“நீதி”க்காக காத்திருக்கும் மானேசர் தொழிலாளர்கள்…

This is a translation of G.Sampath’s article, Four years gone, Manesar violence accused await ‘justice’. Translation by S.Sampath

நான்கு வருடங்கள் கடந்து விட்டது. மானேசர் வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் “நீதி”க்காக காத்திருக்கின்றனர்

Source: The Hindu

(ஜூலை 18, 2012ல் மாருதி சுசுகி மானேசர் தொழிற்சாலையில் பெரிய அளவிலான வன்முறை நடைபெற்ற போது ஒரு அலுவலர் கொல்லப்பட்டார், பலர் காயமுற்றனர் (கோப்பு படம்)

தொழிலாளர்கள் இன்று விடுப்பிற்கு சம்பளம் பெறுவதும், ஒரு வாரத்தில் 6 நாட்கள் பணிபுரிந்தால் ஒரு நாள் ஊதியத்துடன் ஓய்வு என்பதற்கும் தொழிற்சங்க இயக்கங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆணோ, பெண்ணோ ஒரு தொழிலாளி மருத்துவ விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படாமலிருப்பதற்கு உலகம் முழுவதும் தொழிற்சங்க தலைவர்கள் சிறை சென்றிருக்கிறார்கள், காவல்துறை வன்முறை தாக்குதல்களை சந்தித்தித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

மாருதி தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் சந்தீப் தில்லான், சுரேஷ் குமார், பவான் தாஹியா, மற்றும் தன்ராஜ் பாம்பி ஆகியோர் இத்தகைய போராட்டங்களால் சிறை நாட்கள் மற்றும் காவல்துறை தாக்குதல்களை சந்தித்துள்ளனர்.

திரு.தில்லான் (குற்றவாளி எண் 102), திரு தாஹியா (கு.எண்.105), திரு குமார் (கு.எண்.113) மற்றும் திரு பாம்பி (கு.எண்.115) ஆகிய நால்வரும் 18 ஜூலை 2012 அன்று மாருதி சுசுகியின் மானேசர் தொழிற்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அதன் மனித வள மேம்பாட்டு அதிகாரி திரு அவனிஷ் குமார் தேவ் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 148 பேர்களில் நால்வர் ஆவார்.

தண்டிக்கப்பட்டது”

சொல்லப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டபோது தொழிற்சங்க உறுப்பினர்கள் என்பதுடன் ஆகஸ்ட் 2012 லிருந்து 13 செப் 2016 வைர ஹரியானா மாநிலம் போண்சி சிறையில் இருந்தவர்களாவார்கள். ஒரு அரசியல்வாதியோ, நடிகரோ சிறை வாயிலை மிதிக்காமலேயே பிணை விடுவிப்பு பெற்று விட முடிகிறது. ஆனால் இந்த நால்வருக்கும் நான்கு ஆண்டுகளாக பிணையில் வெளியில் செல்வது மறுக்கப்பட்டு வந்துள்ளது என்கிறார் முன்னாள் மாருதி தொழிலாளியும், இந்த நால்வரின் சட்டப் போராட்டத்திற்கு உதவி வருபவருமான திரு ராம்நிவாஸ்.

அவர்களின் கைதிற்கான பின்னணி குறித்து கேட்ட போது, அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்தார்கள் என்பது தவிர வேறென்ன என எதிர்கேள்வி எழுப்புகிறார் திரு தில்லான்.

மற்றவர்களும் இதே காரணத்திற்காகத்தான் கைது செய்யப்பட்டதாக எண்ணுகின்றனர். இவர்கள் நால்வரும் காவல்துறையினரிடம் சரணடைய வேண்டும் அல்லது குடும்பத்தினர் அனைவரும் சிறைக்கு செல்ல நேரிடும் என மிரட்டப்பட்டதோடு, காவலில் இருந்த போது கடுமையான சித்திரவதை தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

மேலாளருக்கு மரியாதை

நடைபெற்ற ஜூலை 18, 2012 ந் தேதிய வன்முறை சம்பவங்கள் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் ஈடுபாடாக இருப்பதை குலைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் என்றே அவர்கள் நம்புகின்றனர். இறந்த திரு அவானிஷை யாா் கொன்றார்கள் என்பது தமக்கு தெரியாது என்கின்றனர். இறந்து போன மேலாளர் திரு அவானிஷ்உடனான அவர்கள் உறவுமுறை பற்றி கேட்டபோது திரு பாம்பி கூறுகையில் எனக்கும் அவருக்கும் பிரச்சனை ஏதுமில்லை, மாறாக அவர்மீது மரியாதை வைத்திருந்தேன் என்கிறார்.

