பிஎம்ஐ என்ஜினியரிங் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதப் போக்கை எதிர்த்து போராட்டம்

இரண்டு மாதப் போராட்டங்களுக்குப் பின், பிப்ரவரி 15லிருந்து பிஎம்ஐ என்ஜினியரிங்கைச் சார்ந்த 200க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பி உள்ளனர். மெப்ஸ் தாம்பர வளாகத்தில் உள்ள இந்தத் தொழிற்சாலை அமெரிக்காவின் பிஎம்ஐ குழுமத்தினால் நிறுவப்பட்டுள்ளது. போயிங், அமெரிக்க பாதுகாப்பு துறைகளுக்கான ஏரோஸ்பேஸ் இயந்திரங்களைத் தயாரித்து வருகிறது. இங்கு 256 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் சிஐடியுத் தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்கள்.

இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் ஐடிஐ அல்லது என்ஜினியரிங் டிப்ளமா முடித்து பல வருட காலமாக பணி புரிகின்றனர். அவர்களுக்கு ஊதியம் ரூ14000 முதல் ரூ35000 வரை தரப்படுகிறது. தங்களுடைய தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதை பிஎம்ஐ என்ஜினியரிங் பெருமையாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ‘இ;ந்தியாவில் தொழிற்சாலையை அமைத்ததனால் பிஎம்ஐ என்ஜினியரிங்; திறமை மிக்க உற்பத்தி மற்றும் வடிவமைப்பு என்ஜினியர்களை குறைந்த ஊதியத்திற்கு வைத்துக் கொள்ள முடிவதாக’ என அவர்கள் கூறியுள்ளனர்.

ஒரு நெடியப் போராட்டத்திற்கு பின்னர் கடந்த வருடம் மே மாதத்தில் தொழிற்தாவா சட்டம் பகுதி 12(3)ன் கீழ் நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் 33 தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக் கோரியும், ஊதிய உயர்வு மற்றும் 3 சீருடைகள், ஷீ, மாதம் 500ரூபாய் சலவை பயன் ஆகியவை முடிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் ஒப்பந்தத்தை அமல்படுத்த நிர்வாக அதிகாரிகள் குறிப்பாக மனித வள மேலாளரும், உற்பத்தி மேலாளரும் மறுத்து வருகின்றனர். மாறாக தொழிலாளர்களை தற்காலிகப் பணி நீக்கம் அல்லது நிரந்தரமாக பணி நீக்கம் செய்து வருகின்றனர். தொழிற்சாலைக்குள் ஐஎன்டியுசியின் தலைமையில் போட்டித் தொழிற்சங்கத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். சிஐடியு தொழிற்சங்கத்தின் தொழிலாளர் பிரதிநிதிகளை அவர்கள் குறிவைத்து பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

பணிநீக்கத்தை எதிர்த்து எழுந்த தன்னிச்சையான வேலை நிறுத்தம்

கிருஷணமூர்த்தி எனும் தொழிலாளர் புதிதாக திறக்கப்பட்ட பெயின்ட் ஷாப் பகுதியில் வேலை செய்து வந்தார். நிறுவனத்தின் நிலையாணை(Standing Order) படி, 6 மாதம் பூர்த்தியான பின் தொழிலாளர் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும். ஆனால் 8 மாதத்திற்கு பிறகும் கிருஷ்ணமூர்த்தி நிரந்தரப்படுத்தப் படவில்லை. தான் சிஐடியு தொழிற்சங்கத்தில் உள்ளதால் நிர்வாகம் தன்னை நிரந்தரப்படுத்தவில்லை என்று அவர் கூறினார். ஜுன் 2016ல் அவரை நிர்வாகம் வேலை விட்டு நீக்கியுள்ளது.

