பரிதாபாத் மஸ்தூர் சமாச்சார் மே மாத இதழ் – தொழிலாளர் குரல்

பரிதாபாத் மஸ்தூர் சமாச்சார் மாதப்பத்திரிக்கை இந்தியில் வெளியிடப்படுகிறது. 1982ல் தொடங்கப்பட்டது. தில்லி பரிதாபாதில், முக்கால்வாசி தொழிற்சார்ந்த தொழிலாளர்கள் (தொழிலாளர் சட்டங்களின்) பார்வைக்கு வராதத் தொழிலாளர்கள் ஆவர். 85 சதத் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்படும் தற்காலிகத் தொழிலாளர்கள். இங்கு தற்போது மாதம் ரூ3914 ஆக குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுவும் 80 சதத் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 6 மாதங்கள் வரை சம்பள பாக்கி உண்டு. இங்கு மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில், 15 வருடங்கள் கழித்தும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் தரப்படுவதில்லை.

ஒவ்வொரு இதழிலும் பரிதாபாத் மஸ்தூர் சமாச்சார் 50-60 தொழிலாளர்களின் குரல்களை பதிவு செய்கிறது. 1000 பத்திரிக்கைகளிலிருந்து ஆரம்பித்து தற்போது 7000 பத்திரிக்கைகள் மாதம் விநியோகிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் அதிகமாக உள்ள பரிதாபாத் மற்றும் சுற்று  பகுதிகளில் ரோட்டோரமாக ஷிஃப்ட் மாறும் போது சமாச்சார் தொழிலாளர் தொண்டர்கள் தொழிலாளர்களுக்கு பத்திரிக்கையை இலவசமாக விநியோகிக்கின்றனர்.

தொழிலாளர் கூடம் இந்த பதிவுகளை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடும்.

1948ல் பாராளுமன்றம் இயற்றிய குறைந்த பட்ச ஊதியச் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியத்தை கணக்கிட்டால் ஒரு தொழிலாளர் மாதத்திற்கு 50000 முதல் 60000 ரூபாய் ஊதியம் பெற வேண்டும்.

2016 ஜனவரி 1 அன்று ஹரியானா அரசு விதித்த குறைந்த பட்ச ஊதியம் –
திறன் அற்ற வேலை – மாதத்திற்கு ரூ 7976 (8 மணிக்கு ரூ 307)
குறைந்த திறன் ‘ஏ’ பிரிவு – மாதத்திற்கு ரூ 8375 (8 மணிக்கு ரூ 322)
குறைந்த திறன் ‘பி’ பிரிவு – மாதத்திற்கு ரூ 8794 (8 மணிக்கு ரூ 338)
திறன் ‘ஏ’ பிரிவு – மாதத்திற்கு ரூ 9233 (8 மணிக்கு ரூ 355)
திறன் ‘பி’ பிரிவு – மாதத்திற்கு ரூ 9695 (8 மணிக்கு ரூ 373)
மிகுந்த திறன் – மாதத்திற்கு ரூ 10179 (8 மணிக்கு ரூ 392)

மே 2012 அன்று இதற்கேற்ற அகவிலைப் படி ஏற்றப்பட வேண்டியது ரூ 1881 முதல் ரூ 2395. இது இன்னும் மாற்றப்பட வில்லை.

2016 ஏப்ரல் 1 அன்று தில்லி அரசு விதித்த குறைந்த பட்ச ஊதியம் –
திறன் அற்ற வேலை – மாதத்திற்கு ரூ 9568 (8 மணிக்கு ரூ 368)
குறைந்த திறன் – மாதத்திற்கு ரூ 10582 (8 மணிக்கு ரூ 407)
திறன் – மாதத்திற்கு ரூ 11622 (8 மணிக்கு ரூ 447)

ரூப் ஆட்டோ, செக்டர் 8, ஐஎம்டி மாநேசர் – இங்கு வேலை செய்யும் 12-15 தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் 500 பேர் தற்காலிகத் தொழிலாளர்கள். இங்கு வாகனங்களுக்கு ஸ்டியரிங் வீல் செய்யப்படுகிறது. 2 ஷிஃப்ட் வேலை – காலை 6.30 மணி முதல் மாலை 5 வரை மற்றும் மாலை 5 மணி முதல் காலை 6.30 வரை

இந்தியா போர்ஜ், செக்டர் 6, பரிதாபாத் – தொழிற்சாலையில் 12 மணி நேர வேலை என்று 2 ஷிஃப்ட். ஹெல்பர்களுக்கு 6000-6200 ரூபாய் ஊதியம். சிஎன்சி ஆபரேட்டர்களுக்கு ரூ 6500 – ரூ 8000 ஊதியம்.

மாடெலாமா, உத்யோக் விஹார் பேஸ், குர்காவ் – ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் வேலை. வேலை நேரம் காலை 9 மணியில் இருந்து இரவு 9.45 வரை

டெட்சன் ராய் இன்டரநேஷனல், ஓக்லா பேஸ் 2, தில்லி – 12 மணி நேர ஷிஃப்டில் தினமும் 500 தொழிலாளர்கள் ‘கேப்’ கம்பெனிக்கு தைக்கின்றனர். ஹெல்பர்களுக்கு ரூ 7200 ஊதியம், செக்கர்களுக்கு 9800 ரூபாய். டெய்லர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு 400ரூபாய். இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் பிடித்தம் உண்டு.

