நீம்ரானா மஸ்தூர் மஞ்ச்: டாய்கின் தொழிலாளர்களின் புதிய முயற்சி

மத்திய அரசின் புதிய தாராளமயவாதச் சீர்திருத்தங்களை ராஜஸ்தான் அரசு நடைமுறைப்படுத்துவதில் முதலிடம் வகிக்கின்றது. கடந்த ஒரு வருடமாக ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குருகாவ் – மாநேசர் – பாவல் – தாபுகேரா – நீம்ரானா பகுதிகளில் தொழிலாளர்களின் மேல் ஒடுக்குமுறை அதிகரித்து வருகின்றன. தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சங்கம் ஏற்படும் முயற்சியை அரசு வெகுவாக ஒடுக்கிவருகிறது. ஆனாலும் ஹோண்டா மற்றும் டாய்கின் பகுதிகளில் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.

அக்டோபர் 2013 அன்று நீம்ரானா பகுதியில் உள்ள டாய்கின் தொழிற்சாலையில் 846 தொழிலாளர்கள் 41 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் தங்கள் தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டவும், தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கு வேலை செய்ததற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்ட 125 தொழிலாளர்களை திரும்பவும் வேலையில் எடுத்து கொள்ளவும் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். நீம்ரானாவில் உள்ள டாய்கின் தொழிற்சாலையில் ஏர்கண்டிஷனர்கள் தயாரிக்கப்படுகின்றன. இவர்களுடைய உற்பத்தி ரூ1200 ரூபாயாகும். டாய்கின் நிறுவனத்திற்கு நீம்ரானா பகுதியில் உள்ள ஒரே தொழிற்சாலை மட்டுமே உள்ளது. இங்கு 25 விநாடிகளுக்கு ஒரு ஏர் கண்டிஷனர் தயாரிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் அரை மணி நேர இடைவெளி தவிர 8 மணி நேரத்திற்கு தொடர்ந்து வேலை செய்யவேண்டியுள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் ஒரு தொழிலாளர் இடைவேளியற்ற நேரத்தில் சிறுநீர் கழிக்கவேண்டியருந்ததால் அசெம்பளி லைன் நின்றுவிட்டதை அடுத்து அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். சிறு சிறு காரணங்களுக்குக் கூட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கம் செய்யப்பட்டனர் என்று நிரந்தரத் தொழிலாளர்கள் கூறினர்.

2013ல் தொழிலாளர்கள் தங்களுடைய நிலைமை மாறுவதற்கு ஒன்றுபட்டு சங்கம் அமைக்க முடிவு செய்தனர். 116 தொழிலாளர்களின் கையெழுததுடன் ஏஐடியுசியின் மூலம் 2013 மே 6 அன்று சங்கத்தை பதிவு செய்ய விண்ணப்பித்தனர். டாய்கின் ஏர்கண்டிஷனிங் தொழிலாளர்கள் சங்கம் பதிவு செய்யபட்ட 31 ஜுலை 2013 இரவே 42 தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். ஆகஸ்டில் தொழிலாளர்கள் கொடுத்த 39 கோரிக்கைகளில் ஒப்பந்த தொழில்முறையை நீக்கவும், அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரமாக்கவும், பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை மற்றும் குழந்தை காப்பக வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலாக நிர்வாகம் மேலும் பல தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியது. அக்டோபர் 2013ல் மொத்தம் 125 தொழிலாளர்கள் வேலையிழந்து விட்டதை அடுத்து 846 தொழிலாளர்கள் 41 நாள் வேலை நிறுத்தம் செய்தனர்.

இதற்கு பதிலாக வேலை நிறுத்தத்தின் போது நிறுவனப் பொருட்களை அழித்ததாகக் கூறி இன்னும் 56 தொழிலாளர்களை நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது. ஆனால் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நவம்பரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்திற்கு அருகில் இருந்த கிராம மக்களையும் அழைத்தனர். இப்போராட்டங்களில் நிரந்தரத் தொழிலாளர்களும் பயிற்சித் தொழிலாளர்களும் உறுதியாக நின்றனர்.

