அச்சு தொழிலும் நச்சு பணிசூழலும் – ப்ரேம்

அச்சு தொழில் அரசு, அரசியல், சிறு, குறு, பெரு, நிறுவனங்கள், சினிமா, கல்வி, மருத்துவம், என்று எந்த வகை தொகையில்லாமல் எல்லா துறைக்கும் அவசியமாக தேவைப்படும் ஒரு தொழில் ஆகும். அச்சக தொழில் காகிதம், நெகிழி(plastic), கல், மண், உலோகம், கண்ணாடி, துணிகள் என்று எல்லா விதமான பொருட்களிலும் அச்சடிக்க முடியும். ஸ்கிரீன் பிரிண்டிங் முதல் இன்று புதுவரவான முப்பரிமான பிரிண்டிங் வரை இந்த தொழில் கண்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி அசுரதனமானது. பல வண்;ணங்களை பிரிண்டிங் செய்ய முடிந்தாலும் இத்தொழில் நேரடியாக ஈடுபடும் தொழிலாளர்கள் வாழ்க்கை கருப்பு சித்திரமாகவே இருக்கிறது. அவர்கள் ஊதியத்தை பெற்று உழைப்பையும், உடல் நலத்தையும் ஆரோக்கியத்தை விலையாக கொடுக்கிறார்கள். பிரிண்டிங்கை பொருத்தமட்டில பிரி பிரஸ் (pre-press), மேக் ரெடி(make ready), பிரஸ்(press), போஸ்ட் பிரஸ்(post-press) என்று நான்கு கட்டங்களாக பிரிக்கலாம். பிரிண்டிங் தொழிலாளர்களுடைய பணி சூழலில் இருக்கும் ஆபத்துகளையும், நச்சு தன்மையையும் விரிவாக பார்க்கலாம்.

Press 1

Pre-press:  இது பிரிண்டிங் செய்வதற்கு முன் வரைகலை (Graphic Design) கணினியில் இருந்து அடுத்த நிலைக்கு அதாவது பிளேட்டாகவோ, பிலிமாகவோ மாற்றுவது, இது தேர்ந்தெடுக்கும் பிரிண்டிங் முறைக்கு ஏற்றவாறு மாற்றம் பெறும். இந்த கட்டத்தில்  அதிகமான கெமிக்கல் மற்றும் புற உதா கதிர் போன்ற நச்சு ஆபாயம் கொண்டது. இதற்கென்று எந்தவித பிரத்தியேகமான பாதுகாப்பு உபகாரணங்கள் இவர்களுக்கு வழங்கபடுவது இல்லை. இந்த முறையில் அதிக அளவில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உள்ளுருப்புகளான, நுரையீரல், கல்லீரல், சீறுநீரக பாதிப்பு, மற்றும் நரம்பு மண்டலங்கள் பாதிப்படையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் மற்றும் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஒரு தினசரி பத்திரிக்கையில் தொடரந்து  பாசிடிவ் – நெகடிவ் (Positve-Negative)  பிலிம்மேக்கிங் ஈடுபட்ட தொழிலாளர் ஓருவர் ஆஸ்துமா, மற்றும் காசநோயால் அவதிப்பட்டு வருமையில் வாழ்ந்து கொண்டியிருக்கிறார்.

Make Ready: இது பிரிண்டிங் இயந்திரத்தில், தாங்கள் தயாரித்து வைத்த பிளேட் அல்லது பிலிமை பொருத்தி பிரிண்டிங் செய்ய எல்லாவற்றையும் தயார் செய்யும் கட்டம ஆகும். இந்த முறையில் பெரும்பாலும், சுத்தம் செய்யும் ரசாயனங்களான ஆல்ககால் (Alcohol), என்-ஹெக்சேன் (n-Hexane), மன்ணென்னெய் (Kerosene), ரெடியுசர் (Reducer) போன்று கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை கெமிக்கல்கள் நுகரும் போது சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக என்-ஹெக்சேன் (n-Hexane) கெமிக்கல நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும். ஓவ்வொரு பிரிண்டிங் தொடங்கும் முன்னும், இடையிலேயும் கண்கானித்து துடைத்து சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டுமென்பதால் தொழிலாளர்கள் முழுமையாக அந்த ரசாயனங்களோடே எப்போதும் இருக்க வேண்டியதாக இருக்கும். இதனால் இவர்களுக்கு கண் எரிச்சல், சரும பிரச்சனைகள் இருக்கும். இந்த கெமிக்கல்கள் காற்றோடு கலப்பதாலும் மற்றும் வெளியேற்றப்படும் கழிவுநீராலும் சுற்று சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுகிறது.

