மாருதி சுசூகி தீர்ப்பு : அரசியல் தண்டனைக்கு எதிரான வர்க்க எழுச்சி

மாருதி தொழிலாளர்களுக்கு எதிரான தண்டனையை நீக்கக் கோரி தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் உணவு புறக்கணிப்பு, போராட்டங்கள்

2012 ஜுலை 18ல் மாருதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மனித வள மேலாளர் இறந்த பின்னர் நடைபெற்ற 4 ஆண்டு வழக்கில் மாருதி சுசூகி தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட 31 தொழிலாளர்களுக்கு நீதி மன்றம் தண்டனை வழங்கியுள்ளது. 3 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்ட 148 தொழிலாளர்களில் 117 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது, 13 பேருக்கு கொலை வழக்கின் கீழ் தண்டனை வழங்கியுள்ளது, 18 பேர் மேல் தீங்கு விளைவித்ததாக தண்டனை வழங்கியுள்ளது. இன்று 17 மார்ச் அன்று 31 தொழிலாளர்களுக்கு தண்டனை அளவை நீதிமன்றம் விதிக்க உள்ளது.

தமிழநாட்டின் பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் உணவு புறக்கணிப்பு

CNF automotive, Oragadum

Diamond Chain, Ambattur

 

 

 

 

 

 

Workers at Innovators

 

On Load Gears workers, Chennai

 

 

 

 

 

சான்மீனா, ஆன் லோட் கியர்ஸ், சிஎன்எஃப் ஆட்டோமோடிவ் ஓரகடம்,  டயமன்ட் செயின்ஸ் ஆகிய தொழிற்சாலைகளில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக உணவுப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. ஒரு தொழிலாளரை சாதிப் பெயர் வைத்து திட்டிய பொது மேலாளரின் மேல் நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வரும் சான்மீனாத் தொழிலாளர்கள் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் உணவைப் புறக்கணித்த போது பெண் தொழிலாளர் ஒருவர் உட்பட நான்கு தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு சிகி;ச்சை அளிக்கப்பட்டது. மார்ச் 17 அன்று ஹுண்டாய் தொழிற்சங்கங்கள் உணவுப் புறக்கணிப்பிற்காக அழைப்பு விடுத்துள்ளன. கோயம்பத்தூர் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்களும் தங்கள் தொழிற்சாலை காண்டின்களில் உணவுப் புறக்கணிப்பு செய்தனர்.

Shanti Gears Coimbatore

சென்னையில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள்

AICCTU Protest at Ambattur

சென்னை அம்பத்தூரில் மார்ச் 16 அன்று ஏஐசிசிடியு ஒருங்கிணைத்த ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் டிஐ சைக்கிள்ஸ், டயமன்ட் செயின்ஸ், இன்னவேட்டர்ஸ், ஆன் லோட் கியர்ஸ், சாய்மீரா, ஜெய் என்ஜினியரிங், சான்மீனா, கேட்டர்பில்லர் ஆகிய தொழிற்சாலையில் இருந்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சாய்மீரா, கேட்டர்பில்லர், பிரிக்காலில் இருந்து இரட்டிப்பு ஆயுள் தண்டனையில் இருந்து விடுதலையான தோழர் குணபாலன், ஹுண்டாய் தோழர் ராஜகுரு கலந்து உரையாடினர்.

Workers ending hunger fast

ஏஐசிசிடியுவிலன் மாவட்ட செயலாளர் தோழர் பழனிவேல் தiலைமையேற்றார். மாநிலத் தலைவர் தோழர் ஏஸ்.குமார் முடிவுரையாற்றினார். கலவரம் நடந்த 2012லும் 2013லும் மாருதியின் வருமானம் மற்றும் லாபங்களை பட்டியலி;ட்ட அவர், மாருதி நிர்வாகம் தொழிலாளர்கள் மேல் நடத்திய ஒடுக்குமுறையை விவரித்தார்.

பிரிக்காலில் ஒரு மனித வள மேலாளர் இறந்த போது தான் விடுமுறையில் திண்டுக்கலில் இருந்ததை விவரித்த தோழர் குணபாலன், எவ்வாறு தனக்கெதிராக வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதை விவரித்தார். மாருதி வழக்கிற்கும் பிரிக்கால் வழக்கிற்கும் இடையே உள்ள ஒற்றுமையை அவர் எடுத்துக் காட்டினார். மார்ச் 23 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற உள்ள பேரணியிலும், மே 1 அன்று கோயம்பத்தூரில் நடைபெற உள்ள பேரணியிலும் பிரிக்கால் மாருதி தொழிலாளர்களின் ஒடுக்குமுறையை எதிர்த்து பிரச்சாரங்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார். ஏஐடியுசி, சிஐடியு மற்றும் குமுக விடுதலைத் தொழிலாளர்கள் இயக்கப் பிரதிநிதிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Workers at NDLF Protest, Avadi

