தொடர் பாலியல் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பற்ற பணி நிலைமைகளை எதிர்த்து அமெரிக்க தொழிற்சாலை வென்ச்சர் லைட்டிங்க் பெண் தொழிலாளர்களின் போராட்டம்

மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க வளாகத்தில் (MEPZ) இருக்கும் வென்ச்சர் லைட்டிங்க் எனும் ஆலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களிடத்தில் ஆலைக்குள் தங்கள் பணியைப் பற்றிய உக்கிரமான கதைகள் மட்டுமே உள்ளன. அவர்களது மேற்பார்வையாளரால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளனர் இத்தொழிலாளர்கள். கடந்த டிசம்பரில் சரியான ஷிப்டிற்கு வராததால், மூன்று தொழிலாளர்களைத் துன்புறுத்திய பொழுது, இவர்களது பொறுமை அதன் வரம்பை அடைந்தது. உடனடியாக, 700 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் இணைந்து, அம்மேலாளரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் கூற்றை வைத்துப் பார்த்தால், அமெரிக்க நிறுவனமான வென்ச்சர் லைட்டிங் துணை நிறுவனம் ISO சான்றிதழ் பெற்றுள்ளது என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது. இந்நிறுவனம் உச்சபட்ச உலக மதீப்பிடுகளைப் பூர்த்தி செய்வது, ஆச்சரியம் அளிக்கிறது.

எங்கள் மூவரையும் உள்ளே அனுமதிக்க மேலாளருக்கு ஆணை பிறப்பித்திருந்தபோதும், ஆண் தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக நாங்கள் ஏதோ செய்து விட்டோம் என்று கூறினார். இம்மேலாளரோ கடந்த ஏழு வருடங்களாக எங்களைத் துன்புறுத்தி வருகிறார். அவரை வேலை நீக்கம் செய்தால் மட்டுமே நாங்கள் பணியில் ஈடுபடுவோம் என்று நிர்வாகத்திடம் கூறிவிட்டதாக”, இருபது நிமிடங்கள் கதவுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் கூறினார். ஒளிப்பதிவு சாதனங்களைத் தயாரித்து வரும் இத்தொழிற்சாலை 1998 முதல் MEPZ-ற்கு உள்ளே செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்ட காலம் முதலே தொழிற்சாலையில் பணிபுரிந்துவரும் பெண் தொழிலாளர்கள், தங்களுக்கு 12000 முதல் 20000 ரூபாய் அளவில் குறைந்த சம்பளம் அளிக்கப்படுவது மட்டுமல்லாமல், ரசாயனங்களைக் கையாள்வதால் உடல்நலமும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது என்று கூறுகின்றனர்.

பத்து வருடங்களுக்கும் மேலாக இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர் ஒருவர், “நான் கர்ப்பமுற்றிருந்த பொழுது ஒன்பதாவது மாதம் வரை பணி புரிந்தேன். மனிதவளத் துறை மேலாளரிடம் சுலபமான பணிகள் வழங்குமாறு வேண்டிக் கொண்டேன். என் வயிறு எந்திரத்தைத் தொட்டுக்கொண்டு இருந்ததால், நேரடியாக சூடு பரவியது. ஆனால், நான் கர்ப்பமாவதற்கு முன்பு இதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும் என்று கூறிவிட்டனர்” என்று கூறுகிறார். அத்தொழிலாளியின் பிரசவத்திற்குப் பிறகு, குறைந்தது ஆறு மாத காலம் வீட்டிலிருந்து ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் பரிந்துரைத்த பொழுதும், வீட்டின் பொருளாதார நிலைமை காரணமாக, ஒரு மாதத்திற்குள்ளாகவே அவர் மீண்டும் பணிக்குத் திரும்பினார். நிர்வாகத்திடம் மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய பொழுதும், சுலபமான பணிகளை ஒதுக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. பலருக்குக் குறைப் பிரசவம் மற்றும் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்று அங்கு பணி புரிபவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை கருச்சிதைவு ஏற்பட்டதால் அடுத்த முறை கருவுற்ற பொழுது அந்த குழந்தையைக் காப்பாற்ற விரும்பிய தொழிலாளர் ஒருவர் வேலையை விட்டே சென்றுவிட்டார்.

2014 டிசம்பரில், CITU உடன் இணைக்கப்பட்டுள்ள பொது பணியாளர்கள் சங்கத்தைத் தொடர்பு கொண்ட தொழிலாளர்கள் பணி சூழல் தொடர்பான கோரிக்கைகளை நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளனர். “2011-இல் எங்கள் வேலைப் பளுவை இருமடங்காக கூட்டியுள்ளனர். அதுவரையில் ஒரே ஒரு இயந்திரத்தை மட்டுமே இயக்கிக் கொண்டு இருந்த நாங்கள் திடீரென இரண்டு இயந்திரங்களை இயக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதன் மீது கருத்து தெரிவிக்க எங்களுக்கு உரிமையில்லை. ஆனால் நாங்கள் சங்கம் அமைத்த பொழுது, இந்த நிலைமை மாறியது. இது எங்களுக்குப் பெரிய வெற்றி.” என்று ஒரு தொழிலாளர் கூறினார். சில திருத்தங்கள் செய்யப்பட்டபொழுதும், பாதுகாப்பற்ற பணி சூழலும், பாலியல் வங்கொடுமைகள் தொடர்கின்றன. கழிப்பறையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் குறிப்பேட்டில் பணி உள் நுழையும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம் குறிப்பிட்டு கையொப்பமிட வேண்டும் என்றும் மேற்பார்வையாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளதாக கூறுகின்றனர், மேலும், மேற்பார்வையாளர் இழிச்சொற்களையும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும், திருமணமாகாத பெண்களை குறிவைத்து தாக்குவதாகவும், அவர்களிடம் முறைகேடாக நடந்துகொள்ள முயற்சிப்பதாகவும் கூறுகின்றனர்,