கடந்த 3 வருடங்களாக டாயிகின் தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. நீம்ரானா பகுதியிலும், டாய்கின் தொழிற்சாலையிலும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிலைமை நிலையற்றதாக உள்ளது. ஒப்பந்த மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு தொழிற்சாலை அளவில் மட்டுமல்லாமல் பகுதிவாரியாக சங்கங்களை அமைப்பது என்று டாய்கின் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த வருடம் மே தினத்தன்று நீம்ரானா தொழிலாளர்கள் சங்கத்தை (நீம்ரான மஸ்தூர் மஞ்ச்) பதிவு செய்துள்ளனர். டாய்கின் தொழற்சங்கத்தின் முயற்சிகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகின்றன.

செப்டம்பர் 2 அன்று டாய்கின் தொழிலாளர்கள் தேசிய பொது வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்டனர். இது வரை தொழிற்சங்கம் இல்லாத இப்பகுதியில் பொது வேலை நிறுத்தம் பெரிய அளவில் நடந்துள்ளது முதன் முறையாகும். தொழிலாளர்களின் மத்தியில் பெரும் விவாதத்திற்கு பி;ன்னர் இது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவது, அதனால் ஏற்படும் விளைவுகள் குறிப்பாக நிரந்தரத் தொழிலாளர்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படும் விளைவுகள், பயிற்சி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் எவ்வாறு ஈடுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டன. இவ்விவாதங்களின் மூலம் தொழிலாளர்கள் நிர்வாகம் தங்களை பயமுறுத்த முடியாது என்பதை வேலை நிறுத்தத்தின் மூலம் உறுதி செய்ய முடிவெடுத்தனர். மேலும் தற்காலிக பணிநீக்கம் அல்லது மற்ற பிரச்சனைகளை எதிர் கொள்ள தயங்கிய தொழிலாளர்களுக்கு பக்குவமாக இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். அதற்கு மேலும் தொழிலாளர்கள் வேலை செய்ய முடிவெடுத்தால் அவர்கள் மேல் சங்கம் எந்த நடவடிக்கை எடுக்காது என்று வாக்குறுதி அளித்தனர்.

ஒப்பந்த தொழில்முறை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்துவது கடினம் எனத் தொழிலாளர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால் நீம்ரானா பகுதியில் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் செயலாக இதை கருதினர். தேசிய வேலை நிறுத்தத்திற்கு முன்னர் அனைத்து பகுதிகளிலும் துண்டு பிரச்சாரங்கள் விநியோகிக்கப்பட்டன. வேலை நிறுத்தத்தை சரியாக கொண்டு போவதற்கான முறைகளையும் நிர்வாக முயற்சிகளை முறியடிக்கும் முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக தேசிய வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்காக நிர்வாகம் செப்டம்பர் 2 அன்று விடுமுறை விட்டு இன்னொரு நாள் உற்பத்தியை ஈடுகட்ட முனைந்தால் அதில் ஈடுபடப் போவதில்லை என்று தொழிலாளர்கள் முடிவெடுத்தனர்.

நிம்ரானா மஸ்தூர் மஞ்ச் பகுதியில் தொழிலாளர் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. ஒப்பந்தத் தொழிலாளர்களும் நிரந்தரமற்றத் தொழிலாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் தாங்களே முடிவெடுத்து வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியது போராட்டத்தின் சிறப்பாகும். இதன் விளைவாக செப்டம்பர் 9 அன்று விரேந்தரா என்னும் நிரந்தரத் தொழிலாளரை நிர்வாகம் வேலை விட்டு நீக்கியது. பயிற்சி த் தொழிலாளர்களை தடுத்தி நிறுத்தி பலவந்தமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தியமாக அவர் மேல் குற்றம் சாட்டப்பட்து. அவர் மேல் பொய் வழக்கும் பதிவு செய்யபட்டது. ஆனால் தொழிலாளர்கள் செப்டம்பர் 9 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தோழர் விரேந்திராவை மீண்டும் பணியில் அமர்த்தி வெற்றி கண்டனர்.

This entry was posted in Apprentice, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.