மார்ச் 10 அன்று மாருதி தீர்ப்பு – கைதான தொழிலாளர்களோடு நிற்போம்

ஐந்து வருடங்களுக்கு முன்னர் 2012 ஜுலை 18 அன்று, குர்காவ் பகுதியில் உள்ள மாருதி-சுசூகி மாநேசர் தொழிற்சாலையின் 213 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிற்சாலையில் தீப்பிடித்த போது அங்கு இருந்த மனித வள மேலாளர் மூச்சு திணறி இறந்ததிற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். நிர்வாக சூப்பரவைசர் ஒருவர் ஜியாலால் எனும்  தலித் தொழிலாளரை சாதிரீதியாக அவமானப்படுத்தி தாக்கியதை அத்தொழிலாளர் எதிர்த்தபோது அவரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பிண்ணனியில் இச்சம்பவம் நடந்தது. இது நடந்து உடனேயே மாருதி நிர்வாகம் 2300 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது. இவர்களுக்கு தங்கள் தரப்பு நியாயத்தைக் கூறுவதற்கு கூட எந்த வாயப்பும் தரவில்லை. 2300 தொழிலாளர்களில் 546 தொழிலாளர்களே நிரந்தரத் தொழிலாளர்கள் மற்ற அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். மனித வள மேலாளரை கொலை செய்ததாக பழி சுமத்தப்பட்டு 147 தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு இரண்டு வருடங்கள் பின்னரே பிணை கிடைத்தது. இன்னும் 11 தொழிலாளர்கள் சிறையில் வாடுகின்றனர். இதில் ஜியாலால் உட்பட அனைவரும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 147 தொழிலாளர்களுக்கு அப்பால் இன்னும் 66 தொழிலாளர்கள் மேல் மற்ற பிணை எடுக்க முடியாத வழக்குகள் போடப்பட்டுள்ளன.

Workers from Maruti union and other unions in Manesar belt celebrate flag day on March 1st(Source: Facebook)

ஐந்து வருடங்களுக்குப் பின்னர், மாருதி தொழிலாளர்களின் வழக்கு(‘State of Haryana vs Jiyalal & Others’) இறுதி விசாரணைக்குப் பின்னர், தீர்ப்பை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. இவ்வழக்கில் ஆதாரமற்ற பொய்களும், முதலாளி நலன் சார்ந்த தொழிலாளர் விரோதப் போக்குமே தென்படுகின்றன. மார்ச் 10 அன்று குர்காவ் செஷன்ஸ் நீதி மன்றத்தின் விசாரணை மன்றத்தில் தீர்ப்பு கொடுக்கப்படவுள்ளது. அரசின் இயந்திரங்களான காவல், நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவைக்கும் நிறுவனத்திற்கும் உள்ள உறவு இவ்வழக்கில் தெளிவாகத் தெரிகின்றது. பிரிக்கால் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனை போல இங்கும் நூற்றுக்கணக்கானத் தொழிலாளர்களுக்கு நெடிய கால சிறைவாசம் கொடுக்கப்படும் என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

மாருதி சுசூகி தொழிலாளர்களின் விசாரணைகள் 18 பிப்ரவரி அன்று முடிவுற்றுன. தொழிலாளர்கள் தரப்பில் வழக்குறைஞர் விருந்தா க்ரோவர், ரெபக்கா ஜான், மற்றும் சீமா அவர்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொழிலாளர்கள் தரப்பு வாதத்தையும், அரசு தரப்பு வாதங்களை மறுத்தும் வாதாடினர். இறுதி தரப்பு வாதங்களில் இருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திலோ அல்லது அங்கு நடந்த மரணத்திலோ தொழிலாளர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று நிருபணம் ஆகியுள்ளது. தொழிலாளரகள் தொடர்பை எந்த அரசு தரப்பு சாட்சியாலும் நிரூபிக்க முடியவில்லை. சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகவில்லை. மாருதி தொழிலாளர்களுக்கு எதிராக குற்றத்திறாக மனுவை அளித்த பொது மேலாளர் தீபக் ஆனந்த் என்பவரால் எந்த தொழிலாளர்களையும் அடையாளம் காட்ட முடியவில்லை.

