பெண் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கோரி போராட்டம்: சென்னை ஆட்சியருக்கு மனு

பிப்ரவரி 18 அன்று கார்மன்ட் அன்ட் பேஷன் வொர்கர்ஸ் யூனியன் மற்றும் பெண் தொழிலாளர்கள் சங்கம் சென்னை கலெக்டரேட் அருகே நடத்திய போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டு மணிக்கு 48ரூபாய் குறைந்த பட்ச ஊதியம், முறையான வேலை நேரம் மற்றும் பணி நிலைமைகள் கோரினர். ஆடைகள் ஏற்றுமதி தொழிற்சாலைகளிலும் வீட்டு வேலைகளிலும் ஈடுபடும் இந்த பெண் தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை பூர்த்தி செய்து தொழிலாளர் உரிமைகளை அரசு பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

ஆடைதைக்கும் தொழிற்சாலைகளில் உள்ள பணிநிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளதாக யூனியன் தலைவர் தோழர் தில்லி கூறினார். ‘எங்கள் தொழிற்சாலையை புதிய முதலாளி வாங்கியபோது ஏற்கனவே உள்ள ஊதியம் மற்றும் போனஸ் ஒப்பந்தங்கள் மதிக்கப்படும் எனக் கூறனர். ஆனால் போனஸ் கொடுக்கும் சமயத்தில் நிறுவனம் நஷ்டத்தில் உள்ளது எனக் கூறி போனஸை குறைத்தனர். நாங்கள் தொழிலாளர் ஆணையத்திற்கு சென்று முறையிட்டு போராட்டங்கள் நடத்தியபின் எங்களுக்கு முறையான போனஸ் வழங்கப்பட்டது’ என தாம்பரம் MEPZ மண்டலத்தில் உள்ள செலிபிரிட்டி பேஷன்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்யும் தில்லி கூறுகிறார்.

பல பெண் தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழில்களிலும், தொழிற்சாலைகளில் கூட ஒப்பந்த அடிப்படையில் பணி செய்வதால் மணி நேர குறைந்த பட்ச ஊதியத்தை சட்டரீதியாக செயல்படுத்த வேண்டியது அவசியமானது என யூனியன் கூறுகிறது. ‘இன்றைய விலைவாசியில் மாதம் 10000ரூபாய் சம்பாதிக்காமல் குடும்பம் நடத்துவது கடினம். அதனால் தான் நாங்கள் மணிக்கு ரூ48 கோருகிறோம்.அதே போல் NREGAவின் கீழ் நடத்தப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ368 என நிர்ணயிக்கப்பட வேண்டும்’ என தில்லி கோரினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராட்டம் நடத்திய பெண் தொழிலாளர்களும் சங்கப் பிரதிநிதிகளும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சென்னை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்தனர்.

This entry was posted in Domestic Workers, Factory Workers, Garment Industry, News, Unorganised sector, Women Workers, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.