இன்னமும் அவர் அனுப்பிய குறுஞ்செய்தி தனது கைபேசியில் உள்ளதாக தெரிவிக்கிறார் திரு குமார்.

எல்லோரையும் விட அவரிடம் நான் நன்கு பழகி வந்ததோடு, எங்களுக்கிடையில் மிகவும் நெருக்கம் இருந்தது என்கிறார் திரு தாஹியா. மேலதிகமாக திரு தில்லான் தெரிவிக்கையில் அவர் நல்ல மனிதாபிமானமுள்ளவர், நாங்கள் சங்கமாக ஏன் அணிதிரள்கிறோம் என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார் என்கிறார்.

மாருதி சுசுகி மானேசர் தொழிற்சாலை தளத்தில் 2011 வரை எந்த தொழிற்சங்கமும் இல்லை. மூன்று பெரிய வேலை நிறுத்தங்கள், சட்ட ரீதியான போராட்டங்கள் மற்றும் நிர்வாகத்திற்கும் தொழிலாளர் தரப்பினருக்குமான பேச்சு வார்த்தைகள் இழுத்தடிக்கப்பட்டதன் விளைவாக மார்ச் 2012ல் மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் தோன்றியுள்ளது.

திரு தில்லான் (29) அதன் தலைமை நிர்வாகி, திரு தாஹியா (31) செயலாளர், திரு குமார் (32) பொருளாளர், மற்றும் திரு பாம்பி (31) செயற்குழு உறுப்பினர் என புதிதாக துவக்கப்பட்ட சங்கத்தில் தீவிரமாக இருந்துள்ளனர். தொழிற்சங்க தலைவர் திரு ராம்மேஹர், பொதுச் செயலாளர் திரு சர்வஜித்சிங் மற்றும் துணைத் தலைவர் திரு சோஹன் குமார் உள்ளிட்ட 8 செயற்குழு உறுப்பினர்கள், சங்கம் கட்டமைக்கும் போது முதன்மையாக செயல்பட்டவர்கள் இன்னும் சிறையில்தான் உள்ளனர்.

நால்வரின் விடுவிப்பு என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் தொழிற்சங்க உறுப்பினர்களில் தற்போதுதான் முதன்முதலாக பிணையில் விடுவிப்பு என்பது நடந்துள்ளது.

அவர்களின் எதிர்கால திட்டம் என்ன என்று கேட்ட போது, மற்றவர்களின் வழக்குகளும் தீர்வாவதைப் பொறுத்துத்தான் தங்களின் நிலை அமையும் என்பதால் இன்னும் எதைப்பற்றியும் எண்ணவில்லை என்றனர். குர்கான் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளின் இறுதி விசாரணை வர இருப்பதால் நவம்பருக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அந்த நான்கு தொழிற்சங்க உறுப்பினர்களும் தாங்கள் பணியாற்றிய காலத்தை எண்ணிப் பார்க்கின்றனர். மிகக் குறைவான ஊதியத்தில் வேலை பழகுனர், தொடர்ந்து ஒப்பந்த பணி, அதனை தொடர்ந்து மிக நீண்ட காலத்திற்கு பயிற்சியாளர்கள் என ஏறக்குறைய நிரந்தரப் படுத்துவதற்கு முன்பாக 5 ஆண்டுகள் குறைவான ஊதியத்தில் பாதுகாப்பற்ற பணி. ஜூலை 2012 நிகழ்வில் மாருதி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவரின் நிலையும் இதேபோல்தான் உள்ளது.

ஒரு அரசியல்வாதியோ, நடிகரோ சிறை வாயிலை மிதிக்காமலேயே பிணை விடுவிப்பு பெற்று விட முடிகிறது. ஆனால் இந்த நால்வருக்கும் நான்கு ஆண்டுகளாக பிணையில் வெளியில் செல்வது மறுக்கப்பட்டு வந்துள்ளது”

நன்றி தி இந்து (ஆங்கிலம்) மற்றும் திரு ஜி.சம்பத்

மொழியாக்கம் எஸ்.சம்பத், மதுரை

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, Workers Struggles, தமிழ் and tagged , . Bookmark the permalink.