நிலையாணை சட்ட திருத்ததின் விதிமுறைகள் மாற்றுவதில் அரசு மெத்தனம்

 மாதிரி நிலையாணையை மாற்ற தொழிற்சங்கங்கள் கோரிக்கை

தொழிலக வேலைலாய்ப்பு (நிலையாணை) திருத்த சட்டம் 2008(IE(SO)TNAA 2008) 26.6.2016 அன்று ஜனாதிபதியால் ஒப்புதல் பெறப்பட்டு 4/7/2016 அன்று அரசாங்க கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள், தொழிலாளர்களின் தொடர்ந்த வேலை வாய்ப்பு மற்றும் பிழைப்புமட்டக் கூலி பெரும் உரிமைகளை காப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ஆனாலும், அந்த மாற்றங்களை உள்ளடக்கி மாதிரி தொழிலக நிலையாணை(Model Employment Standing Order – MESO) இன்னும் திருத்தியமைக்கப்படவில்லை. விதிகளே ஆணைகளை சட்டப்பூர்வமாக்குகின்றன. விதிகளற்று, சட்டங்களை எந்தத் துறையாலும் அமல்படுத்த இயலாது. எட்டு வருடங்களுக்கு மேலாக ஜனாதிபதியின் ஒப்புதலை பெற காத்திருந்த தொழிற்சங்கங்கள் MESOஐ திருத்த தமிழக அரசு காலதாமதம் செய்வதால் அதிருப்தியடைந்துள்ளன.

MESOவில் எப்படிப்பட்ட திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைக்குமாறு தொழிற்சங்கங்களுக்கு அரசு கோரியிருந்தது. அவை கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்கின:

  • ஒரு குறிப்பிட்ட நியாயமான காலத்திற்குள் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

  • பயிற்சியாளர் உட்பட பல்வேறு நிலைகளில் வேலை பார்க்கும் நிலையற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையை, மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 10%க்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • தொழிற்சாலைகள் தற்காலிக பணியாளர்களை மறுபடி பணியில் அமர்த்தவும், நிரந்தரப்படுத்தும் போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

பத்தாண்டுக்கும் மேலாக ஜனாதிபதியின் அலுவகத்தில்

1946 இன் தொழிலக வேலைலாய்ப்பு (நிலையாணை) IE(SO) சட்டமும், MESO வும் பணியின் தன்மை, பணியாளரை வகைப்படுத்தல், பணி சார்ந்த சூழ்நிலைகள் போன்றவற்றை வரையறுக்கிறது. தொழிற்சாலைகள் தொடர்ந்து தற்காலிக பணியாளர்கள்/ பயிற்சியாளர்கள் போன்ற நிலையிலேயே குறைந்த கால அளவில் வேலைக்கு எடுப்பது, அப்பணியாளர்களுக்கு Payment of Wages Act மற்றும் குறைந்த பட்ச ஊதிய விதிகளின்படி ஊதியம் கொடுக்க மறுப்பது அதிகரித்து வருகின்றன. சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் இளம்பெண் தொழிலாளர்களை மனிதாபிமானமில்லாமல் சுரண்டுவது நெசவு மற்றும் ஆயத்த ஆடைத் துறைகளில் ஓங்கியுள்ளது.

இந்த விதிமீறல்களை நீக்கவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழ்நாடு சட்டசபை மே 2008இல், IE(SO) சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இத்திருத்தங்கள் தற்காலிக பணியாளர்களின் மறு வேலை வாய்ப்பு மற்றும் பணி நிபந்தனைகளுக்கான (10A) உட்பிரிவுகளையும் , மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் பயிற்சியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களின் (10B) சதவிகிதத்தையும் நிர்ணயித்துக்கொள்ள அரசை அனுமதிக்கிறது.

தமிழக அரசின் திருத்தங்களை முறியடிக்க மத்திய அரசு பல கேள்விகளை எழுப்பி இத்திருத்தங்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் விட்டது. மத்திய அரசின் கேள்விகளை தமிழக அரசு எதிர்கொண்டிருந்த வேளையிலே, இவ்விஷயங்களை துரிதப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் உள்துறை அமைச்சகத்துக்கு மனு கொடுத்தன. AICCTU இத்திருத்தங்களை இயற்ற பல்வேறு முறைகளை மேற்கொண்டது ( . தோழர் கருமலையன், துணைப்பொது செயலாளர், CITU (தநா), சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் நடராசன் அவர்கள் வழியாக, உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளரிடம் இப்பிரச்சனையை எழுப்பியதாக கூறியிருக்கிறார். இறுதியாக, எட்டு வருடங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி இத்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

MESO மீதான சர்ச்சைகள்

MESO வை திருத்தி, தமிழக சட்டமன்றத்தின் வழியாக இயற்றப்பட்ட மக்களின் விருப்பத்தைசெயல்படுத்த தொழிலாளர் துறை நடவடிக்கைகள் எடுப்பதாக தெரியவில்லை. AICCTU 29 ஆகஸ்டு அன்று அனுப்பிய கடிதத்துடன் தொழிலாளர் துறையை சந்தித்தது. பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் MESO வுக்கு திருத்தங்கள் பரிந்துரைத்த பிறகு, தொழிலாளர் துறை 18 அக்டோபர் அன்று தொழிற்சங்கங்களையும் முதலாளிகள் கூட்டமைப்பையும் அழைத்து கலந்தாய்வு நடத்தியது. அப்போது, திருத்தங்களை தெரிவித்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது.

