“வேலை நமது உரிமை” – VRS ஐ நிராகரித்து ஆலை மூடலின் சட்ட விரோதத்தை அம்பலப்படுத்தி நோக்கியா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நோக்கியா இந்தியாவின் சட்ட விரோத ஆலைமூடலை கண்டித்தும், தொழிலாளர்கள் வேலை பெறும் உரிமையை நிலைநாட்டவும் 8.12.2014 (திங்கள்) அன்று ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்ட அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளவாறு, ” கடந்த மே மாதம்  எவ்வித முன்னறிவிப்புமின்றி அரசிடம் அனுமதி  பெறாமல் ஆலையை  மூடப்போவதாக அறிவித்து,  தொழிலாளர்கள் மத்தியில்  வதந்திகளை பரப்பி, அச்சுறுத்தி விருப்ப ஓய்வு வாங்கிக்கொள்ளுமாறு நிர்பந்தித்தது.  இப்போது வாங்கிக்கொண்டால் குறைந்தபட்சம்  இந்தத்தொகையாவது  கிடைக்கும், இல்லையெனில் எதுவும் கிடைக்காது” என்று 5000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டாயப்படுத்த பட்டது பரவலாக வெளியான செய்தியாக இருந்த நிலையில், 850 பேர் மட்டும் வேலைக்காக  போராடி வந்தனர். அப்படி இருக்க அக்டோபர் 31ஆம்  தேதி உற்பத்தியில்லை வேலையும்  இல்லை என்ற ஒப்பந்தத்திற்கு தொழிற்சங்கம் கட்டுப்பட்டதில் இருந்து, 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்ட வழியில்  தொடர்கின்றனர்.

VRS உம் Severance Package உம் கொடுத்து துண்டிக்கப்பட்டவர்களுக்கு அந்த இழப்பீடு நிரந்தர வேலையையோ ஊதியத்தையோ உறுதி படுத்த எந்த உதவியும்  செய்யாதது  வாழ்வுரிமை பறிக்கப்பட்ட அவலத்துக்கு (குறிப்பாக பெண்களை) தள்ளி கொண்டு இருப்பதை எங்களிடம்  பேசிய வீரா, ராஜேஷ் மற்றும் கார்த்திக் தெரிவித்தார்கள். 30 பெண் தொழிலாளர்கள் கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள்  அடங்கிய இந்த போராட்ட குழு, VRS ஐ வாங்க மறுத்து வேலையே கோரி, தொழிலாளர் உதவி ஆணையரிடம் தொழிற்தாவா எழுப்பி சட்ட போராட்டத்தையும் நடத்தி வருகிறார்கள். SMS, கைபேசி அழைப்பு மூலமாக வேலை நீக்கம்  குறித்த வாய்வழி தகவல் மட்டுமே கிடைத்திருக்கும் நிலையில், ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுத்து வரும் உதவி ஆணையரையும் ஆலை வாயிலை சூழ்ந்திருக்கும் காவல்துறை  படையையும் எதிர்த்து VRS கு  சம்மதிக்க  வைக்கப்பட்டவர்களும் போராட திரும்பவதாக தெரிகிறது.
20 வருடத்தில் அடைய வேண்டிய இலக்கை 8 வருடத்திலேயே எட்ட சுரண்டப்பட்டது  தொழிலாளர்கள் உழைப்பு  தான் என்று உணர்ந்த இவர்கள், மக்களுக்கு சொந்தமான 25000 கோடியை வரியாக கட்டாமல் நோக்கியா ஏமாற்றி வருவது மட்டும் அல்லாமல், 1200 கோடி முதலீட்டிற்கு  அதை விட 2.5 மடங்கு தமிழக அரசிடம் மானிய –  வரிச்சலுகை பெற்று கொண்டதை சுட்டி  காட்டுகிறார்கள். இதனாலேயே மூடப்பட்ட  ஆலையை ஏற்று நடத்தி வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு திரும்ப வேலையளிக்கவேண்டிய  கடமை அரசுக்கு இருப்பதை நினைவு படுத்துகிறார்கள். அதிகாரப்பூர்வமாக NITS தொழிற்சங்கத்தை கலைப்பதுற்கு மறுப்பு தெரிவித்தும் போராட்டம் தொடரப்படுகிறது.
உலகமயமாக்கல்  கொள்கைகளால் நோக்கியா ஆலையை தொடர்ந்து Foxconn, BYD போன்ற downstream supply chain உற்பத்தியாளர்களும் லாபம் தீட்டிக்கொள்ள வேறு தேசங்களை குறிவைத்து  நகருவதென வெளியான செய்திகள் உறுதி செய்யப்பட்டு வருங்கின்றன. அதே நேரம், நோக்கியா N1 Android model ஐ அறிமுகப்படுத்தி  விற்பனை சந்தை பங்கை வளரச்செய்ய கூடிய சமயத்தில், CEVA, UDS போன்ற துணை நிர்வாக மைய்யங்களுடன் நடைமுறையில்  இருந்த ஒப்பந்தங்களும் இன்னும் ரத்து செய்யப்படாமல் இருப்பது கேள்விகள் எழுப்புகின்றது. மின்னணுசார் பிரிவில் இத்தகைய மக்கள் விரோத சட்டமீறல்கள் அவிழ்த்துவிடப்பட்டு இருக்கையில், ஹ்யூண்டாய் – நிஸ்ஸான் தொழிலாளர்கள் உடனும் ஒற்றுமை உருவாக்க போராடி வரும் நோக்கியா தொழிலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
 பிரசார அறிக்கையில் இருந்து :
மத்திய – மாநில அரசே! 
  • சட்ட விரோதமாக மூடிய நோக்கியா அலையை உடனடியாக திறக்க உத்தரவிடு!
  • போராடும் தொழிலாளர்களுக்கு வேலையை உத்தரவாதப்படுத்து!
  • VRS என்ற பெயரில் வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிடு! 
தொழிலாளர்களே! 
  • பசி – வறுமையைக் காட்டி தொழிலாளர்களை பணியவைக்கும் நிர்வாகத்தின் சதியினை முறியடிப்போம்!
  • வேலைப் பெரும் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்! 
  • ஆலை வேறுபாடுகளை கடந்து தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!
This entry was posted in Electronics Industry, Factory Workers, Labour Laws, Lock out/Closure, News, Strikes, Women Workers, Workers Struggles, Working Class Vision, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.