தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தொழிலாளர் ‘சீர்திருத்தங்கள்’

இன்றைய மோடி அரசியலின் தொழிலாளர் ‘சீர்திருத்தங்களை’ பற்றிய கருத்தரங்கம் சென்னையில் மே 17 அன்று நடைபெற்றது. அதில் பேசிய சட்டப் பேராசிரியர் உஷா ராமநாதன் ‘நாங்கள்(அரசு) உங்களுடனேயே(முதலாளித்துவ நிறுவனங்கள்) கூட நிற்கிறோம். உங்களை கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறோம். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் கடமையை மேற்கொள்கிறோம்’ என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இன்றைய தொழலாளர் சீர்திருததங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனக் குறிப்பிட்டார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் பதவிக்கு வந்த தேசிய ஜனநாயக கூட்டணி தொழிலாளர், நிலம், மற்றும் சுற்றுச்ழல் சட்டங்களை சீர்திருத்தும் பணியில் முழுமுயற்சியுடன் ஈடுபட்டு வருகிறது. இச்சட்ட சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்களாக உஷா குறிப்பிட்டவை:
(அ) குறைந்தபட்ச ஊதிய சட்டம், பேறுகால உதவி சட்டம் ஆகியவைகள் அனைத்தையும் எடுத்துவிட்டு அரசு அதற்கு பதிலாக ஒரே கோட்பாடை கொண்டு வருகிறது;. இவைகளை சிறு தொழில்கள் கடைபிடிக்க வேண்டும் என சட்டம் குறிப்பிட்டாலும், தொழிற்சாலைகள் இவைகளை மீறும்போது முறையீடு செய்வதற்கான வழிவகைகள் செய்யப்படவில்லை. மேலும் இந்த குற்றச்சாட்டுகள் மீது தொழிற்சாலை கண்காணிப்பாளர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளும் கட்டுபடுத்தப்பட்டுள்ளன.
(ஆ) மேலும் இந்த கோட்பாடுகளை மீறும்பட்சத்தில் அவை குற்றங்களாக கருதப்படாமல் சிவில் வழக்குகளாக கருதப்படும். இதனால் வழக்கு குற்றங்களை தண்டிக்காமல், சமரசப் பேச்சுவார்த்தையாக திரும்பும் சூழ்நிலையாகிறது. இச்சூழ்நிலையில் கண்காணிப்பாளரின் வேலை தொழிற்சாலைகள் தொழிலாளர் உரிமைகளை பறிக்காமல் பாதுகாப்பதை விட்டுவிட்டு சமரசம் செய்யும் அதிகாரிகளாக முதலாளிகளும் துணைபோகும் வகையே இங்கு கட்டமைக்கப் படுகிறது. இந்த சட்டச் சீர்திருத்தம் ஏற்கனவே ராஜஸ்தான் பாரதிய ஜனதா மாநில அரசு மேற்கொண்டு உள்ளது. இந்த மாநிலத்தில் முதலாளியும் தொழிலாளரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலே, முதலாளிகள் குற்றத்திலிருந்து விடுபட்டவர்களாக கருதப்படுகின்றது.
(இ) சுய சான்றிதழ் மற்றும் (செயன்முறைகள் மூடுவதற்கான ) மின் அறிவிப்பு நடைமுறைகள் மேலும் அரசின் மேற்பார்வையை குறைக்கும் நடவடிக்கைகளாகவே அமைகின்றன. இவை மீறல்கள் ஏற்படும் போது அவற்றை கண்டறிந்து சரிபார்ப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும். இவ்வாறு நடக்கும் போது போபால் போன்ற பேரழிவு ஏற்படும்போதே இந்த பிரச்சனைகள் வெளியே வரும்.
(ஈ) தொழிற்பயிற்சி சட்டத்தில் வரும் மாற்றங்கள் தொழிலாளர்களை வேலை உறுதியின்மை, குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் வாழ்நாள் பயிற்சியாளார்களாகவே நிலைநாட்டும். வேலை உறுதியின்மை, 12 வாரங்களில் தற்போதைய 50 மணியிலிருந்து 25 மணி நேரத்திற்கு மிகுதி வேலை நேரத்தை 150சதம் அதிகரிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் வென்று காத்த 8 மணி நேர வேலை என்பது 10-11 மணி நேரமாக அதிகரிக்கக் கூடும்.
