9 நாள் வேலைநிறுத்தத்தின் பிண்ணனியில் சன்மீனா தொழிலாளர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம்

ஊதிய உயர்வு உட்பட தங்கள் பல்வேறு கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என சன்மீனா எஸ்.சி.ஐ தொழிலாளர்கள் சென்னை வெயிலையும் பாராமால் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். வெயில் 93டிகிரியையும் தாண்டியும் அசரவில்லை தொழிலாளர்கள். குறைந்த பட்ச ஊதியமாக ரூ10000 நிர்ணயித்தல், தொழிலாளர்களின் சங்கத்தை அங்கீகரித்து சங்கத்துடன் முறையான ஊதியம் மற்றும் நலன்களை ஒப்பந்தம் செய்தல், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு உரிய மருத்துவ காப்பீடு, சங்கம் அமைத்ததற்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த 9 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sanmina SCI Workers on fast

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான சன்மீனா ஓரகடம் தொழிற்சாலையில் பணிபுரியும் 550 தொழிலாளர்கள் கடந்த இரு வருடங்களாக குறைந்த ஊதியம், மற்றும் பணிநிலைமைகள் குறித்து போராடி வருகின்றனர். 5 வருடத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட போது 6000ரூபாய் ஊதியத்துடன் வேலையில் சேர்ந்த தொழிலாளர்களின் ஊதியம் 5 வருடத்திற்கு பின் ரூ8000 ஆக மட்டும் உயர்ந்துள்ளது. 2010ல், நிர்வாகம் வெறும் 120ரூ-180ரூ ஆக ஊதியத்தை உயர்த்திய போது தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட ஆரம்பித்தினர். ‘அப்பொழுது எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற சங்கம் அமைப்பதற்கு முடிவு செய்தோம். உடனடியாக நிர்வாகம் 4 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. பின்னர் அவர்களுடன் சமரசம் செய்து அவர்கள் வேலையை விட்டுவிட நிர்பந்தித்தது. ஆனாலும் நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடவில்லை’ என தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர் தோழர் கர்ணன் கூறினார்.

கடந்த வருடம் தொழிலாளர்க்ளை மிரட்டியதாகவும், பணம் கேட்டதாகவும், ஒழுக்கமின்மை என்ற குற்றசாட்டுகளை சுமத்தி சன்மீனா நிறுவனம் 8 தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது. தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரும், சங்கப் பொருளாளரும் பாலாஜி கூறுகிறார்: ‘நாங்கள் சங்கம் அமைத்ததற்கு முயற்சி எடுத்ததால், நிர்வாகம் எங்களை வெளியேற்றியுள்ளது. எங்களை வெளியேற்றினால் சங்கம் உடைந்து விடும் என தப்புகணக்கு போட்டனர். தொழிலாளர்களை பயமுறுத்தியதாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் என் மேல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த குற்றசாட்டும் நிருபிக்கப்படவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக எந்த விசாரணையும் நடக்கவில்லை. இந்த தற்காலிக பணிநீக்கம் எங்களுக்கு உளவியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.’. அனைத்து தொழிலாளர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்று அவர்களை திரும்பவும் வேலைக்கு சேர்ப்பதற்கு தொழிலாளர்கள் கோருகின்றனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் தொழிலாளர்கள் சன்மீனாவில் வேலை செய்யும் 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலை செய்வதாகவும் அவர்கள் இரவு ஷிஃப்டுகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஓவர்டைம் செய்ய நிர்பந்தபடுத்தப்படுவதாகவும் கூறினர். மேலும் சோல்டரிங் போன்ற கடினமான வேலைகளிலும் பெண்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது எனக் கூறினர். ‘நாங்கள் நோய்வாய்பட்டால் ரெஸ்;ட் எடுப்பதற்கு தனியாக அறை இல்லை. 10 நிமிடத்திற்கு மேல் ரெஸ்;ட் எடுத்தால் சூப்பர்வைசர்கள் உடனடியாக எங்களை வந்து கூப்பிடுகிறார்கள்’ என தொழிலாளர் தோழர் சுதா கூறினார். ‘என்னுடைய ஊதியம் குடும்பத்தில் உள்ள் 5 பேரை காப்பதற்கு போதுமானதாக இல்லை. குறை;ந்த பட்ச ஊதியமான ரூ10000 கூட இன்றைய விலைவாசியில் குறைவான ஊதியமே எனக் கூறும் தொழிலாளர் எழிலரசி ‘கடந்த ரூ160 ஊதிய உயர்வு அபத்தமானது. மற்ற நிறுவனங்களில் உள்ள மருத்துவ காப்பீடு வசதி இங்கு இல்லை. இ.எஸ்.ஐ கூட இல்லை எனக் கூறுகிறார்.

