13 மாருதி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை – அனைத்து மாருதி தொழிற்சாலைகளிலும் ஒரு மணி நேர tools down போராட்டம்

18 மார்ச் மாலையில் குர்காவ் செஷன்ஸ் நீதிமன்றம் 31 தொழிலாளர்களுக்கு தண்டனை வழங்கியது. கொலை வழக்கு சாத்தப்பட்டுள்ள 13 மாருதி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 12 தொழிற்சங்க பிரதிநிதிகளும், தலித் தொழிலாளர் ஜியாலாலும் அடங்குவர். 4 தொழிலாளர்களுக்கு 5 வருட சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே அவர்கள் நான்கு வருடங்கள் சிறையில் இருந்தனர். மற்ற 14 தொழிலாளர்களுக்கு 3 வருட சிறை தண்டனையும் ரூ2500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. பிணையில் இருந்த இந்த 14 தொழிலாளர்கள் மார்ச் 10 அன்று மீண்டும் கைது செய்யபட்டனர். அவர்கள் 18 மார்ச் அன்று விடுவிக்கப்படுவார்கள்.

Tool down strike at Maruti Suzuki 18th MArch

Idle Machines at Maruti Suzuki

 

 

 

 

 

 

 

மார்ச் 17 அன்று தண்டனை குறித்து நடந்த விவாதத்தில் அரசு தரப்பு வக்கீல் 13 தொழிலாளர்களுக்கு மரண தண்டனை கோரினார் என்பது குறிப்படத்தக்கது. அதை குறைத்து நீதிமன்றம் இத்தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கினாலும் எந்த ஆதாரமும் இல்லாமல் கொடிய தீர்ப்பை அளித்துள்ளது சட்டம் என்பது அதிகார வர்க்கத்தின் கையில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசும் இந்த பகுதியில் செக்ஷன் 144(5 பேருக்கு மேல் எங்கும் கூட்டம் போடக் கூடாது) அறிவித்தது. இப்பகுதி முழுவதும் காவல்துறை அதிக அளவில் இருந்தனர்.

தொழிலாளர் வர்க்கம் இதை பார்த்து அமைதியாக இருக்கவில்லை. தீர்ப்பு வழங்கிய உடனேயே தன்னிச்சையாக எழுந்த வர்க்க ஆதரவாக, மாருதி சுசூகியின் அனைத்து ஆறு தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்கள் 1 மணி நேரத்திற்கு முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த ஒரு மணி நேர ‘டூல்ஸ் டவுன்(tools down) ‘ போராட்டத்தினால் உடனடியாக மாருதி நிர்வாகம் தொழிலாளர்களின் 8 நாள் ஊதியத்தை குறைப்பதாக கூறியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் வளர்ந்து வரும் ஒப்பந்தமுறையிலும், இயந்திரமயத்திலும் ஒரு மணி நேர டூல்ஸ் டவுன் போராட்டம் கூட நிர்வாகத்தை மிரட்டுகிறது. மாருதி தொழிற்சாலைகளில் போராட்ட எழுச்சிக்கு இது வித்திட்டுள்ளது. தீர்ப்பிற்கு அடுத்து நடத்தப்பட்ட தொழிற்சாலை சங்கங்களின் கூட்டத்தில் பகத் சிங் மற்றும் சக தோழர்கள் தூக்கிலடப்பட்ட நாளான மார்ச் 23 அன்று மாநேசர் தொழிற் பகுதியில் தொழிலாளர்கள் மாபெரும் அளவில் கூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Hyundai workerson linch boycott

தமிழ்நாட்டில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக 18 மார்ச் அன்று ஹுண்டாய் தொழிலாளர்கள் உணவு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். 23 மார்ச் அன்று ஸ்ரீபெரும்புதூரில் போராட்டம் நடத்த ஏஐசிசிடியு அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க போராடியதற்காக கிடைத்த தீர்ப்பு எனக் கூறியுள்ள புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ‘வடக்கே குர்கான் எழுப்பும் போர்க்குரலை தெற்கே இந்தியாவின் டெட்ராய்ட் என்று கார்ப்பரேட் உலகம் கொண்டாடும் தமிழகம் எதிரொலிக்க வேண்டும். மெரினா போராட்டத்தின் வாயிலாக பாரதிய ஜனதா அரசை நடுங்கச் செய்த தமிழகம் இன்னொரு முறை தனது போர்க்குணத்தை காட்ட வேண்டும்.’ எனக் கோரியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து என்டியுஐ தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மாருதி தொழிலாளர்கள் ‘தொழிலாளர் வர்க்க போராட்டத்iதின் கைதிகள்’ எனவும் அவரகளுக்கு ஆதரவாக மார்ச் 21 அன்று போராட்டம் நடத்தவும், சர்வதேச தொழிலாளர்கள் கூட்டமைப்பு(IWC) அழைப்பு விடுத்துள்ளது.

மாருதி நிகழ்வுகள் குறித்து உண்மை அறியும் குழு விசாரணை நடத்திய பியுடிஆர் (Peoples Union for Democratic Rights) சரியான விசாரணை நடத்தப்படாமல் தரப்பட்ட தீர்ப்பு என்று கண்டித்துள்ளது. எந்த குற்றமும் நிருபணம் செய்யமால் விடுவிக்கப்பட்ட 117 தொழிலாளர்களுக்கு 3 வருட சிறையில் அடைத்தற்காக பல்வேறு அமைப்புகள் நிவாரணம் கோரியுள்ளனர்.

This entry was posted in Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.