ஜிண்டெக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – எஸ். கண்ணன்

காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும் புதூர் தாலுகா போந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஜிண்டெக் என்ற தென்கொரிய நிறுவனம். இதில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனம், ஹூண்டாய், நிசான், ஹனில், உள்ளிட்டு 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஃபேப்ரிகேஷன், பெயிண்டிங், மோல்டிங், அசெம்பிளி மற்றும் குவாலிட்டி ஆகிய துறைகளில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காண்ட் ராக்ட் தொழிலாளர்கள் 200 க்கும் மேல் பணியாற்றுகின்றனர். மோல்டிங் மற்றும் அசெம்பிளி துறைகளில் ஒரு நிரந்தரத் தொழிலாளர் கூட இல்லாத அளவிற்கு அப்பட்டமாக, தொழிற்சாலைகள் ஆய்வகம் மற்றும் சுகாதாரத் துறையின் சட்டங்களை மீறி செயல் பட்டு வருகிறது.
கடந்த 2015 ம் ஆண்டு மே மாதம் சிஐடியு தொழிற்சங்கம் துவக்கப்பட்ட பின்,  முதல் கோரிக்கையாக நிறுவனத்தில் 4 முதல் 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பயிற்சி என்ற பெயரில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, நிரந்தரப் பணியாணை வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. சங்கம் வைத்ததற்காக தலைமைப் பொறுப்பில் இருந்த 6 தொழிலாளர்களை முதலில் சஸ்பெண்ட் செய்தது, பின்னர் டிஸ்மிஸ் செய்தது. ஆனாலும் சங்கம் தொடர்ந்து போராடியதன் விளைவாக, நிரந்தரப் பணியாணை வழங்கப் பட்டது. 2016 முதல் வழங்க வேண்டிய சம்பள உயர்வை நிர்வாகம் வழங்க மறுத்து வருகிறது. அதேபோல் டிஸ்மிஸ் செய்யப் பட்டத் தொழிலாளர்களை, மீண்டும் வேலைக்கு எடுத்து வருகிறது. இதற்கிடையில் சங்கத்தை உடைக்க ஒரு பகுதி தொழிலாளர்கள் உதவி சூப்பர்வைசராக பதவி உயர்வு செய்து
 தொழிற்சங்கத்தில் இருந்து வெளியேற்றியது. மேலும் 4 தொழிலாளர்களை சஸ்பெண்ட் செய்தது.
எனவே தொழிலாளர்கள் தாங்கள் அளித்திருந்த வேலை நிறுத்த அறிவிப்பின் படி, 19 மே முதல் வேலை நிறுத்தம் துவங்கினர். 12 நாள்கள் வேலை நிறுத்தத்திற்குப் பின் 2 தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுக்க சம்மதித்தது. ஊதிய உயர்வு மற்று இதர டிஸ்மிஸ் சஸ்பெண்ட் தொழிலாளர் பிரச்சனைகளை, தொடர்ந்து தொழிலாளர் துறை அதிகாரி முன்னிலையில், பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்ட அடிப்படையில், வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. 10 முறைக்கு மேல் சமரச முயற்சி 7 மாதங்களாக எடுக்கப் பட்ட பிறகும், நிர்வாகம் எந்த முன்னேற்றமும் தெரிவிக்காத நிலையில், மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டு வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.
10 நாள்களாக நடந்து வரும் வேலை நிறுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காண்ட் ராக்ட் தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்கிறது. இது ஆபத்தானது ஆகும். சட்டத்திற்கு புறம்பாக தொழிலாளர்களை12மணிநேரம் வேலை செய்ய வைக்கிறது. இது ஹூண்டாய் காரின் தரத்தைப் பாதிக்கும் என்பது குறித்து கவலை கொள்ளவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களைப் பழிவாங்கும் நோக்கில் காண்ட் ராக்ட் தொழிலாளர் ஈடுபடுத்தப் படுகிற அவலம் கண்டு கொள்ளப் படவில்லை. எனவே தொழிற்சாலைகள் ஆய்வகம் மற்றும் சுகாதரத் துறையின் துணை இயக்குனர் அலுவலகத்தில் கூட்டு முறையீடு, செய்யப்பட்டது.
This entry was posted in Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.