ஏசியன் பெயின்ட்ஸ் தொழிற்சாலையில் தொழிலாளர் விரோத போக்கு

ஏசியன் பெயின்ட்ஸ் தொழிற்சாலையில் 62 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யபட்டதன் விளைவாக புதிய தொழிலாளர்களை வைத்து அதே உற்பத்தி திறனை தரமுடியாத காரணத்தால், தொழிலாளர் சூப்பர்வைசர் சங்கரை நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த 9 வருடங்களாக வௌ;வேறு ஒப்பந்ததாரர்களின் கீழ் இந்த பணியாளர்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வந்துள்ளனர். தங்கள் வேலையை நிலைநாட்டுவதற்கும் அடிப்படை உரிமைகளை கோருவதற்கும், ஏஐசிசிடியு சங்கத்தில் இவர்களை சேர்ந்துள்ளதை அறிந்த நிர்வாகம் ஒப்பந்த காலம் முடிய ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இவர்களை பணியை விட்டு நீக்கியதாக தொழிலாளர்கள் கூறினர். இதை எதிர்த்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராடி வரும் நிலையில், புதிய தொழிலாளர்களை வைத்து அதே உற்பத்தியை தருமாறு சங்கரை நிர்பந்தித்ததை தட்டி கேட்டதால் தன்னை சஸ்பெண்டு செய்துள்ளதாக சங்கர் கூறினார். இவ்வாறான தொழிலாளர் விரோத போக்கை தட்டி கேட்பதற்காக தானும் ஏசியன் பெயின்ட்ஸ் நிரந்தர தொழிலாளர்களின் சங்கத்தில் சேர்நது விட்டதாக அவர் கூறினார்.

ஏசியன் பெயின்ட்ஸ் நிர்வாகம் இவ்வாறு செய்வது முதல் முறையல்ல. உற்பத்தி குறைவு என்ற பெயரில் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைத்தல், போன்ற காரணங்களை கண்டித்து அக்டோபர் 2013 முதல் 5 மாதங்களுக்கும் மேலாக நிரந்தரத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வந்தனர். தற்போதும் இவ்வாறான அணுகுமுறைகளை கைவிடவில்லை என சங்க பொது செயலாளர் மகேஷ் கூறினார். சங்கத்தின் முன்னாள் பிரதிநிதிகளின் மேலும் சங்கர் மேலும் நிர்வாகம் உற்பத்தி இழப்பு, நிர்வாகத்தை தட்டி கேட்பது போன்ற குற்ற்ச்சாட்டுகளை சுமத்தி ஊதியத்தை குறைத்தும், உள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. ஜெனரல் ஷிஃப்ட்டில் இருந்த தோழர் மகேஷை அனைத்து ஷிஃப்ட்டுகளிலும் வேலை செய்ய கூறியதற்கு காரணம் கேட்டதால் தன் மேல் குற்றம் சாட்டுவதாக அவர் கூறினார். மேலும் சங்கத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்கான உத்தி என அவர் கூறினார். மேலும் 5 நிரந்தரத் தொழிலாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவை அனைத்தையும் கண்டித்தும் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மறுபடியும் வேலையில் அமர்த்த கோரி ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் சங்கம் வேலை நிறுத்த கோரிக்கையை கொடுத்துள்ளது.

This entry was posted in Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.