இச்சந்திப்பில் பங்கேற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிலாளர் துறையும், தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகமும் இரண்டு கருத்துகளை வைத்ததாக கூறுகின்றனர்.ஒன்று அனைத்து தொழிற்சாலைகளில் ஏற்கனவே உள்ள நிலையாணையை மாற்றுவது சாத்தியமில்லாதது. இன்னொன்று தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் சில ஏற்கனவே பயிற்சியாளர் சட்டத்தில் உள்ளது. இக்கருத்துகள் தொழிலாளர் துறை சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இல்லை என்பதை தெளிவாக்குகின்றன.

முதலாளிகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை எழுத்து வடிவில் சமர்ப்பிப்பதாகக் கூறி, ஆனால் வாய்மொழியாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக இச்சீர்திருத்தங்கள் தொழில் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தேற்க செயல்படுவதை தடுக்கும் என்று முதலாளிகள் கருதுகின்றனர். மேலும் இவை உற்பத்தி செலவை அதிகரிக்கும் என்றும், இதனால் முதலீடுகள் குறையும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

AICCTUவின் மாநிலச் செயலாளரான தோழர் AS குமார், பயிற்சியாளர் சட்டம் பயிற்சியாளர்என்று குறிப்பிட்டுள்ள சிறிய பிரிவுக்கே பொருந்தும் என்றும், ஆனால் நிறுவனங்கள் பயிற்சியாளர்கள் என்ற பெயரில் தொழிலாளர்களை சட்டத்திற்கு மாறாக வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார். நிறுவனங்கள் இச்சட்டத்தின் விதிகளை தவறாக பயன்படுத்தி ஆட்களை நேரடி உற்பத்தியில் பணியமர்த்துவதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு தொழிற்சாலையின் தற்காலிக ஊழியர்களை பட்டியலிட செய்யும் விதிகளை MESOவின் திருத்தங்களில் சேர்க்கக் கோரி AICCTU பதில் சமர்ப்பித்துள்ளது. தொழிற்சாலைகளில் தற்காலிக மற்றும் நிரந்தர வேலைகளுக்கான வாய்ப்புகள் வரும் போது, இப்பட்டியலில் குறிப்பிட்டுள்ள ஊழியர்கள் வேலையில் நியமனம் செய்யப்படுவர். இதுபோன்ற நடவடிக்கைகள் முதலீடுகளை குறைத்துவிடும் என்று பெருநிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், 1978இலிருந்தே இவ்விதிகளைக் கொண்ட மஹாராஷ்டிரா, தொழில் மற்றும் வணிகத்துறைகளில் முன்னணி மாநிலமாக தொடர்ந்துக்கொண்டிருக்கிறது (பார்க்க: Central Standing Order இன் பிரிவுகள் 4A, 4B, 4C, 4Dக்கு மஹாராஷ்டிராவின் திருத்தங்கள்).

CITU (TN) துணைப் பொது செயலாளர், தோழர் கருமலையன், பேச்சுவார்த்தைகளின்போது, “பயிற்சியாளர் சட்டம்தற்காலிக பணியாளர்களையும் உள்ளடக்கும் என்ற எண்ணத்தை தொழிற்சங்கங்கள் நிராகரித்துவிட்டதாக கூறினார். வெவ்வேறு துறைகளுக்கேற்ப, ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை பணியாற்றிய ஊழியர்களை நிரந்தரப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டனர். நிரந்தர ஊழியர்களைத் தவிர, பல்வேறு பிரிவுகளிலுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை, ஒட்டு மொத்த தொழிலாளர்களில் 2.5%இலிருந்து 10% வரைக்குள் இருக்க வேண்டும் என்றும் கூறினர்.

AICCTU, நிச்சயமற்ற சூழல்களில் வேலை செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கையை 5%க்குள்ளாக கட்டுப்படுத்தும் விதி 4E யை MESO(TN)இல் சேர்க்க பரிந்துரைத்துள்ளது. தோழர் கருமலையன், தொழிற்சங்கங்கள் மேற்கூறிய விஷயங்களைப் பற்றி ஒருமித்த கருத்துகள் கொண்டதாகவும், இச்சட்டங்கள் செய்லபட, சில நெகிழ்வுத்தன்மைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உணர்த்தினார். அவர், மஹாராஷ்டிர MESO சிறப்பாக இருப்பதாக ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், அந்த விதிகள் திருத்தங்களில் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தவில்லை.

இந்த விஷயத்தின் முன்னேற்றத்திற்காக இந்த கூட்டத்திற்கு பிறகு, தொழிலாளர் துறையிலிருந்து கலந்தாலோசனைகளோ தொடர்புகளோ நடத்தப்படவில்லை. முதலாளிகள் ஏதேனும் பதில் மனு தாக்கல் செய்தார்களா என்று தொழிற்சங்கங்கள் அறிந்திருக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் அவர்களை காப்பதாக உறுதியளித்தபோதிலும், அதிகார வர்க்கத்தின் காலதாமதம் கடந்த எட்டு வருடங்களாக தற்காலிக பணியாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கு எண்ணற்ற துயரங்களை உருவாக்கிவிட்டது. மேலும் தாமதிப்பதும், சட்டங்களில் தாத்பரியத்தை நீர்த்து போக செய்வதற்கான முயற்சிகளும், அரசியலமைப்பு மீதுள்ள நம்பிக்கையை சிதைத்துவிடும். MESOவின் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிகள் துரிதப்பட வேண்டும் என்பதோடு அச்சட்டத்தின் தாத்பரியத்திற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று தொழிற்சங்க தலைவர்கள் கோருகின்றனர்.

விவரங்களுக்கு:

Enactments of Amendments to Industrial Employment (Standing orders) Act and the Struggle Ahead — Ma Le Theepori)

This entry was posted in Contract Workers, Factory Workers, Labour Laws, Working Class Vision, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.