தான் சரியாக வேலை செய்யவில்லை என்றும் கண்காணிப்பாளரை நான் தாக்கினேன் என்றும் கண்காணிப்பாளர் பொய் குற்றம் சாத்தியுள்ளதாக அவர் கூறினார். தன்னுடைய பணி காரணமாகவே நிர்வாகம் NADCAP சான்றிதழைப் பெற முடிந்தது என்று அவர் கூறுகிறார். தொழிற்சங்கத்தில் சேர்ந்து நிர்வாகத்திற்கு எதிரான பணிகளில் தான் ஈடுபட்டுள்ளதாக நிர்வாகம் மிரட்டியதாகவும் அவர் கூறினார். பின்னர் தன்னை வேலை விட்டு நிற்கக் கோரி நிர்வாகம் நிர்பந்தித்ததாகவும் ஒரு புது யூனிட் திறந்த பின்னர் அவரை வேலையில் சேர்த்துக் கொள்வதாக நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் அவர் மறுத்து விட்டார்.

அதற்கு பின்னர் ஜுன் மாதம் தனக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு கொடுத்தார்கள் என்றும் பின்னர் நடந்த உள் விசாரணையில் தான் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார். உள் விசாரணை நடுநிலை கொண்டவரால் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆனால் நிர்வாகம் நியமித்த வக்கீல் ஒரு தலை பட்சமாகவே நடந்து கொண்டார் என்று கிருஷ்ணமூர்த்தி கூறினார். நிலையாணை நகல், ஒரிஜினல் குற்றச்சாட்டு கடித நகல் மற்றும் நான் செய்த பணியை வாடிக்கையாளர் நிராகரித்ததற்கான ஆதாரம் ஆகியவற்றை கிருஷ்ணமூர்த்தி கோரியுள்ளார். ஆனால் தனக்கு இவற்றை எதையும் தரவில்லை என்று அவர் குறிப்பிட்டார். இதே போல் செந்தில் குமார் என்னும் இன்னொரு தொழிலாளரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இருத் தொழிலாளர்களின் விசாரணை 17 டிசம்பர் அன்று நடைபெற்றது. இது குறித்து விவரம் அறிந்த 5 தொழிற்சங்கப் பிரதிநிதிகள் 19 டிசம்பர் அன்று மனித வள மேலாளரை அணுகி இரண்டு தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரியுள்ளனர். ஆனால் இக்கோரிக்கையை மேலாளர் நிராகரிக்க, அன்று பொது ஷிப்ட் மற்றும் முதல் ஷிப்டில் இருந்த அனைத்துத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

வேலை நிறுத்தத்தை ஊக்குவித்ததாக தொழிற்சங்கத்தின் தலைவரும் சீனியர் ஆப்பரேட்டரும், மெப்ஸ் தொழிலாளர்கள் மற்றும் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும் ஆன தோழர் மஹேஷ்வரன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொழிற்சாலைக்கு தாசில்தார் வந்து தொழிலாளர்கள் வேலை செய்வதாக இருந்தால் மட்டுமே தொழிற்சாலைக்குள் இருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் தொழிலாளர்கள் இந்த இடத்தை விட்டு நகரவில்லை. உடனே நிர்வாகம் ‘உற்பத்தி நிறுத்தம்’ என்ற அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அங்கு அப்போது வந்த இரண்டாவது ஷிப்ட்(2 மணிக்கு ஆரம்பம்) தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்று நிர்வாகம் நிர்ப்பந்த்த்துள்ளது. ஆனால் அனைத்து தொழிலாளர்களும் ஒன்று கூடி தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

காவல் துறை துணை ஆணையர் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு செல்லுமாறுக் கோரியுள்ளார். குhவல் துறையின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வேலைக்கு திரும்பியதாகவும் ஆனால் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க நிர்வாகம் முன் வரவில்லை என்று மகேஷ்வரன் கூறினார். தோழிலாளர்கள் தங்களுடைய வேலைப் பகுதிக்கு திரும்பிய போது, நிர்வாகம் மின்சாரத்தை அணைத்து தொழிலாளர்களை மீண்டும் போராட்டத்திற்கு தூண்டியதாகவும் அவர் கூறினார். தொழிற்சாலை வாயில் வெளியில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்துள்ள நிலையில், ஜனவரியில் தொழிற்சாலையை மீண்டும் திறக்கக் கோரி தொழிலாளர் துறை துணை ஆணையரின் கோரிக்கையையும் நிர்வாகம் புறக்கணித்துள்ளது.

