WS இன்டஸ்ட்ரீஸ் தொழிலாளர்கள் VRS கேட்டுப் போராட்டம் – சங்கர்

சென்னையில் உள்ள போரூரில் இயங்கி வந்த WS இன்டஸ்ட்ரீஸ் இந்தியா என்ற தனியார் தொழிற்சாலை 2013ல் மூடியதனால் சுமார் 450 தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீட்டு தொகையை தருவதாக கூறிய நிறுவனம் இதுவரை தராததால் அவர்கள் ஏழ்மைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர் துறையை அவர்கள் பலமுறை நாடியும் பல்வேறு போராட்டங்களை நடத்திய பின்னரும் அவர்களுக்கு எந்த தீர்வும் கிட்டவில்லை.

போரூர் மவுண்ட் சாலையில் இயங்கி வந்த தொழிற்சாலையில் பீங்கான மற்றும் மின் சாதன உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. இங்கு சுமார் 450 தொழிலாளர்கள் 20 வருடங்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் ஆண் தொழலாளர்கள் ஆவர் இவர்களுக்கு மாதம் ரூ20000 வரை ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

2013 ஆம் ஆண்டில் தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்குவதால் தொழிற்சாலையை மூடுவதாகவும், வேலை செய்த தொழிலாளர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் ஓய்வூதியம்(VRS) தரப்படும் என்று நி;ர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இதுவரை 60 தொழிலாளர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் கொடுக்கப்பட்டது.

இது குறித்து அங்கு வேலை செய்த தொழிலாளர் திரு. சத்தியமூர்த்தி கூறுகையில் 2013 டிசம்பருக்குள் தங்கள் ஓய்வூதியப் பணத்தை தருவதாகவும் ஆனால் நிர்வாகம் அப்போது தர இயலவில்லை அதனால் ஜனவரஸ 2014ல் இருந்து மார்ச் 2014 வரை மாத ஊதியம் மற்றும் போனஸ் தருவதாகவும் அதன் பின்னர் ஓய்வூதியத்தை தருவதாக நிர்வாகம் கூறியதை அடுத்து தொழிலாளர் நல வாரியத்தின் முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறினார்.

ஆனால் நிர்வாகம் ஓய்வூதியத்தை தரவில்லை என்றும் 2014 இறுதியில் 60 தொழிலாளர்களுக்கு மட்டும் ஓய்வூதியத்தை கொடுத்துள்ளதாக அவர் கூறினார். மீதம் உள்ள தொழிலாளர்களுக்கு 1 லட்ச ரூபாய் நிர்வாகம் கொடுத்ததாகவும் (அவர்களுக்கு 11லட்சம் வரை இழப்பீடு தொகை கணக்கிடப்பட்டுள்ளது) என்றும் மீத ஓய்வூதியத்தை தருவதை தள்ளிப் போட்டதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஜுலை 2015 வரை மாத ஊதியம் கொடுத்து வந்த நிர்வாகம் பின்னர் முடியவில்லை எனக் கூறிவிட்டதாகவும் அதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளித்ததாகவும், தொழிற்சாலையில் தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

வேலை இழந்த தொழிலாளர்கள் தற்போது தனியார் காவல், ஒப்பந்த தொழில்கள் போன்ற நிலையற்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதுவரை 15 தொழிலாளர்கள் உடல் நலம் இன்றி மற்றும் மனதளவில் பாதித்து இறந்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தங்கள் கல்யாணம், குழந்தைகள் கல்வி என்ற பல குடும்பப் பொறுப்புகளை ஈடுகட்ட முடியாமல் வேதனையில் உள்ளனர்.

கடைசியில் நடந்த பேச்சு வார்த்தையில் தொழிலாளர்களுக்கு 1 லட்ச ரூபாய் ஓய்வூதியம் தர முடியும் என்று நிர்வாகம் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 9 அன்று தொழிலாளர்கள் நிறுவன அதிகாரியின் வீட்டை முற்றுகைப் போராட்டம் நடத்த முற்பட்ட போது காவல்துறையால் கைது செய்து ஒருநாள் காவலில் வைக்கப்பட்டனர்.

(Sankar – Madras School of Social Work)

Be Sociable, Share!
This entry was posted in Factory Workers, Lock out/Closure, News, தமிழ் and tagged , , . Bookmark the permalink.