டிஐ சைக்கிள்ஸ், ட்யூப்ஸ் இந்தியா மற்றும் அமைப்பு சாரா துறைகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணித் தொழிலாளர்கள் ஆவடியில் போராட்டம் நடத்தினர். மாருதி தீர்ப்புக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு நீதி கோரியும், முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ள நீதிமன்றத்தை மாற்றவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். என்டிஎல்எப் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமையேற்றார். மாநிலப் பொருளாளர் தோழர் விஜயக்குமார் மாருதி தொழிற்சாலையில் இருநத ஒடுக்குமுறை குறித்தும், மாருதி நிர்வாகத்தின் சட்டப்புறம்பான நடவடிக்கைகளையும் குறித்து விவரித்தார். மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் புதுச்சேரி, ஒசூர் மற்றும் கோயம்பத்தூரிலும் நடைபெற்றது.

COm. Mukundan addressing the demonstation

NDLF Protest Banner

 

 

 

 

 

 

 

அனைத்துத் தோழர்களும் தொழிலாளர்கள் குறித்தான வழக்குகள் தொழிலாளர்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவான மனப்பான்மைகளிலேயே விசாரிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டினர். இவைகளை ‘அரசியல் தீர்ப்புகளாக’ அவர்கள் கருதினர். தொழிலாளர் சட்டங்களை மதிக்காத முதலாளிகளு;ககும் நிர்வாகங்களுக்கும் எதிராக போடப்படும் வழக்குகள் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றன. ஆனால் தொழிலாளர்களுக்கு எதிரான வழக்குகளில் தொழிலாளர்கள் மீது கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. 1921ல் பி அன்ட் சி மில் தொழிலாளர்கள் ஆங்கிலேய நிர்வாகத்தின் கீழ் கண்ட ஒடுக்குமுறைக்கும் இன்றைய ஒடுக்குமுறைக்கும் எந்த வித்தியாசம் இல்;லை என்று தோழர் விஜயக்குமார் கூறினார். பிரிக்கால் மற்றும் மாருதி பொய் வழக்குகளில் 3க்கும் மேலாக சிறையில் வாடியத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் கூட பங்கேற்கா வண்ணம் அரசு செயல்முறை கண்டனத்திற்கு உரியத என்றும் எந்த காரணமும் இல்லாமல் சிறையில் வாடியத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று தோழர் ஏஸ்.குமார் கோரினார்.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு சிறையில் வாடிய இன்னொரு தொழிலாளரின் ஆதரவு

‘பிரிக்கால் 8’ தொழிலாளர்களில் ஒருவரான தோழர் குணபாலன் கடந்த மாதத்தில் தான் உயர் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். மாருதி தொழிலாளர்களின் போராட்டம் தனிப்பட்ட போராட்டம் இல்லை என்றும், அனைத்து தொழிலாளர்களும் இத்தருணத்தில் மாருதி தொழிலாளர்களோடு துணை நிற்க வேண்டும் என்று அவர் கூறினார். பல வருடங்களாக சிறையில் வாடிய போது சகத் தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், குடும்பத் தலைவர்கள் தங்களை வந்து சந்திக்கும் தருணங்கள் தங்களுக்கு ஊக்குவிப்பதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர், எங்கள் குடும்பங்களுக்கு நிதி திரட்டி உதவி செய்கின்றனர் என்பது எங்களை உற்சாகம் இழக்காமல் இருக்க உதவியது என்று அவர் கூறினார். கைது செய்யப்பட்டுள்ள மாருதி தொழிலாளர்களுடன் உழைக்கும் வர்க்கம் நிற்கும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

நாடு முழுவதும் போராட்டம்

Workers Marching in Solidarity

Mess at Daikin during Lunch

 

 

 

 

 

protestors at Haryana Bhavan,

Workers at Bhilai in Solidarity

 

 

 

 

 

நாட்டின் பல பகுதிகளில் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்றன. குர்காவ்-மாநேசர்-தாருஹேரா-பவால்-நீம்ரானா பகுதிகளில் 40 தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உணவுப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். இதில் நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். மார்ச் 15 அன்று அனைத்து தொழிற்சங்கங்களும் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தி மார்ச் 17 தண்டனை வழங்கும் நாள் அன்று நீதிமன்றத்தில் கூட அழைப்பு விடுத்தனர்.

புது தில்லியில் மாருதி தொழிலாளர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஹரியானா பவன் முன் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஜந்தர் மந்தருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு போராட்டம் தொடர்ந்தது.

பஞ்சாப் லூதியானா, பிலாய் மற்றும் ருத்ரப்பூரிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

This entry was posted in Automobile Industry, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.