Press 2

Press: பிரஸ் என்பது பிரிண்டிங் செய்யும் நிலையாகும். பிரிண்டிங் செய்யும்போது பயன்படகூடிய மை பெரும்பாலும் எண்னெய் மற்றும் திரவ ரசாயணங்களின் கலவையாகும். பிரிண்டிங் செய்யும் பொருட்கள் பேப்பர், பிளாஸ்டிக், கண்ணாடி, துணிஆடைகள், உலோகங்கள் என்று அதன் தன்மைகேற்ற மைகள் மற்றும் ஆசிட் வகைகள் பயன்படுத்தபடும். இது சுவாசிக்கும் போதும் தோலில் படும் போது எரிச்சல் மற்றும் உள்ளுருப்புக்கள் பாதிப்படையும் பெரும்பாலும் பிரிண்டிங் இயந்திரங்கள் கடுமையான வெப்பத்தை வெளியிடுவதாலும் தூசு மற்றும் மாசுகளில் இருந்த பாதுகாக்கவும் இயந்திரங்கள் முழுக்க கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டு குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். அதனால் குளிர் காற்று வெளியேறி விட கூடாது என்று இந்த நச்சு காற்றை வெளியேற்றும் Exhaust Fanகள் பெரும்பாலான நேரம் இருந்தும் பயன்படுத்தாமலே இருக்கும். நச்சு காற்றை வெளியே செல்ல முடியாமல், வெளிகாற்று உள்ளே வராமல் தொழிலாளர்களுக்கு மேலும் உடல்நலக்குறைவையே ஏற்படுத்தும். பிரிண்டிங் பொருத்தமட்டில் ஒரே சீரான வேலை நேரத்தை கொண்டியிராமல் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியது சில வேலைகளில் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கும் கூட ஓய்வு இல்லாமல் வேலை இருக்கும். சில வேலைகளில் ஒரு நாளுக்கு கூட வேலையில்லாமல் இருக்கும் குறிப்பாக தேர்தல் நேரம் மற்றும் விழாக் காலங்களில் கூடுதலாக வேலை இருக்கும். ஆதலால் குறைவான ஆட்களே பெரும்பாலும் நிரந்தர தொழிலாளர்களாக இருப்பார்கள். அவர்கள் கடுமையான வேலை நாட்களில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் கூட வேலை செய்ய பணிக்கப்படுவார்கள். இது போன்ற கடுமையான பணி நெருக்கடியால் அவர்களின் மனநிலையிலும் குடும்ப உறவுகளிலும் கடுமையான சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

மேலும் பிரிண்டிங் தொழிலில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்கள் அடிக்கடி மாற்றம் பெறக்கூடியது. உற்பத்தியை அதிகரிக்கவும்; மற்றும் தரத்தை மேம்படுத்தும் இயந்திரங்களை மாற்றும் போது பழைய தொழிலாளர்கள் பெரும்பாலனோர் வேலையை இழக்க நேரிடும். இந்த தொழில் நிரந்தரம் என்றும் மற்றும் வரைமுறை இல்லாத பணிநேரம் காரணமாக அவர்கள் புதிய தொழில்நுட்பத்தை கற்கும் நிலையில் இல்லாமல் இந்த தொழிலை விட்டோ அல்லது அவர்கள் தகுதிக்கு ஏற்ப அவர்களுக்கு தெரிந்த தொழில் நுட்பத்தை கொண்டிருக்கிற அச்சகத்திற்கு ஊதியத்தை குறைத்தும் செல்கிறார்கள். ஒருவர் தொடர்ந்து பத்தாண்டுகள் லெட்டர் பிரஸ் இயந்திரத்தல் பணிபுரிந்து பிறகு லெட்டர் பிரஸ் மாறி மினி அப்செட் பிரிண்டிங் வந்த பிறகு அவர்களுக்கு வேறு வேலை கிடைக்காமல் அந்த பத்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சம் பைண்டிங் கற்று வைத்திருந்ததால் இப்போது குறைவான ஊதியத்தில் பணிபுரிகிறார். வேறு சிலரோ அப்படி எதுவும் தெரிந்திருக்காமல் செக்யுரிட்டி வேலை, பியுன் போன்ற வேலைகளுக்கு சென்று விடுகிறார்கள். மொத்ததில் உழைப்பை வகை தொகையில்லாமல் செலுத்தி எந்த வித பணி நிரந்தரமோ அல்ல பெரிய சேமிப்போ இல்லாமல் மீதி வாழ்வை வருமையோடு கழிக்கிறார்கள்.