சிகரெட்டால் தங்கள் சீருடையில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளையும், பல்வேறு காயங்களையும் தொழிலாளார்கள் காண்பித்தனர். பாதரசம் உட்பட பல்வேறு ரசாயனங்களால் தோலில் ஏற்பட்டுள்ள காயங்களின் புகைப்படங்களையும் காண்பித்தனர். கண்ணாடி மற்றும் கையுறைகள் வழங்கப்பட்ட போதும், இக்காயங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள இந்த உபகரணங்கள் உதவவில்லை என்றே தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மேற்பார்வையாளருக்கு எதிராகப் பலமுறை எழுத்து மூலமாகவும் நேரிலும் புகார் தெரிவித்தபோதும், அவருக்கு எதிராக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தவறியதால், டிசம்பர் 21 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு எடுத்ததாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, நிர்வாகம் விளக்குகளை அணைத்தும், இரண்டாம் ஷிஃப்ட் தொழிலாளர்களுக்கு உணவு மறுத்தும், கழிவறைக்குச் செல்வதற்கான கதவுகளை அடைத்தும் பதிலளித்துள்ளது.

அடுத்த நாள், தொழிற்சாலைக்கு வந்த துணை ஆணையர் தொழிலாளர்களை உள்ளே செல்லுமாறு வேண்டிக்கொண்டார். உள்ளே சென்ற பிறகும் கூட, மேற்பார்வையாளரை வேலை நீக்கம் செய்யும் வரையில் தொழிலாளார்கள் பணியில் ஈடுபட மறுத்ததாக ஒரு தொழிலாளர் கூறினார். மாதவிடாய் சமயமாக இருந்ததால், கழிப்பறை பூட்டபட்டது பெரும் அவதியை உண்டாக்கியதாக ஒரு பெண் தொழிலாளி தெரிவித்தார். உணவு உட்கொள்ளாததால் மயங்கி விழுந்த இரு தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்,

தொழிலாளர்களுக்கான துணை ஆணையரிடம் (ACL) சங்கத்தின் மூலமாக புகார் தெரிவிக்கப் பட்டிருந்ததால், பாலியல் கொடுமை தடுப்புக் குழு மூலமாக பாலியல் புகார்களின் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளார் அவர். நிர்வாகப் பிரதிநிதிகள் இப்பிரச்சனைகள் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியதைக் கேட்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இப்பிரச்சனையைக் கழைய அமைக்கப்பட்ட கமிட்டி என்பது வெறும் கண்துடைப்பே என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர், ஏனென்றால், தொழிலாளப் பிரதிநிதிகள் அனைவரும் நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஆவர்.

தொழிற்சாலையைத் திறக்கவேண்டும் என்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிபந்தனையின்றி வேலை வழங்க வேண்டும் என்றும் நிர்வாகத்திடம் ACL அறிவுறுத்திய பிறகு, 2016 டிசம்பர் 27 அன்றும் 2017 ஜனவரி 21 அன்றும் தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இருப்பினும், மேற்பார்வையாளரால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மறுக்காமல் செய்வோம் என்றும், உற்பத்தி இலக்குகளை அடைவதற்காக செயல்படுவோம் என்றும் உறுதியளித்து கையொப்பமிட வேண்டும் என்று நிர்வாகம் வலியுறுத்தியது. மேலும், நிர்வாகத்தின் விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும் என்றும் மேற்பார்வையாளர் பிறப்பிக்கும் ஆணைகளுக்கு அடிபணிவோம் என்றும் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை ஒத்துக்கொள்ளும்படியாக இல்லை என்று உணர்ந்த தொழிலாளர்கள் அந்த உடன்படிக்கையில் கையொப்பமிடாமல் தொடர்ந்து தொழிற்சாலை வாயிலில் குழுமினர்.

இது ACL பரிந்துரைக்கு எதிராக உள்ளதாக MEPZ சங்கப் பொருளாளர் ஜெயந்தி கூறுகிறார். “நிர்வாகம் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம். மேலும், தொழிலாளர் துறை அமைச்சரிடமும் SEZ இன் வளர்ச்சித் துறை ஆணையிரிடமும் மனுக்கள் சமர்ப்பித்துள்ளோம்” என்று கூறினார்.

This entry was posted in Factory Workers, Lock out/Closure, News, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.