மேலாளர் அறையில் சுமார் 400-500 தொழிலாளர்கள் தடி மற்றும் இரும்புக் கம்பிகளை வைத்துக் கொண்டு நுழைந்ததாகவும் நிர்வாக அதிகாரிகளை அவர்கள் தாக்கியதாகவும் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. ஆனால் தொழிலாளர்கள் ஷாக்கர்கள் மற்றும் டோர்பீம்களை கொண்டு வந்ததாகவும் அனைவரும் தங்கள் இடது கைகளால் அவற்றை தடுத்து நிறுத்தியதாகவும் சாட்சிகள் எல்லோரும் ஒரே மாதிரி கூறியுள்ளனர். நிர்வாகத் தரப்பினர்கள் மீது பட்டியலிடப்பட்ட காயங்களில் பல் சிகிச்சைகள் கூட காயங்களாகக் கூறப்பட்டுள்ளன.

நான்கு ஒப்பந்ததாரர்கள் எழுத்து வரிசையாக 89 தொழிலாளர்கள் பெயர்களை கொடுத்திருந்தனர். அவர்கள் யாரையும் ஒப்பந்ததாரர்களால் அடையாளம் காட்ட முடியவில்லை. தொழிலாளர்களின் பட்டியல்கள் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டதே தவிர காவல் துறையின் விசாரணையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜியாலாலை பெயர் சொல்லி அடையாளப்படுத்திய சாட்சி சலீல் விஹாரி என்பவரால் தொழிலாளரை அடையாளம் காண முடியவில்லை. எவ்வாறு தொழிற்சாலையில் தீப்பிடித்தது, அதற்கு காரணம் என்ன என்று யாராலும் கூற முடியவில்லை.

ஆனால் இவை அனைத்தையும் முறையாக பரிசீலனை செய்து நீதித்துறை தீர்ப்பு தருமா என்று தெரியவில்லை. 2013 மே மாதம் தொழிலாளர்களின் பிணையை மறுப்பதற்கு இவ்வாறான தொழிலாளர் போராட்டங்கள் அன்னிய முதலீடை குறைக்கும் என்று உயர் நீதிமன்றம் காரணம் கூறியுள்ளது. தொழிலாளர்களுக்கு எதிராக கோடிக்கணக்கான பொதுப் பணத்தை அரசு செலவளித்துள்ளது. செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடைசியான வாதத்தை முடித்தது அரசு தரப்பு வக்கீல் அல்ல, நிர்வாகத் தரப்பு வக்கீலாகும்.

இப்போது நீதிமன்றம் என்ன தீரப்பு கொடுத்தாலும், செய்யாத குற்றத்திற்காக நான்கு வருடங்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து சிறையில் வாடும் தொழிலாளர்களுகான நீதி எங்கே? அவர்கள் தங்கள் குழந்தைகள் வளர்வதைக் காண முடியவில்லை. தங்கள் குடும்பத்தாருடன் சுக துக்க நிகழ்வுகளில் பங்கு கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு என்ன நீதி?

ஜுலை 18 2012 நிகழ்வு குறித்து அப்போதைய தலைவர் ஆர்.சி.பார்கவா இது ஒரு வர்க்கப் போராட்டம் என்று குறிப்பிட்டார். அப்படி என்றால் கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டத்தின் அரசியல் கைதிகள் ஆவர். நாட்டின் பல் வேறு மூலைகளில் நடக்கும் தொழிலாளர் போராட்டங்களின் சின்னமாகும். தீவிர ஒடுக்குமுறையை எதிர் கொண்டும் பல்வேறு நிலைகளில் இருந்த தொழிலாளர்களை ஒருங்கிணைந்து தொழிற்சங்கத்தை வெற்றிகரமாக உருவாக்கிய போராட்டமாகும் இது. இதனால் தொழிலாளர்களை சிறையில் அடைப்பது தொழிலாளர்களுக்கு பாடம் புகட்டும் செயலாக நாடு தோறும் நிர்வாகங்கள் கருதுகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒன்று சேரக் கூடாது என்பதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர். மாருதி தொழிலாளர்களுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிலாளர்களும் இருப்பது அவசியமாகும். இந்த தீர்ப்பு அனைத்து தொழிலாளர்களுக்கும் சென்றடையும் என்பதை அரசுக்கு உணர்த்துவோம்.

மாருதி தொழிலாளர்களின் போராட்டம் குறித்த கட்டுரைகள்:

மாருதி மானேசர் தொழிற்சாலையில் நடந்த கலவரம் குறித்து உழைக்கும் மக்களின் கருத்துகள்

தொழிற்சாலைகளின் வன்முறை

தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களும், மாருதி மாநேசரும்

மாருதி மாநேசர் தொழிலாளர்கள் மோதல்களின் வரலாறு

 

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, Featured, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.