உண்ணாவிரதத்தை துவக்கிய சன்மீனா தொழிலாளர்கள் சங்க கவுரவத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பனர் தோழர் சவுந்தரராஜன் தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டத்தை உறுதியோடு செயல்படுத்த வேண்டும் எனவும் நிர்வாகத்தின் பயமுறுத்தலுக்கு அடிபணியக் கூடாது என வலியுறுத்தினார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிர்வாகத்துடன் முடிவு செய்யபட்ட ஊதிய ஒப்பந்த்தை மேற்கோள் காட்டிய சவுந்தரராஜன், ‘தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை சங்கம் போராடும். தொழிற்சாலை கேட்டை தாண்டி உங்களுடைய பிரச்சனைகளை மாநில மத்திய அரசுகளுக்கு எடுத்து செல்லும்’ என வாக்குறுதி அளித்தார். சி.ஐ.டி.யு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் கண்ணன் மற்றும் வட சென்னை செயலாளர் தோழர் காசிநாதன் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து பேசினர். ஹுண்டாய், ஃபாக்ஸ்கான், ஜிகேஎம் தொழி;ற்சங்கங்களின் பிரதிநிதகள் அனைத்து தொழிற்சாலைகளிலும் இதே மாதிரியான தொழிலாளர்களின் பிரச்சனைகளை குறித்து பேசினர்.

கடந்த இரண்டு வருடங்களாக ஊதிய உயர்வு கோரிக்கையை எழுப்பியும் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை எனவும் சங்கத்தை அங்கீகரிக்க மறுத்து வருவதாகவும் சங்கத் தலைவர் மணிகண்டன் கூறினார். தொழிலளார் துறை நிர்வாகத்தை பேச்சுவார்ததைக்கு அழைத்தும் நிர்வாகம் வரவில்லை எனவும் இதனால் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டியுள்ளது எனக் கூறிய அவர் ‘தொழிலாளர் துறையை நாங்கள் முற்றுகையிட்ட பின்னர் நிர்வாகத்தை தவறாமல் கலந்து கொள்ளுமாறு தொழிலாளர் துறை வலியுறுத்தியுள்ளது’ எனக் கூறினார். அதையும் நிர்வாகம் மறுத்தால் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்வோம் என தோழர் மணிகண்டன் கூறினார்.

உண்ணாவிரதத்தின் போது மயங்கிய தொழிலாளர் தோழர் ஹரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஒரு நாள் உண்ணாவிரதத்தின் முடிவில் சி.ஐ.டி.யு மாநில பொது செயலாளர் சுகுமாரன் முடிவுரையாற்றினார். தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களுடைய வேலை நிறுத்தத்தை தொடர தொழிலாளர்கள் தீர்மானம் செய்தனர்.

This entry was posted in Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.

One Response to 9 நாள் வேலைநிறுத்தத்தின் பிண்ணனியில் சன்மீனா தொழிலாளர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம்

  1. UDAYA KUMAR. A says:

    All news published well, Thx…

Comments are closed.