பரிதாபாத் மஸ்தூர் சமாச்சார் மார்ச் மாத இதழ் – தொழிலாளர் குரல்

பரிதாபாத் மஸ்தூர் சமாச்சார் மாதப்பத்திரிக்கை இந்தியில் வெளியிடப்படுகிறது. 1982ல் தொடங்கப்பட்டது. தில்லி பரிதாபாதில், முக்கால்வாசி தொழிற்சார்ந்த தொழிலாளர்கள் (தொழிலாளர் சட்டங்களின்) பார்வைக்கு வராதத் தொழிலாளர்கள் ஆவர். 85 சதத் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்படும் தற்காலிகத் தொழிலாளர்கள். இங்கு தற்போது மாதம் ரூ3914 ஆக குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுவும் 80 சதத் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 6 மாதங்கள் வரை சம்பள பாக்கி உண்டு. இங்கு மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில், 15 வருடங்கள் கழித்தும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் தரப்படுவதில்லை.

ஒவ்வொரு இதழிலும் பரிதாபாத் மஸ்தூர் சமாச்சார் 50-60 தொழிலாளர்களின் குரல்களை பதிவு செய்கிறது. 1000 பத்திரிக்கைகளிலிருந்து ஆரம்பித்து தற்போது 7000 பத்திரிக்கைகள் மாதம் விநியோகிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் அதிகமாக உள்ள பரிதாபாத் மற்றும் சுற்று  பகுதிகளில் ரோட்டோரமாக ஷிஃப்ட் மாறும் போது சமாச்சார் தொழிலாளர் தொண்டர்கள் தொழிலாளர்களுக்கு பத்திரிக்கையை இலவசமாக விநியோகிக்கின்றனர்.

தொழிலாளர் கூடம் இந்த பதிவுகளை மாதம் ஒரு முறை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடும். (English version)

சட்டங்கள் இனிமேல் உதவுவதில்லை

கேபிடல் ரேடியோ (தில்லி) : தொழிற்சாலையில் உள்ள பவர் பிரஸ்சில் 5 தொழிலாளர்கள் இதுவரை தங்களை கைகளை இழந்துள்ளனர். ஒரு தொழிலாளருக்கு கட்டை விரல் துண்டிக்கப்பட்டது. தினமும் நாங்கள் வருகையை காலை 8:30க்கும் தொழிற்சாலையிலிருந்து செல்வதை 6 மணிக்கு பதிவு செய்கிறோம். ஆனால் எங்களுடைய உண்மையான ஷிஃப்ட் நேரம் 6:30 மணிக்கே ஆரம்பித்துவிடும். எங்களுக்கு தரப்படவேண்டிய இஎஸ்ஐ, பி.எஃப் தொகை ரூ60-70 ஆகும். ஆனால் அவர்கள் தருவது ரூ50-60 தான்.

பிஐசி (மாநேசர்): தொழிற்சாலையில் 900 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஆனைவருமே தற்காலிகத் தொழிலாளர்கள் தான். 2 ஷிஃப்டுகளில் 12 மணி நேரம் வேலை. கியர் தயாரிக்கின்றனர். ஓவர்டைம் சிங்கிள் ரேட்டை விட குறைவு தான்.

ஷியாம் மெட்டல்ஸ் (பரிதாபாத்): தொழிற்சாலையில் வேலை செய்யும் ஹெல்பர்களுக்கு ரூ6500 ஊதியம் தரவேண்டும். ஆனால் ரூ5600 தான் தருகின்றனர். இஎஸ்ஐ, பிஎஃப் கிடையாது. ஆபரேட்டர்களுக்கு ரூ5995. இஎஸ்ஐ, பிஎஃப் உண்டு ஆனால் கடந்த வருடம் இதற்கான தொகை கட்டப்படவில்லை.

ஹிர்காம் ஏர்ஃப்ளெக்ஸ் (தில்லி): ப்ராஜக்டுகளிலும், சர்வீஸ் சென்டர்களிலும் உள்ள ஹெல்பர்களுக்கு ரூ9178 கொடுக்கப்பட வேண்டும். ஆனால் ரூ7000 தான் தருகின்றனர். அதில் இருந்து இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் பிடித்து கொள்கின்றனர். எங்களுடைய பிஎஃப் கணக்கை இணையதளம் வழியாக பார்த்தோம். பிடித்த தொகை கணக்கில் இல்லை.

சோனி இண்டஸ்ட்ரீஸ்: எங்களுடைய ஊதியம் ரூ7600 கொடுக்க வேண்டும் ஆனால் ரூ5600 தான் தருகின்றனர். தினமும் 2 ஷிஃப்டுகளில் 12 மணி நேரம் வேலை செய்கின்றோம். ஓவர்டைம் சிங்கிள் ரேட் தான். தொழிற்சாலையில் வேலை செய்யும் 180 தொழிலாளர்களில் 150 பேருக்கு இஎஸ்ஐ, பிஎஃப் கிடையாது.

ராஜஷ்ரி ஸ்டியரிங் (பரிதாபாத்): ஹெல்பர்களுக்கு ஊதியம் ரூ7600 கொடுக்கப்பட வேண்டும். ஆனால் பழைய ஹெல்பர் தொழிலாளர்களுக்கு ரூ6890ம் புதிய தொழிலாளர்களுக்கு ரூ5720ம் கொடுக்கப்படுகிறது. தினமும் 3 மணி நேரம் ஒவர்டைம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு எங்களுக்கு சிங்கிள் ரேட் தான் கொடுக்கின்றனர்.

