தொழிற்சாலையில் இறந்த தொழிலாருக்கு நீதி கேட்ட தொழிலாளர்கள் கைது – மாநேசரில் நடந்த கொடுமை

Growth cares for no Graves

மாநேசர் எஸ்பிஎம் ஆட்டோகாம்ப் தொழிற்சாலையில் நடந்த ஒரு விபத்தில் சத்ருகன் பிரசாத் எனும் இடம் பெயர் தொழிலாளர் கன்வேயர் பெல்ட் ஒன்றில் சிக்கி இறந்தார். இந்த சம்பவம் ஏப்ரல் 7 அன்று நடந்தது. எஸ்பிஎம் நிர்வாகத்தின் அலட்சியத்தின் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக அங்கு வேலை செயு;யம் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். அடிபட்ட தொழிலாளரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குழு வந்தும் அவர்களுக்கு அனுமதி கொடுக்காமல் நிர்வாகம் நேரத்தை வீணாக்கியதாக அவர்கள் கூறுகின்றனர். ‘அடிபட்ட உடனேயே தொழிலாளரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார்’ என அப்போது தொழிற்சாலையில் வேலை செய்த சிவமோகன் எனும் தொழிலாளர் கூறுகிறார்.

எக்சாஸ்ட் மேனிபோல்ட்களை(Exhaust manifold) தயாரிப்பதில் எஸ்பிஎம் தொழிற்சாலை இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது. மாருதி சுசுகி, டாடா மோட்டர்ஸ், ஹுண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு விற்கின்றது. இந்த தொழிற்சாலையில் சுமார் 300 நிரந்தரத் தொழிலாளர்களும் ஒரு சில ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு எந்த தொழிற்சங்கமும் கிடையாது.

சம்பவம் நடந்த பிறகு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மாருதி உட்பட 40 தொழிற்சாலைகளில் இருந்து தொழிலாளர்கள் எஸ்பிஎம் தொழிற்சாலைக்கு சென்றனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத நிர்வாகம் காவல்துறையை வைத்து தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் ஐபிசி பகுதி 147, 148, 323, 427, 452, 506 மற்றும் 102 பி ஆகிய பிரிவுகளின் கீழ் 23 தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. கலவரம், சட்டத்திற்கு புறம்பாக ஒன்று சேர்தல், காயப்படுத்துதல், பொருட்களை சேதம் செய்தல் , குற்றம் செய்ய சதி தீட்டுதல் ஆகிய பிரிவுகள் ஆகும் இவை. குற்றம் சாட்டப்பட்டத் தொழிலாளர்கள் மாருதி மற்றும் ஹோண்டா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆவர்.

நிறுவனத்திற்கு எதிராக காவல்துறை எந்த வழக்குகளையும் போடவில்லை. மாறாக நிர்வாகத்திற்கும் இறந்தத் தொழிலாளர் குடும்பத்திற்கும் இடையே கட்டப் பஞ்சாயத்து வேலை செய்துள்ளனர். தொழிற்சங்க விபத்துகள் எங்கு நடந்தாலும் அவற்றை தொழிலாளர்கள் கவனக் குறைவாகவே காவல்துறை பதிவு செய்கின்றனர். நிர்வாகத்திற்கும் விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே அவர்கள் முடிவு செய்கின்றனர். அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை. இதே போல் சமீபத்தில் ரெனால்ட் நிசான் தொழிற்சாலையிலும் நடந்த விபத்தை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம்.
இதே போல் தான் தாருஹேரா பகுதியில் சமீபத்தில் ஓமாக்ஸ் தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட அஜய் பாண்டே எனும் ஒப்பந்த தொழிலாளர் தற்கொலை செய்து கொண்டார். அப்போதும் ஓமாக்ஸ் நிர்வாகம் இறந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு நிவாரணம் அளித்து காவல்துறை மற்றும் தொழிலாளர் துறை உதவியோடு குற்ற விசாரணைகளில் இருந்து தப்;பித்துக் கொண்டது.

மாருதி தொழிலாளர்கள் வழக்கில் தரப்பட்டுள்ள தீர்ப்பிற்குப் பின்னர் இப்பகுதியில் உள்ளத் தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க ஒற்றுமை வளர்ந்து வருகிறது. மாருதியும் மற்ற நிர்வாகங்கள் இது குறித்து கவலை அடைந்துள்ளனர். காவல்துறையின் நடவடிக்கை இதன் வெளிப்பாடே. அதனால் தான் நிரவாகத் தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொழிற்சங்கவாதிகள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. தொழிற்சங்கவாதிகள் கைது செய்யபட்டால் இத்தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அனைத்து தொழிலாளர்கள் மீதான வழக்குகளை நீக்க அவர்கள் கோரியுள்ளனர்.

நிர்வாகத்தின் போக்கும், அதற்கான எந்த தண்டனையும் தரப்படாதது தொழிலாளர் வாழ்க்கை அதுவும் இடம் பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையின் மீது உள்ள மதிப்பின்மையை காட்டுகிறது. நிர்வாகத்தின் அச்சத்திற்கு செவி சாய்த்து அரசு இத்தொழிலாளர்களை பல வருடங்கள் சிறையில் அடைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

This entry was posted in Automobile Industry, Factory Workers, Workers Struggles, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.