குறைவான கூலி கொடுத்து தனியார் நிறுவனம் சுரண்டல் மெட்ரோ ரயில் சுரங்க கான்கிரிட் வளைவு தயாரிப்பு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

(This post is reproduced from http://www.facebook.com/hmieu.hyundaiemployees/posts/428186273940058.

குறைவான ஊதியத்தை கொடுத்து மெட்ரோ ரயில் கட்டுமான தொழிலாளர் களை சுரண்டிவரும் சென்னை மெட்ரோ ரயில் அஃப்கான்ஸ் ஏவி நிறுவ னத்தை கண்டித்து தொழி லாளர்கள் 2வது நாளாக செவ்வாயன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னையை அடுத் துள்ள திருவேற்காட்டில் இந்த ஆலை அமைந்துள் ளது. சென்னை மெட்ரோ ரயில் சுரங்க பாதைக்கு தேவையான கான்கீரிட் வளைவுகள் இங்கு உற்பத்தி செய்யபடுகின்றன. இந்த பணிகளை அஃப்கான்ஸ் ஏவி எனும் நிறுவனம் கான்ராக்ட் எடுத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 3 ஆயி ரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.148.50 பைசாவும், தினப்படியாக ரூ.89.52 மொத்தமாக ரூ.238.02பைசா வழங்க வேண்டும். (பார்க்க தகவல் பலகை) ஆனால் இந்த நிறுவனம் ரூ.145 மட்டுமே வழங்கி ஏமாற்றி வருகிறது. உணவு, தங்குமிடம் இலவசம் என்றும் எட்டு மணி நேரம் வேலை என் றும் கூடுதல் நேரத்திற்கு தனியாக சம்பளம் வழங் கப்படும் என்றும் நிறுவனம் கூறியது. ஆனால் நிர்வா கம் ரூ.145 மட்டுமே வழங்கி யது. இதே பணியை கான் ராக்ட் எடுத்து செய்து வரும் சிசிசிஎல், எல்அன்ட் டி ஆகிய நிறுவனங்கள் தனது தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.320 வழங்கி வருகிறது. அஃப்கான்ஸ் நிறுவ னம் மற்ற இடங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ரூ.238ம் டீ, உணவு, தங்கு மிடம் அனைத்து வசதிக ளையும் செய்துள்ளது. எட்டு மணி நேரம் வேலை என பணியில் அமர்த்தபட்ட வர்களை 12மணி நேரத்துக் கும் மேலாக வேலை வாங் குகிறார்கள், மிகை நேர பணி (ஓடி) செய்தால் கூட அந்த பணத்தை மறுக்கிறார் கள்.

நிர்வாகத்தின் இந்த முறைகேட்டை கண்டித்து தொழிலாளர்கள் சிஐடியு உடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்கம் ஒன்றை அமைத்து தங்களது கோரிக் கைகளை நிர்வாகத்திற்கு தெரிவித்தனர். தொழிலா ளர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து நிர்வாகம் ஒப்புக்கொண்டபடி ஊதி யத்தை 15 நாட்களுக்குள் தருவதாக கூறியது. ஆனால் தரவில்லை. இதனால் நிர் வாகத்தின் போக்கை கண் டித்து தொழிலாளர்கள் அனைவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.10) இரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டனர். இந்த வேலை நிறுத் தத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் ஈடுபட் டுள்ளனர். இதன் காரண மாக மெட்ரோ ரயிலுக் கான பேக்கேஜ் செய்யும் பணி தடைபட்டுள்ளது. சங்கத் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்கா மல் நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் புதிதாக ஆட்களை நியமிக்க முயற் சிக்கிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்றும் உணவு தங்குமி டம் அளிக்கப்படமாட் டாது என்றும் நிர்வாகம் கூறியுள்ளது. ஒரு தொழி லாளிக்கு ரூ.400 வீதம் தனியார் எஜென்சிகளுக்கு வழங்கப்படும். ஒப்பந்தகா ரரும் ஆஃப்கான் நிறுவனத் தில் உள்ளவர்களும் கமி ஷன் தொகையை பகிர்ந்து கொண்டு மீதமுள்ள ரூ.220 மட்டுமே தொழிலாளர்க ளுக்கு வழங்குவர்.இதற்காக கடந்த இரண்டு நாட்களாக 600க் கும் மேற்பட்ட தொழி லார்கள் தனியார் நிறுவன ஏஜென்சிகள் மூலம் பணி யமர்த்தப்பட்டு வருகிறார் கள். ஆனால் உண்மை நிலையை உணர்ந்த புதிய தொழிலாளர்களும் பணி யில் சேர தயக்கம் காட்டி வருகிறார்கள்.

எனவே தொழிலாளர்களுக்கு முறை யான ஊதியத்தை வழங்க வேண்டும், எட்டு மணி நேர பணியை உத்தரவாத படுத்த வேண்டும், உணவு, தங்குமிடம், டீ வசதி செய்து தர வேண்டும், மிகை நேர பணி (ஓடி) செய்தால் அதற் கான ஊதியத்தை வழங்க வேண்டும், பழிவாங்கல் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியு றுத்தி நிறுவன வளாகத் தில் அஃப்கான்ஸ் பேக் கேஜ் சரக்கு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் (சிஐ டியு) சார்பில் இரண்டா வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற் றது. காவல்துறையுடன் சேர்ந்து அதிமுக மிரட்டல்நியாயமான கோரிக் கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் தொழிலாளர்களை அதி முகவினரும் காவல்துறை யினரும் மிரட்டி வருகி றார்கள். இந்த மிரட்டலை பொருட்படுத்தாமல் தொழி லாளர்கள் உறுதியுடன் போராடி வருகிறார்கள்.

– வா.கி.பிரகாஷ்

 

This entry was posted in Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.