எல்ஜிபி தொழிற்சாலை (மாநேசர்): ஒரு ஷிஃப்;ட் 12 மணி நேரமாகும். ஆனால் எங்களுக்கு ஓவர்டைம் என்பது சிங்கிள் ரேட் தான். தொழிற்சாலையில் 150 நிரந்தரத் தொழிலாளர்களும் 200 ஒப்பந்த தொழிலாளர்களும் உள்ளனர். சில ஆபரேட்டர்கள் ஐடிஐ தொழிலாளர்கள் ஹெல்பர் கிரேடில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊதியம் ரூ7600 தான்.

சோலார் பிரிண்டிங் பிரஸ்: தொழிற்சாலையில் உள்ள 400 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ9178 கொடுப்பதில்லை. அவர்கள் மாதம் ரூ6500 தான் பெறுகின்றனர். யாருக்கும் இஎஸ்ஐ, பிஎஃப் கிடைப்பதில்லை.

ஐஎஸ்கே இண்டஸ்ட்ரீஸ் (மாநேசர்): நாங்கள் 12 மணி நேர ஷிஃப்டில் வேலை செய்கிறோம். ஓவர்டைம் சிங்கிள் ரேட் தான். தற்காலிக தொழிலாளர்கள் தொழிற்சாலையில் அதே வேலை பார்த்தாலும் அவர்களை ஹெல்பர் கிரேடில் வைத்துள்ளனர். அவர்களுக்கு ஊதியம் மாதம் ரு7600 தான். அந்த ஊதியத்தையும் சரியான நேரத்தில் கொடுப்பதில்லை. மாதத்தில் 15-18 தேதிகளில் தான் கொடுக்கின்றனர்.

க்ரியேட்டிவ் இம்பாக்ட்ஸ் (தில்லி): இங்குள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்கள் மாதந்தோறும் 150 முதல் 180 மணி நேரம் ஓவர்டைம் வேலை செய்கின்றனர். பினிஷிங் லைனில் இன்னும் அதிகம். ஓவர்டைம் அனைத்தும் சிங்கிள் ரேட். பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 அன்று ஒரு குழு தொழிற்சாலையை பார்வையிட வந்தனர். அந்த இரண்டு நாள் அனைத்து தற்காலிக தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் விடவில்லை. நிரந்தரத் தொழிலாளர்கள் சிலரை மட்டுமே அனுமதித்தனர்.

காவல் தொழிலாளர்கள்: பரிதாபாதில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள செக்யூரிடி தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் வேலை செய்கின்றனர. எங்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், இஎஸ்ஐ, பிஎஃப் கொடுக்கப் படவில்லை. கடைசியில் ஒரு அலுவலகத்தை சார்ந்த செக்யூரிடி தொழிலாளர்களும் துப்புரவு தொழிலாளர்களும் சேர்ந்து அரசிடம் முறையிட்டனர். அதற்கு பின்னர், காண்டிராக்டரை அனைத்து தொழிலாளர்களுக்கும் பிஎஃப் செலுத்துமாறு அரசு கட்டளையிட்டது. மொத்தம் 4 லட்ச ரூபாய் கட்ட வேண்டியுருந்தது. ஆனால் இன்னும் அவர் எங்களுக்கு கொடுக்கவில்லை. அதற்கப்புறம் ஒரு புதிய காண்டிராக்டர் அதே தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குகிறார். எங்களிடம் இருந்து கழிக்கப்பட்ட பணத்தில் கொஞ்சம் இஎஸ்ஐக்கு செலுத்தியதாக அவர் கூறுகிறார்.

ஸ்விஃப்ட் செக்யூரிடியில் வேலை செய்யும் தொழிலாளர்: தில்லியில் சுமார் 2000 செக்யூரிடி தொழிலாளர்கள் ஸ்விஃப்ட் செக்யூரிடியில் வேலை செய்கின்றனர். ஒரு ஷிஃப்டில் 12 மணி நேர வேலை. சத்யம் சினிமாவில் தொழிலாளர்கள் 8 மணி நேர ஷிஃப்டில் இருந்தனர். அதனால் ஏஜன்சியின் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டனர். மாதத்தில் ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. இஎஸ்ஐ, பிஎ.ஃப் பிடித்தம் போக எங்களுடைய ஊதியம் ரூ11390.

வாட்ச்டாக் செக்யூரிடி: மாநேசரில் உள்ள வாட்ச்டாக் செக்யூரிடியில் 150 தொழிலாளர்கள் உள்ளனர். மாதத்தில் ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. ஓவர்டைம் கொடுப்பதில்லை.

24 செக்யூர் ஏஜன்சி: எங்கள் ஏஜன்சியில் சுமார் 2000 காவல் தொழிலாளர்கள் உள்ளனர். அனைவரும் 12 மணி நேர வேலை மாதத்தில் 30 நாளும் வேலை செய்ய வேண்டும். இஎஸ்ஐ, பிஎஃப் போக மாதம் ரூ12000 முதல் 15000 வரை கிடைக்கும். பரிதாபாதில் இதே ஏஜன்சியில் வேலை செய்யும் செக்யூரிடி தொழிலாளர்களுக்கு 8600ரூபாய் தான் கொடுக்கின்றனர். நாங்கள் ஒப்பந்ததாரரை கேட்டால், கம்பெனிகள் மேலும் கொடுக்க மறுக்கின்றன என்று கூறுகிறார்.

This entry was posted in Contract Workers, Factory Workers, Service Sector, தமிழ் and tagged , . Bookmark the permalink.