தற்போதைய அரசின் முயற்சி இன்னும் அபாயகரமாக இருப்பது ஏனென்றால் மாநில அரசுகள் மத்தியில் ஒரு போட்டி சூழ்நிலையை உருவாக்குவதற்கான மனப்பான்மையே. தங்களுடைய மாநிலத்திற்கு முதலீடுகளை பெறுக்குவதற்கு, தொழிலாளர் நலன்களை காற்றில் பறக்கவிடும் மாநிலங்களின் போட்டிகளிக்கிடையே அனைத்து தொழிலாளர்களையும் அதலபாதாளத்துக்கு கொண்டு விடும் நிலை வரும். இந்த சீர்திருத்தங்களை நிறைவேற்ற மற்ற கட்சிகள் முட்டுக்கட்டையாக இருக்கும் நிலையில், மாநிலங்களை சீர்திருத்தங்களை ஏற்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவது ஜனநாயகத்திற்கு முரண்பாடானது.
1990 களில், உற்பத்தி வளர்ச்சி மற்றும் தொழிற்துறை அமைதிக்கு இடையூறு முயற்சி, வெளியாட்கள், ஊழல் தலைவர்கள் என தொழிற்சங்கங்கள் மேல் ஒரு குற்றச்சாட்டை ஏவி, தொழிற்சங்கங்கள் அமைத்தல் மற்றும் கூட்டுப் பேரம் ஆகிய தொழிலாளர் உரிமைகள் கடுமையாக குறுகிய எல்லைக்கு வரையறுக்கப்பட்டன. இன்று அதே பிரச்சாரங்களை மீண்டும் ஏவி, கண்காணி;ப்பு, ஒழுங்குமுறை விதிகள் தளர்த்தப்படுகின்றன. நாட்டின் 95சதம் முறைசாரா பணிகளில் வேலை நிரந்தரமற்றி பணிபுரியும் நிலையில், குறைந்தபட்ச உரிமைகளுடன் முறைசார்ந்த 5சதத் தொழிலாளர்கள், வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்கு தடைசெய்வதாக, தொழிற்சாலை முதலாளிகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில், 5சதத் தொழிலாளர்களின் நலன்களும் பறிக்கப்பட்டு அவர்களும் முறையற்ற வேலை நிலைமைகளில் வேலை செய்து, முதலாளிகள் அவர்களையும் சுரண்டுவதற்கு அரசு துணைபோகிறது.
ஆனால் போபால் விஷவாயு, கருப்பு பணப்பதுக்குதல், ஸ்பெக்ட்ரம், நிலக்கரி மோசடி போன்ற செயல்களுக்கு காரணமாகிய முதலாளிகள் எந்த மேற்பார்வையில்லாமல், தொழிற்சங்கங்கள் இல்லாமல். தனக்கு சுயசான்றிதழ் கொடுத்து கொள்வது எந்த வகையில் நியாயம்? இவற்றின் மூலம்முதலாளிகளின் தயவில் தொழிலாளர்களை விட்டு தங்களுடைய விசுவாசத்தை காட்டியுள்ளது அரசு. இவற்றில் பல கொள்கைகள், கடந்த யு.பி.ஏ அரசின் கொள்கைகளாக இருந்த போதும், தொழிற்சாலை கண்காணிப்புகளை முடக்கி, இந்ந சீர்திருத்தங்களை ஜனநாயகத்திற்கு புறம்பாக முன்னேற்க முயலும் முயற்சியில் இநத அரசு முன்னோடியாக உள்ளது என உஷா கூறினார். இவற்றை எதிர்த்து அரசிற்கு சாதகமான பி.எம்.எஸ் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றாக சேர்ந்து போர்கொடி ஏற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, Labour Laws, labour reforms, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.