கிரீவ்ஸ் காட்டனில் தொடரும் தொழிலாளர் விரோதப் போக்குகள்

Greaves Cotton July 2ndகிரீவ்ஸ் காட்டன் நிறுவனம், சென்னை கும்மிடிப்பூண்டியில் நடத்தி வந்த தொழிற்சாலையில் 120க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களும் 180 ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை செய்து வந்தனர். இங்கு விவசாயத்திற்கான என்ஜின்களும் பம்ப்செட்டுகளும் தயாரிக்கப்படுகின்றன. 2013 லிருந்து நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஜனநாயக தொழிற்சங்க மைய(டிடியுசி)த்தின் கீழ் ஒரு தொழிற்சங்கத்தை ஆரம்பித்துள்ளனர். தொழிற்சங்கத்தை நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர். மாறாக நிறுவனம் 26 தொழிலாளர்களை வேலை விட்டு நீக்கி தண்டித்தது. இதை எதிர்த்தும் தொழிற்சங்க கூட்டு பேர உரிமைக்ககாவும் தொழிலாளர்கள் 2013 முதல் போராட்டம் நடத்தியும், தொழிலாளர் துறையிடம் முறையிட்டும் வருகின்றனர்.

 

கடந்த 2016 ஏப்ரல் மாதத்தில் திடீரென்று கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையை மூடியது. 26 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியதனால் தொழிலாளர் தவா சட்டத்தின் கீழ் அரசிடம் அனுமதி வாங்க வேண்டியுதில்லை. என்றாலும், தொழிலாளர் தவாவின் கீழ் உள்ள போது தொழிற்சாலையை மூடுவது சட்டத்திற்கு புறம்பாகும். ஆனால் நிர்வாகம் தொழிற்சாலையை மூடிவிட்டு அனைத்து நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ‘விருப்ப ஓய்வுத் திட்ட’த்தை அளித்துள்ளது. மேலும் நிர்வாகம் தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களை ராணிப் பேட்டை தொழிற்சாலைக்கு கொண்டு போவதாகவும் தொழிலாளர்கள் கூறினர். இதற்கான வேலைகள் பிப்ரவரியில் இருந்து ஆரம்பித்தாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இந்த சட்ட விரோதப் போக்குகளை எதிர்த்து தொழிலாளர்கள் மே 17 வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்தை முறியடிப்பதற்காக இரண்டு வழக்குகளை நிர்வாகம் தொடர்ந்துள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு வழக்கு தொழி;ற்சங்கத்திற்கு எதிராக போடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் இரண்டு தற்காலிக தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று தொழிலாளர்கள் தொழிற்சாலையின் 200 மீட்டருக்குள் போராட்டம் நடத்தக் கூடாது என்றும், நிர்வாகம் தொழிற்சாலையில் இருந்து எந்த உற்பத்தி செய்யபட்ட பொருட்களை எடுத்து செல்லக் கூடாது என்று தற்காலிக உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜுன் மாதத்தில் நீதிமன்றத்திற்கு வந்த போது நிர்வாகத் தரப்பில் இருந்து வாய்தா வாங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிர்வாகம் தொழிலாளர்களின் போராட்டத்தை முறியடிக்கவில்லை என்று காவல்துறை மீது ஒரு கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் தொழிலாளர்கள் பிரதிவாதிகளாக கருதப்படவில்லை. இந்த வழக்கில் போடப்பட்டுள்ள தீர்ப்பில் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டால் நிர்வாகத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஜுலை 2 அன்று சனிகிழமையில் காவல்துறை உதவியுடன் கிரீவ்ஸ் காட்டன் நிர்வாகம் அனைத்து பொருட்களையும் தொழி;ற்சாலையில் இருந்து நீக்கியுள்ளது. நிர்வாகத்திற்கு பாதுகாப்பு தருவதற்கு சுமார் பெண் காவல் உட்பட 50 காவலர்கள் கொண்டுவரப் பட்டனர் என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர். அது சட்டப்படி குற்றமாகும் என்று கூறிய தொழிலாளர்களிடம் காவல்துறை அவர்களிடம் நீதிமன்றத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர் என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு இரண்டு விதமான தீர்ப்புகள் உள்ள போது காவல்துறை ஏன் நிர்வாகத்திற்கு அதுவும் நீதிமன்றம் செயல்படாத நாளான சனிக்கிழமை அன்று நிர்வாகத்திற்கு பாதுகாப்பு அளித்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இவ்வாறு இரண்டு வழக்குகள் மூலம் இரண்டு விதமாக தீர்ப்புகள் அளிக்கப்பட்டது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்துள்ளது? நிர்வாகம் கிரிமினல் வழக்கில் தொழிலாளர்களின் மீது குற்றச்சாட்டை எழுப்பிய போது ஏன் தொழிலாளர்கள் அல்லது தொழிற்சங்கங்கள் பிரதிவாதிகளாக்கப்படவில்லை என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
ஏற்கனவே நடத்தப்பட்டுள்ள வழக்கில் தொழிலாளர் தவா சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு நடக்கும் போது தொழி;ற்சாலையை மூடுவது சட்டப்படி குற்றமாகும் என்று நீதியரசர் சந்துரு தீர்ப்பளித்துள்ளார். குறிப்பாக தொழிலாளர்களை கட்டுப்படுத்த மட்டும் போடப்பட்டுள்ள தீர்ப்பை வைத்து நிர்வாகம் ஒரு சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபட்டதை நீதிமன்றம் கண்டித்து தொழிலாளர்களின் உரிமைகளை திரும்பவும் நிலைநாட்டுமா என்பது தெரியவில்லை.

This entry was posted in Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.