உயர் நீதி மன்றத்தில் ஒரு சிறிய வெற்றி

இதற்கிடையே 18 தொழிலாளர்கள் தாங்களே வேலையை விட்டு நின்று விட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் நிர்வாகம் 22 தொழிலாளர்களை வேலை விட்டு நீக்கியுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதில் கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர் ஆவார். பல மாதங்களாக வருமானம் இல்லாமல் தனது அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய கிருஷ்ணமூர்த்தி போராடுகிறார். தற்காலிக வேலை நீக்கம் போதும் தற்காலிக ஊதியம் சரியாக நிர்வாகம் தரவில்லை என்றும் பல நேரங்களில் இதற்கான காசோலையை தாமதமாகவே அனுப்பும் என்று அவர் கூறுகிறார். ஒரு தொழிலாளர் வேலை விட்டு நீக்கினால் குடும்பமே பட்டினியில் கிடக்கும் என்று தொழிற்சங்கத் தலைவர் தோழர் பொன்மொடியின் கூற்று உண்மை என்றும கூறிய தோழர் மகேஷ்வரன் தொழிலாளர்களின் நிலைமை ஒவ்வொருவருக்கும் வேறு வேறு மாதிரியாக உள்ளன என்று குறிப்பிட்டார்.

தொழிலாளர் துறை முன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியுற்றதால் தொழிற்சங்கம் நீதிமன்றத்தை அணுகியது. மூத்த வழக்குறைஞர் என்.ஜி.ஆர் பிரசாத் தொழிலாளர்கள் தரப்பில் வழக்காடினார். ஏற்கனவே மெப்ஸ் வளாகத்திற்குள் போராட்டங்கள் நடத்தக் கூடாது என்ற சிங்கள் பெஞ்ச் நீதிபதி மன்றத் தீர்ப்பிற்கு எதிராக தொழிற்சங்கம் வழக்கு தொடர்ந்தது.
ஜனவரி 12 அன்று தரப்பட்ட தீர்ப்பில் மஸ்டர் ரோலில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை தர வேண்டும் என்றும் 18 நீக்கப்பட்டத் தொழிலாளரகளுக்கு ஒரு வருடம் பிழைப்பாதார ஊதியம் தர வேண்டும் என்றும், பணீ நீக்கம் குறித்து தொழிலாளர் நீதி மன்றத்தில் தீர்க்க வேண்டும் என்றும், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்களின் விசாரரைண 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி ராமமோகன் ராவ் மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளனர். தொழிலாளர் துறை நீதிமன்றத்தில் இப்பிரச்சனை சரியாக கையாளப்படும் என்பதில் தொழிற்சங்கத்திற்கு நம்பிக்கை இல்லை. பல நீதிபதி பணிகள் இன்னும் நிரம்பவில்லை என்றும் அதனால் வழக்கு பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படும் என்பதனால், இது குறித்து மறு பிரசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடரும் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு

தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை அமல்படுத்துவது மற்றும் அனைத்து கோரிக்கைகளுக்காக போராடுவது குறித்து தொழிலாளர்கள் உறுதியாக இருப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் மனித வள மேலாளர் ராஜசேகர் மற்றும் உற்பத்தி மேலாளர் உபேந்திராவிற்கு எதிராக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அவர்கள் கோருகின்றனர்.

முன்னர் தொழிற்சாலையில் ஊதியத் துண்டு கொடுக்கப்பட்டு வந்தது என்றும் தற்போது தொழிற்சாலைக்கு வெளியே உள்ள மணிக்காப்பக அறையில் கொடுக்கப்படுகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். தொழிலாளர்களுக்கு இமெயில் பார்க்கும் வசதி இல்லாததால் இது தொழிலாளர்களை பழி வாங்கும் நடவடிக்கையாக உள்ளது. தொழிலாளர்கள் இப்பிரச்சனைகளை எழுப்ப முயற்சிக்கும் போது மேலும் தொழிலாளர்களை நீக்க நிர்வாகம் முயற்சித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

மறு பரிசீலனை மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதன் மூலமாக கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கணேசன் மற்றும் மகேஷ்வரன் கூறியுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப உறுதியாக உள்ளனர்.

This entry was posted in Factory Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.