சென்னையில் வீட்டுவேலை செய்யும் அடையாளம் தெரியாத பெண் தோழர்களுக்கான ஒரு மேடை!

வீட்டு வேலை தொழிலாளர்களின் உரிமைகளுக்கான மாநாடு கடந்த 3 ஆம் தேதி சென்னை பால மந்திர் அரங்கத்தில் நடைபெற்றது. பெண் தொழிலாளர்கள் சங்கத்தின் முயற்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில், சுற்றுலா துறை அமைச்சர் திருமதி.கோகுல இந்திரா, தொழில் துறை துணை ஆணையர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் செயலாளர் திருமதி. கலைவாணி, மாநில மகளிர் ஆணையர் திருமதி.சரஸ்வதி ரங்கசாமி, தலைமை செயலக அதிகாரிகள் சங்கத்தலைவரும் நிதித்துறை து.செயலாளருமான திரு.சத்யாபிள்ளை, தமிழ்நாடு பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பாத்திமா பெர்னாட், பெங்களூரு ஜாக்ருதி சங்கட்டனாவின் தோழர் புஷ்பா, மும்பை ஷ்ராமிக் -இன் மிலிந்த் ரானடே, தமிழ்நாடு மாற்றுதிரனாளிகள் கூட்டமைப்பின் தொ.அருணாதேவி, CITU , AITUC , மாநில கட்டிட தொழிலாளர்கள் சங்க செயலாளர்கள் என பல முக்கிய அரசு மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தனது துவக்க உரையில், PTS இன் கௌரவ தலைவரும் NTUI இன் தேசிய து.செயலாளரும் ஆன தோழர் சுஜாதா மோடி, வீட்டு வேலை தொழிலார்கள், அதுவும் குறிப்பாக பெண் தொழிலாளர்களின் வரலாற்று முக்கியத்துவத்தை பற்றியும் அந்த உன்னத வேலையின் சிரமங்களையும் வெளிப்படை ஆக்கினார். பெண் தொழிலாளர்களுக்கு பணி இடத்திலும் வசிக்கும் இடத்திலும் ஏற்படும் உபாதைகளையும் பிரச்சனைகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து தீர்வு காணவே PTS உருவாக்கபட்டது என விளக்கினார். GAFWU சார்பாகவும் PTS இன் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும் வலியுறுத்தி பேசிய தோழர்கள் மேக்னா, டில்லியம்மாள் போன்ற மாநாட்டின் உறுப்பினர்கள், 2004 இல் இருந்து நடைபெற்றுவரும் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் போராட்டங்களை பற்றி விரிவாக பேசினார்கள்.
1948 குறைந்தபட்ச ஊதிய சட்ட வரைவகுப்பின் கீழ் வீட்டுவேலையையும் சேர்க்க 2007 ஆம் ஆண்டு ஆணை பிறப்பிக்க பட்டது, 2009 இல் தொழிலாளர் நல வாரியம் ஒரு கமிட்டி அமைத்து அந்த கமிட்டி அரசினால் நிர்ணயிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை பரிந்துரை செய்தது. ஆனால், மூன்று வருடங்கள் ஆகியும், தமிழக அரசு குறைந்தபட்ச ஊதியத்தை தெளிவாக அறிவித்து விளம்பர படுத்த எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. விலைவாசி வீக்கத்தில் வாடகை, ஏறி பொருள், உணவு விலைகள் என எல்லாவற்றிற்கும் ஏற்றாற்போல் ஊதியம் கேட்கப்பட்டு வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் இவர்களின் தேவைகளையும் எதிர்காலத்தையும் நன்கு கருதி ஊதியத்தை தீர்மானம் செய்ய வேண்டி, அனைத்து பெண் தொழிலாளர்களும் வீட்டு வேலை செய்பவர்களுக்கு துணையாக அரசு அதிகாரிகளின் மூலமாகவே அரசுக்கு கொண்டு சேர்க்க மாநாட்டில் பங்கேற்று இருந்தனர்.

நலவாரிய குழுவால் சமர்ப்பிக்கபட்டதுபோல, தமிழக அரசு உடனடியாக குறைந்தபட்ச கூலியை அறிவித்து ஆணை இடுவது மட்டும் அல்லாமல், அந்த செய்தி எல்லோரிடமும் அடைய வேண்டிய பொறுப்பில் கவனமாக இருக்க மாநாட்டில் கேட்க பட்டுள்ளது.
முன்னர் ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாய் என கணக்கிட பட்டிருந்தாலும், இப்போது அதை விலைவாசிக்கு உரிய மாற்றி 40 ரூபாயாக நிர்ணயிக்க கோரப்பட்டுள்ளது. நிரந்தர குடி இருப்பும் இலவச பயண அட்டைகளும் விநியோகிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. ESI உட்பட முழு மருத்துவ வசதிகள் அளித்திடவும், அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான சிகிச்சை நேரத்தை மாற்றவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், மாற்று திறநாளிகள் வீட்டு வேலை பணியில் ஈடுபடும்போது, அதை சுலபமாக்குவதற்கு நலவாரியங்கள் மூலம் உதவியும் துனைக்கருவிகளும் வழங்க தோ.அருணாதேவி பேசினார்.
சுற்றுலா துணை ஆணையரும் மாநில மகளிர் ஆணையரும் குறைந்தபட்ச வருமானத்தை வீட்டுவேலை ஊழியர்ககுக்கு உறுதி செய்து அறிக்கை இட நடவடிக்கைகள் விரைவாக்கப்படும் என நம்பிக்கை அளித்துள்ளனர்.

This entry was posted in Domestic Workers, தமிழ். Bookmark the permalink.