நவயுக் எலெக்ட்ரோஸ்பார்க், செக்டர் 7, ஐ.எம்.டி மாநேசர் – வார விடுமுறை கிடையாது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிஃப்ட் மற்றும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இன்னொரு ஷிஃப்ட். சனிக்கிழமைகளில் இரவு நேர ஷிஃப்ட் தொழிலாளர்களுக்கு 24 மணி நேர ஷிஃப்ட் வேலை.

போனி பாலிமர்ஸ்ஃபிரைம் இந்தியா பாலிமிக்ஸ், செக்டர் 24, பரிதாபாத் – தொழிற்சாலையில் 8-10 நிரந்தரத் தொழிலாளர்கள், 30-40 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஒப்ப்ந்ததாரர் நிறுவனங்களால் கொண்டு வரப்படும் 500 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். 12 மணி நேரம் என்று 2 ஷிஃப்டுகள்.

கைலாஷ் ரிப்பன், உத்யோக் பேஸ் 3, குர்வாவ் – இங்கு வேலை செய்யும் 400 தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் உண்டு மற்ற 300 தொழிலாளர்களுக்கு கிடையாது. 12 மண நேர 2 ஷிஃப்ட் வேலை. 2015 நவம்பரில் இருந்து சில தொழிலாளர்களை 8 மணி நேர வேலைக்கு பதிலாக 10 மணி நேர வேலை என்ற புதிய க்ரேடில் வேலை செய்கின்றனர். 300 தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைக்கு மாதம் 5500 ரூபாய் வாங்கி கொண்டிருந்தனர். நவம்பரில் இருந்து 10 மணி நேர வேலைக்கு மாதம் ரூ6000 வாங்குகின்றனர். முன்னர் 3.5 மணி நேரம் வேலை செய்தால் ஓவர்டைம் கணக்கில் வரும். இப்போது 1.5 மணி நேரம் வேலை செய்தால் ஓவர்டைம் கணக்கிடப்படுகிறது.

மைசன் கம்பனி, ஓக்லா பேஸ் 2, தில்லி – இந்த தொழிற்சாலையில் ஹெல்பர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு ரூ 200, டெய்லர்களுக்கு ரூ 370 கிடைக்கிறது. 200 தொழிலாளர்களில் 10 பேருக்கு இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் உண்டு.

ஏ ஏ ஆட்டேடெக், செக்டர் 5, ஐஎம்டி மாநேசர் – தொழிற்சாலையில் 50 நிரந்தரத் தொழிலாளர்களும் 2500 தற்காலிகத் தொழிலாளர்களும் 12 மணி நேரத்திற்கு 2 ஷிஃப்டில் வேலை செய்கின்றனர்.

ஷ்ரி ஷ்யாம் பாலித்தீன், பரிதாபாத் – வேலையை விட்டு நீங்கினால் 10-15 நாட்களுக்கு ஊதியம் பிடிக்கப்படும்.

பாரத் லெதர், உத்யோக் விஹார் பேஸ், குர்காவ் – இந்த தொழிற்சாலையில் இருந்து ஒரு ஒப்பந்ததாரர் தலைமறைவாகி வி;ட்டார். ஹோலி பண்டிகைக்கு பின்னர், வேலைக்கு திரும்பிய தொழிலாளர்கள் நிறுவனத்திடம் ஊதியத்தை கேட்ட போது ஒப்பந்ததாரரை கொண்டு வரச் சொல்லி மேலாளர் கூறினார்.

கனிகா எக்ஸ்போர்ட், ஓக்லா பேஸ், தில்லி – 8 மணி நேர வேலைக்கு ஹெல்பர்களுக்கு ரூ 200 மற்றும் டெய்லர்களுக்கு ரூ360 ஊதியம் அவர்கள் ஒரு சங்கத்தை அணுகினார்கள். சங்கத் தலைவர் வந்து நிர்வாகத்திடம் பணம் வாங்கி சென்று விட்டார்.

ஏ எஸ் கே, செக்டர் 4, ஐஎம்டி மாநேசர் – 12 மணி நேர வேலை என்று 2 ஷிஃப்டுகளில் 12 நிரந்தரத் தொழிலாளர்களும் 700 தற்காலிகத் தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர். பல வருடங்களாக வேலை செய்யும் தற்காலிகத் தொழிலாளர்களின் எந்த விளக்கமும் இல்லாமல் அடையாள அட்டையை மாற்றியது.

ஸ்டார் ஆட்டோ, செக்டர் 24, பரிதாபாத் – பெண் ஹெல்பர்களுக்கு ஊதியம் ரூ 5500, ஆண் ஹெல்பர்களுக்கு ரூ 5800, சிஎன்சி ஆபரேட்டர்களுக்கு ரூ 7400.