Post Press : பிரிண்டிங் செய்து முடித்த பின் அதை முழுமை செய்வது, செம்மை செய்வது என்று பல நிலைகளில் மாற்றம் செய்யப்பட்டுவது Post Press-ன் நிலையாகும். உதாரணமாக பைண்டிங், லேமினேஷன், எம்போசிங், ஃபாய்லிங், கட்டிங், பஞ்சிங் மேலும் பல வகைகள் உள்ளன.  இதிலும் ரசாயணம் மற்றும் புற உதாகதிரிகளின் பங்கு உண்டு, லேமினேஷன்  Spot UV (பகுதியாக புற உதாகதிர்), cutting-punching சிறிது கவனம் சிதைந்தாலும் கைகளே போய்விடும் அளவிற்கு ஆபத்தானது. தானியங்கி மூலமே இயங்கும் இயந்திரம் என்பதால் எப்போதும் முழு கவனத்தை செலுத்த வேண்டும். பலருக்கு கைகளில் சிறு காயங்களுக்கோ, பெரிய காயங்களுக்கோ உள்ளாகியிருக்கிறார்கள். ஃபிளக்ஸ் பேனர், பதாகைகள் மாட்டுவது மற்றும் இரும்பு சட்டங்கள் செய்து அதை நிர்மானிப்பது என்பது முழுக்க முழுக்க கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையில் எந்த பாதுகாப்புக்கு உத்திரவாதம் அற்ற தொழில் ஆகும். ஒருவர் ஒரு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்துக்கு பெரிய பெயர் பலகையை நிர்மானிக்கும் போது மேலே சற்று தாழ்வாக இருந்த மின்கம்பியில் பெயர் பலகை இரும்புதட்டி பட்டு மின்சாரம் தாக்கி உயிர் இழந்திருக்கிறார். சமீபத்தில் கூட இரு சம்பவங்கள் ஒரு கட்சி பேணரை கட்டும் போது மின்சாரம் தாக்கி இறந்தார் என்றும், இன்னொரு ஒரு பிரபல சினிமா நடிகரின் பட பேனர் வைக்க 30 அடி மேலே இருந்து தவறி விழந்தவரும் காலமானார் என்று செய்திகள் வெளியாகின. வேறுவொரு சம்பவத்தில் ராமு என்கிறவர் பழைய பெயர் பலகையை பழுதான ஒரு (Shed) ஷெட்டின் மீது ஏறி அதை இறக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்தது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் உயிர் பிழைத்தார்;.

இந்த தொழிலாளர்கள் எல்லோரும் இதில் உள்ள நச்சு தன்மை மற்றும் ஆபத்தை உணராமல் நம்மை சுற்றிலும், பேனர் கடை, பிரிண்டிங் பிரஸ், பிளேட் மேக்கிங், ஃபிலிம் மேக்கிங், என்று நாம் அன்றாடும் கடந்து செல்கிற சர்வ சாதாரணமாக காணபடுகிறவர்கள் தான்.

இதற்கு தீர்வுகளாக நிலவற்றை செய்யலாம்.
1. முதலாவதாக இந்த ரசாயன மற்றும் கதிரியக்க முறைகளான பிரிண்டிங் மை மற்றும் செயல்பாட்டில் அதற்கு பதிலாக நச்ச தன்மையற்றவோ, அல்லது அனுமதிக்கப்படும் அளவிற்கு குறைவாக இருக்கும் படி தயாரிக்க வேண்டும்.

2. தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து இதில் உள்ள ஆபத்துகளை விளக்கி சொல்வது மேலும் அவர்கள் இந்த சூழலிலும் இருக்கும் நேரத்தை குறைப்பது மற்றும் பணி இடத்தை விசாலமாக்கி வெளி காற்று வருமாறும் இந்த நச்சு காற்று வெளியே செல்ல ஏதுவாக ஜன்னல், Exhaust Fanகள் முறையாக பயன்படுத்தபட வேண்டும்.

3. நடைமுறை செயல் திட்டம் SOP பின்பற்றப்பட்டு அது முழுமையாக ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பாக கையால் பயிற்சியளிக்கபட வேண்டும். கதிரியக்கம் பாதிப்பில்லாது பாதுகாப்பு உபகாரணங்கள் பயன்படுத்துவதை உறுதிபடுத்த வேண்டும். பாதுகாப்பு உபகாரணங்கள் இருந்தாலும் தொழிலாளர்கள் இந்த நச்சு சூழலில் செலவிடும் நேரத்தையும், ஆபத்தான சூழ்நிலையில் வெளியேறும்படி வசதி இருக்க வேண்டும்.

4. பிரிண்டிங், கெமிக்கல், மை, பேப்பர் எல்லாம் எளிதில் தீ பற்றக்கூடியவை என்பதால் அதை பயன்படுத்த போதும் ஆபத்து நேரத்தில் அவர்கள் காத்து கொள்ள தேவையான உபகரணங்களும், அதை கையாலும் பயிற்சியும் அளித்திருக்க வேண்டும் இதை எல்லாம் உறுதி செய்து கண்காணித்து பிறகே நிறுவனங்களுக்கு லைசன்ஸ் வழங்க வேண்டும்.

5. பெரிய பெயர் பலகை, அரசியல், சினமா, பேனர் கட்டும் போது கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பிறகே சம்பந்தபட்ட அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.

எல்லா தொழில்களிலும் ஆபத்துகள் உண்டு. ஆனால் பிரிண்டிங் தொழிலாளர்கள் ஆபத்தை என்னவென்று உணராமல்; அறியாமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ரசாயணங்களை பாதுகப்பாக கையாலுவதற்கும், ஆபத்திலிருந்து தங்களை விலக்கி காத்துக் கொள்வதற்கும பிரிண்டிங் தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். மேலும் பணியிடங்கள் போதிய இட வசதிகள் இருப்பதும் வேலை நேரத்தை நெறிப்படுத்துவதும் இன்றியமையாத தேவையாகும்.

This entry was posted in Environment and Working Class, Factory Workers, Resources, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.