழிற்சாலைக்கு சரியான போக்குவரத்து இல்லாத நிலையில் தொழிலாளர்கள் வேலைக்காக 14மணி நேரத்திற்கு மேலாக செலவிட நேரிடுகிறது. நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்தது தொழிலாளர் துறை முன்னர் தொழிற்தாவா எழுப்பப்பட்டு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. சிஐடியு தொழி;ற்சங்கம் தொழிலாளர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளனர். தொழிலாளர்களுக்கு பிஎஃப் கட்டப்படாமல் உள்ள நிலையில் தொழிற்சங்கம் இது குறித்தும் பிஎஃப் அலுவலகத்தில் முறையீடு செய்துள்ளனர்.

காம்ஸ்டார் நிர்வாகம் எஸ்எஸ்டி துறையில் உள்ள 26 தொழிலாளர்களுடன் விருப்ப ஓய்வு பேச்சுவார்த்தை

2011ல் வேலை நிறுத்தம் செய்ததற்காக 36 தொழிலாளர்களை தனிமைப்படுத்தி எஸ்எஸ்டி டிபார்ட்மென்ட எனப் புதுத் துறையை உருவாக்கி காம்ஸ்டார் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது கடும் தாக்குதலை தொடர்ந்து வந்தது. 10 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு அல்லது வேறு பணிகளை நோக்கி சென்று விட, 26 தொழிலாளர்கள் முறையான வேலைக்காக போராடி வந்தனர். 2015ல் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு காம்ஸ்டார் நிறுவனம் விருப்ப ஓய்வு அறிவித்தது. இதில் 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உட்பட 100 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் சென்று விட்டனர். 2015ல் கூட்டு பேர பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிர்வாகம் எம்பிளாயி ரிலேஷன்ஸ் குழு(நுசுஊ) ஒன்றை நிறுவியது. இதில் 5 உறுப்பினர்கள் தொழிலாளர் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காம்ஸ்டார் தொழிற்சங்கத்தின் சார்பாக தொழிலாளர்கள் போட்டியிட்டு 5 உறுப்பினர்களில் 4 உறுப்பினர் பதவிகளை தொழிற்சங்க தொழிலாளர்கள் கைப்பற்றியுள்ளனர். நுசுஊ நிர்வாகத்திற்கு கொடுத்த கோரிக்கைகளுக்கு பதிலாக நிர்வாகம் கொடுத்த கோரிக்கைகளில் எஸ்எஸ்டி தொழிலாளர்கள் குறித்த கோரிக்கைகளை ஏற்க நுசுஊ மறுத்து விட்டனர். எஸ்எஸ்டி தொழிலாளர்களை முறையான வேலையில் அமர்த்த நிர்வாகம் மறுத்து விட்ட நிலையில், எஸ்எஸ்டி தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொழிலாளர்களுக்கு நிர்வாகம் 23 லட்ச ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளது. இதில் உள்ள சட்டப்படியான கொடுக்க வேண்டிய தொகை குறைவாக உள்ளதால் தொழிலாளர்கள் மறுத்து வருகின்றனர்.

மேஜிக் வுட்ஸ் தொழிற்சாலையில் 27 தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு

மேஜிக் வுட்ஸ் தொழிற்சாலையில் 48 நிரந்தரத் தொழிலாளர்களும் 350க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை செய்து வந்தனர். இங்கு குறைந்த பட்ச ஊதியம் கொடுக்கவில்லை என்று தொழிற்சங்கம் நிர்வாகத்தின் மேல் வழக்குத் தொடுத்ததனால் 4 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க நிர்வாகம் மறுத்து தொழிற்தாவா சட்டம் 18(1)ன் கீழ் ஊதிய உயர்வு கொடுத்தது. இதில் 21 தொழிலாளர்கள் கையெழுத்திட, மற்ற தொழிலாளர்கள் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கோரி வந்தனர். இந்நிலையில் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு 5-7 லட்ச ரூபாய் விருப்ப ஓய்வு கொடுக்க முன்வந்துள்ளது. தொழிற்சங்க அங்கீகாரம் கோரி வந்த 27 தொழிலாளர்களும் இதை ஏற்றுள்ளனர். தொழி;ற்சங்கத்தில் இருந்து வெளியே வந்து மீண்டும் வேலை தொடர விரும்பும் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வேலை அளித்துள்ளது. 21 தொழிலாளர்கள் தங்கள் வேலையை தொடர முடிவு செய்துள்ளனர். இவர்கள் குறைந்த பட்ச ஊதிய வழக்கில் ஈடுபடக் கூடாது என்று நிர்வாகம் கோரியதாக தொழிற்சங்க உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

ஸ்பெல் தொழிலாளர்கள் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்துடன் இணைப்பு

ஸ்பெல் தொழிலாளர்கள் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்துள்ளனர். தொழிற்சாலையில் ஆட்குறைப்பு செய்ய கோரி 137 தொழிலாளர்களை வேலை விட்டு நீக்க ஸ்பெல் நிர்வாகம் தொழிலாளர் துறையிடம் மனு அளித்துள்ளதாக சிஜடியு தொழிற்சங்கப் பிரதிநிதி கூறியுள்ளார். ஆட்குறைப்பை ஐஎன்டியுசி எதிர்த்துள்ள நிலையில் தொழிலாளர் துறை இதற்கு அனுமதி தரவில்லை என்று அவர் கூறினார். ஏற்கனவே நிர்வாகம் 147 தொழிலாளர்களை வேலை விட்டு நீக்கியிருந்தது. அவர்கள் வழக்கு தற்போது தொழிலாளர் நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது.

23 ஜேபிஎம் தொழிலாளர்கள் வேலை நீக்கம்

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக மறைமலை நகரில் உள்ள ஜேபிஎம் நிர்வாகம் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்றியது. தற்போது நிர்வாகம் 23 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து தொழிலாளர் துறையில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தொழிற்தாவா எழுப்பபட்டுள்ளது.

சிஎம்ஆர் டயோட்சு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் நிர்வாகம் நிரந்தரத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்தத மறுப்பு

தொழிற்சங்கத்தை அங்கீகரித்தல், தொழிலாளர்களின் வேலை மாற்றத்தை வாபஸ் பெறக் கோரி கடந்த இரண்டு மாதங்களாக சிஎம்ஆர் டயோட்சு நிறுவனத்தின் 19 நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் எழுப்பிய தொழிற் தாவா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை ஒட்டி தொழிலாளர் நீதி மன்றத்தில் வழக்கு கோர தொழிலாளர்கள் முடிவு செய்தனர். இதை ஒட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியதை அடுத்து நிர்வாகம் தொழிலாளர்களை வேலையில் சேர்க்க மறுத்து வருகின்றது. இது குறித்து தொழிலாளார்கள் தொழிற்தாவா எழுப்பியுள்ளனர் ஆனால் நிர்வாகம் கடந்த இரண்டு விசாரணையில் கலந்து கொள்ளவில்லை.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , . Bookmark the permalink.