டயமன்ட் என்ஜினியரிங் தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் – குடும்பத்தினர் சாலை மறியல்

கடந்த ஜுன் மாதம் டயமன்ட் என்ஜினியரிங்கின் 345 நிரந்தரத் தொழிலாளர்கள் சங்க உரிமைக்காகவும் பணிநிலைமைகளுக்காகவும் போராடி வந்தனர். ஏஐசிசிடியுவின் கீழ் ஒருங்கிணைந்த அவர்கள் மே மாதம் சங்கக் கொடியை ஏற்றினர் என்று நிர்வாகம் அவர்களை தற்காலிக நீக்கம் செய்தது அதன் பின்னர் நடந்த போராட்டங்களில் 27 தொழிலாளர்கள் கைது செய்யபட்டு குற்ற வழக்குகளும் பதிவு செய்யபட்டுள்ளன.

அவர்களுடைய பிரச்சனைகள் தொழிலாளர் துறைக்கு அனுப்பப்பட்டு தொழிலாளர் துறையும் தொழிற் தகராறு சட்டத்தின் செக்ஷன் 2(a) கீழ் நிர்வாகத்தை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு வராத நிலையில் தொழிலாளர் துறை நவம்பர் 1 அன்று சமரச முறிவை பதிவு செய்தது. தற்போது இந்த வழக்கு உயர் நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Source: AICCTU

Source: AICCTU

இந்நிலையில், தங்கள் மீதுள்ள பொய் வழக்குகளை நீக்கக் கோரி தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். தாழம்பூர் காவல் நிலையம் அவர்களுக்கு அனுமதி மறுத்ததால் அவர்கள் உயர் நீதி மன்றத்தை நாடினர். உயர்நீதி மன்றம் அவர்களுக்கு செப்டம்பர் முதல் வாரத்திலேயே அனுமதி கொடுத்தும், காவல் நிலையம் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை மட்டுமே பொது இடத்தில் உட்கார அனுமதி கொடுத்தது. மீண்டும் தொழிலாளர்கள் உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்து அவர்களுக்கு நவம்பர் 11 அன்று காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்த அனுமதி தரப்பட்டது.

நவம்பர் 12 முதல், வட இந்திய தொழிலாளர்கள் உட்பட 21 தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மாம்பாக்கம் அடுத்து உள்ள சமத்துவபுரத்தில் போராட்டத்தை தொடருகின்றனர். புயலினால் வரும் தமிழ்நாடு கடும் மழையால் பாதிக்கபட்டு வரும் நிலையில் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரதம் 4 நாட்கள் கடந்த நிலையில், நேற்று 2 தொழிலாளர்கள் போராட்டகளத்தில் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதைத் தொடர்ந்து கொட்டும் மழையில் தொழிலாளர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறை நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக உத்தரவாதம் தந்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

This entry was posted in Factory Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.