செக்யூரிட்டி தொழிலாளர்கள்
மஸ்தூர் சமாச்சாரின் வழியாக பல்வேறு இடங்களில் வேலை செய்யும் செக்யூரிட்டி தொழிலாளர்களுடன் நாங்கள் உரையாடுகிறோம். எங்களுக்கு தினமும் 12 மணி நேர வேலை – மாலையிலும் சரி, காலையிலும் சரி. எங்களை யாரும் விடுவிக்கவில்லை என்றால் நாங்கள் வேலையை தொடர வேண்டும். 36 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாலும் சாப்பாட்டு செலவுக்கு எதுவும் கிடையாது. வார விடுமுறை இல்லை. வருடத்தில் 360 நாளும், மாதத்தில் 30-31 நாளும் நாங்கள் வேலை செய்ய வேண்டும். ஹோலி. தீபாவளி, ஈத், ஜனவரி 26, ஜனவரி 15, அக்டோபர் 2 என விடுமுறை கிடையாது. 8மணி நேர வேலை, வார விடுமுறை என்று அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால் எங்களுக்கு தற்போதைய ஊதியம் ரு4000-ரூ5000 தான். அதிலும் பல பிடித்தங்கள். கொஞ்ச நேரம் தூங்கினோம் ஆனால் 500ரூபாய் பிடித்தம். சரியாக ஷேவ் செய்யவில்லை, அடையாள அட்டை இல்லை என்று பிடித்தம். எங்களுடைய பிரச்சனைகள் குறித்து பல்வேறு செக்யூரிட்டி நிறுவனத்தில் உள்ள அனைத்து செக்யூரிட்டி தொழிலாளர்கள் மத்தியில் நாங்கள் பேச வேண்டும். இங்கு ஹிந்துஸ்தான் இன்வெஸ்டிகேஷன்ஸ் மற்றும் செக்யூரிட்டி சர்வீஸ், சென்டினல் செக்யூரிட்டி சர்வீஸ், சௌகாஸ் செக்யூரிட்டி சர்வீஸ், ஹரியான தொழிற்சாலை செக்யூரிட்டி சர்வீஸ், க்ரூப் 4 செக்யூரிட்டி சர்வீஸ், டைகர் செக்யூரிட்டி சர்வீஸ், திரிசூல் செக்யூரிட்டி சர்வீஸ், டிவைன் செக்யூரிட்டி சர்வீஸ், க்ளோபல் மேனேஜ்மென்ட் மற்றும் கன்ஸல்டன்ட் செக்யூரிட்டி சர்வீஸ் உண்டு.

டிரிக் செக்யூரிட்டி, மும்பய் தில்லிக்கு 1500 செக்யூரி;;ட்டி தொழிலாளர்களை சப்ளை செய்கிறது. அனைவரும் 12 மணி நேரம் என்று 2 ஷிஃப்டுகளில் வேலை செய்கின்றனர். வார விடுமுறை கிடையாது. மாதம் 30 நாளும் வேலை. 12 மணி நேர வேலைக்கு இஎஸ்ஐ,பிஎஃப் போக ரூ8154 ஊதியம் கொடுக்கின்றனர். மார்ச் மாத ஊதியம் ஏப்ரல் 28 அன்று தான் கொடுக்கப்பட்டது. செக்யூரிட்டி தொழிலாளர்களிடம் இஎஸ்ஐ அட்டை உள்ளது ஆனல் பலருக்கு பிஎஃப் நம்பர் கொடுக்கப்படவில்லை. இணையதளம் வழியாக பார்த்த போது பல வருடங்களுக்கு வெறும் 800-900ரூபாய் தான் பிஎஃப் செலுத்தப்பட்டுள்ளது.

ஜி 4 எஸ் செக்யூரிட்டி – தினமும் 12 மணி நேரம் என்று 2 ஷிஃப்ட் வேலை. 2 ஊதிய ஸ்லிப்புகள் தருகின்றன. ஒன்றில் 8 மணி நேர வேலைக்கு என்று குறிப்பிட்டுள்ளது. இன்னொன்றில் ஓவர்டைம், அலவன்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் எத்தனை மணி நேரம் ஓவர்டைம் என்பது காலியாக விடப்பட்டுள்ளது. தில்லியில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த பின்னர், பிஎஃப் நிறுவனம் க்ரூப் 4 நிர்வாகத்தை 134 கோடி ரூபாய் கட்ட சொல்லியது. தற்போது ஊதியத்தில் பிஎஃப் பிடிக்கப்படுகிறது. ஆனால் அடிப்படை ஊதியம் மிகவும் குறைவு, அகப்படி கிடையாது. அலவன்ஸ்கள் மிக அதிகம். அதனால் தொழிலாளர்களுக்கு குறைந்த கிராடுவிட்டி கிடைக்கிறது. முன்னர் வேலைக்கு சேரும் போது கல்விச் சான்றிதழ்களை வாங்கி வைத்து கொண்டனர். இப்போது ரூ2500 அல்லது அதற்கு மேலே வைத்து கொள்கின்றனர்.

This entry was posted in Art & Life, Contract Workers, Factory Workers, Service Sector, தமிழ் and tagged , . Bookmark the permalink.