Category Archives: தமிழ்

பெண் முன்னேறிச் செல்லும் பொழுது எந்த ஆணும் பின் செல்வதில்லை**

சமூகக் கருத்துடன் படமாக்கப்பட்டதால் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட Salt Of the Earth திரைப்படத்தின் விமர்சனம் எஸ்பெரன்ஸா என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் நம்பிக்கை என்று பொருள். இருண்ட நாட்களில் கூட, நம்பிக்கை தனக்கான வழியைத் தேடிக் கொள்ளும்; மனச்சிதைவில் இருந்து நம்மை மீட்டு, இன்னல்களுக்கெதிரான போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும்; வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும். பல … Continue reading

Posted in Art & Life, Working Class Vision, தமிழ் | Tagged , | Leave a comment

செவிடனுக்கும் ஒலிக்கச்செய்வோம்:

பகத்சிங், ராஜ்குரு, மற்றும் சுகதேவ்க்கு செவ்வணக்கம் பொது பாதுகாப்புச் மசோதா, மற்றும் தொழில் தகராறு சட்டம்  என்ற  சட்டங்களை  1928 மார்ச்சில்  அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம், காலனிய இந்தியாவின் சட்ட மன்றத்தில் கொண்டுவந்தது. சமூகத்திற்கு ஆபத்தானவர் என்று கருதப்படும் ஒருவரை, எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல், 2 ஆண்டுகள் வரை சிறையிலடைக்கும்  முன்னெப்போதும் இல்லாத அதிகாரத்தை  காவல்துறைக்கு … Continue reading

Posted in Analysis & Opinions, Political Economy, தமிழ் | Tagged , , , | Leave a comment

இரண்டு தொழிலாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்த ஹுண்டாய் நிர்வாகத்தை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம்

2012ல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டியதாக குற்றம் சாட்டி ஹுண்டாய் நிர்வாகம், ஹுண்டாய் மோட்டர்ஸ் இந்தியா தொழிற் சங்கத்தைச்(HMIEU) சார்ந்த இரண்டு தொழிலாளர்களை மார்ச் 21 அன்று தற்காலிக பணி நீக்கம் செய்தது. நிர்வாகம் இருவரையும் தொழிற்சாலைக்குள் அனுமதிக்க மறுத்ததை அடுத்து சுமார் 300 தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted in Automobile Industry, Factory Workers, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , , | Leave a comment

மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளலாம் ஆனால் அவர்கள் பற்றிய திரைப்படம் கூடாது

கக்கூஸ் படத்தை திரையிட காவல்துறை தடை மனிதக் கழிவுகளை மனிதரைக் கொண்டு அகற்றும் பணிகளைத் தடை செய்ய 2013ல் சட்டம் வந்தும் தலித் மக்கள் இன்றும் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்வதற்காக கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி வேலை செய்யும் அவலமும், இறக்கும் நிலைமையும் தொடர்வதை ‘கக்கூஸ்’ஆவணப்படும் மூலம் பதிவு செய்துள்ளார் இயக்குனர் திவ்யபாரதி. தூய்மை இந்தியா … Continue reading

Posted in Manual Scavenging, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , , | Leave a comment

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில சாலை மறியல் போராட்டம்

விவசாய கிராமப்புறப் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் அரசு மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததனாலும், காவேரிப் பாசன நீர் கிடைக்காததாலும் தமிழ்நாட்டு விவசாயிகள் கடும் வறட்சியை சந்தித்துள்ளனர். கடந்த வருடம் அவர்களின் சம்பா மற்றும் குருவை சாகுபடிகள் கருகி உள்ளன. காவேரி டெல்டா பகுதிகளில் அனைத்து விவசாயிகளும் தங்கள் பயிர்களை 100 சதம் … Continue reading

Posted in Agriculture, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , , | Leave a comment

13 மாருதி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை – அனைத்து மாருதி தொழிற்சாலைகளிலும் ஒரு மணி நேர tools down போராட்டம்

18 மார்ச் மாலையில் குர்காவ் செஷன்ஸ் நீதிமன்றம் 31 தொழிலாளர்களுக்கு தண்டனை வழங்கியது. கொலை வழக்கு சாத்தப்பட்டுள்ள 13 மாருதி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 12 தொழிற்சங்க பிரதிநிதிகளும், தலித் தொழிலாளர் ஜியாலாலும் அடங்குவர். 4 தொழிலாளர்களுக்கு 5 வருட சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே அவர்கள் நான்கு வருடங்கள் சிறையில் … Continue reading

Posted in Factory Workers, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , , , , | Leave a comment