2017 தொழிலாளர் தினம் – மும்பய் மற்றும் குர்காவ் பகுதிகளில் தொழிலாளர் தின நிகழ்வுகள்

மும்பய் துப்புரவு தொழிலாளர்களின் வெற்றி

மும்பய் மாநகராட்சியின் 2700 ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2007ல் இருந்து நிரந்தர வேலை கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏப்ரல் 7 அன்று உச்ச நீதி மன்றம் அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய போரி உத்தரவிட்டது. தொழிலாளர் தினமான மே 1 அன்று கச்சரா வாஹ்துக் ஷ்ரமிக் சங்கம் (Kachra Vahduk Shramik Sangh – KVSS) ஒருங்கிணைத்த பேரணியில் சுமார் 7000 தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் வெற்றியை கொண்டாடினர். பேரணியைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் ஆசாத் மைதானத்தில் நடைபெற்றது.

BMC Workers celebrate May Day

மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்ய கோரி குர்காவ்-தாருஹேரா-பாவல்-நீம்ரானா தொழிலாளர்கள் பேரணி

தொழிலாளர் தினமான மே 1 அன்று குர்காவ் பகுதியில் கூடிய தொழிலாளர்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 13 மாருதி தொழிலாளர்களை நினைவு கோரி அவர்களின் விடுதலைக்கு குரல் கொடுத்தனர்.

ராஜஸ்தானின் நீம்ரானா பகுதியில், மஸ்தூர் சங்கர்ஷ் சமிதி(தொழிலாளர் போராட்ட இயக்கம்) பல்வேறு தொழிற்சாலைகளின் தொழிலாளர்களை ஓன்று திரட்டி 5 கிமீ பேரணியை நடத்தியது. இப்பகுதிவாரியான அமைப்பின் பேரணியில் கலந்து கொண்டத் தொழிலாளர்கள் தொழிலாளர்களின் ஒடுக்குமுறை கூடாரமான ஜப்பானிய மண்டலம் வழியாக நடந்தனர். அம்பேத்கர் பூங்காவில் முடிவுற்ற பேரணியை தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். டாய்கின், ஹோண்டா, மாருதி, டயோட்டா, ருச்சி பியர் போன்ற தொழிற்சாலைகளில் இருந்து தொழிலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்கவும், சம வேலைக்கு சம ஊதியத்தை உறுதி செய்யவும் தொழிற்சங்க யுக்திகள் குறித்து தொழிலாளர்கள் கலந்துரையாடினர். தொழற்சங்கங்களும் தொழிற்சங்கத்தில் இணையும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுவதை எதிர்க்கும் யுக்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

தொழிலாளர் தினத்திற்கு முதல் நாள் ஏப்ரல் 30 அன்று நீம்ரானா சந்தையில் மக்களுக்கு ஜுஸ் வழங்கினர். ‘போல்-கோல்’ (ரகசியங்களை அம்பலப்படுத்து) எனும் தொழிலாளர்களின் கலைக் குழு தொழிலாளர் தினத்தை குறித்து விளக்கும் ‘சுல்தான்’ எனும் நாடகத்தை நடத்தினர். மே 1 அன்று குர்காவ் பகுதியில் கார்மென்ட் தொழிலாளர்கள் மத்தியிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டது.

மேலும் இப்பகுதிகளில் உள்ள அனைத்து மாருதி மற்றும் ஹோண்டா தொழிற்சாலைகளின் முன் வாயிற் கூட்டங்கள் நடைபெற்றன.

மே 4 அன்று தொழிலாளர் பொதுக் கூட்டம்

மே 4 அன்று தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையிலும், மார்க்ஸ் பிறந்த தினத்தை அனுசரித்தும் தொழிலாளர் ஆதரவு மையம் (Workers Solidarity Center) கூட்டம் ஒன்றை குர்காவ் பகுதியில் நடத்தியது. இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மற்றும் இயக்கப் பிரதிநிதிகள் தொழிலாளர்கள் இயக்கங்களின் இன்றைய பிரச்சனைகள் குறித்து உரையாடினர்.

தொழிலாளர்கள் இயக்கங்களை முடக்கும் அரசு மற்றும் காவல்துறை நடைவடிக்கைகள், முதலாளிகளின் ஒடுக்குமுறைகள் குறித்தும் இதை முறியடிக்கும் யுக்திகள் குறித்து விவாதம் நடத்தப்பட்டன.

அதிகரிக்கும் ஒப்பந்த தொழிலாளர் முறை மற்றும் நிச்சயமற்ற வேலை முறைகள் – பயிற்சியாளர், அப்பிரன்டைசஸ், அவுட்சோர்ஸ் ஆகிய தொழிலாளர் பிரச்சனைகளை எதிர்கொள்வது. தொழிற்சாலைகளில் அனைத்து தொழிலாளர்களையும் ஒருங்கிணைப்பது ஆகியவை ஆலோசிக்கப்பட்டன.

பகுதிவாரியான தொழிலாளர் ஒற்றுமைக்கான நடவடிக்கைகள், சவால்கள் ஆலோசிக்கப்பட்டன.

சமூக, அரசியல் மாற்றத்திற்கான தொழிலாளர் வர்க்க ஒருங்கிணைப்பு, மார்க்சிய போராட்ட வரலாறு குறித்து பேசப்பட்டது.

மாருதி தற்காலிக பணிக்குழுவின் தோழர் ராம்நிவாஸ், ஹோண்டா தாபுகாராவின் ராஜ்பால், தொழிலாளர் ஆதரவு இயக்கத்pன் அமித், டாய்கின் தொழிலாளர் அனில் ரானா, ஹோண்டா தொழிற்சங்கப் பொது செயலாளர் சுரிந்தர் மற்றும் பெல்சோனிகா தொழிற்சங்கத்தின் அஜித், மாருதி மநேசர் தொழிற்சங்கத் தலைவர் அஜ்மீர், ஹீரோ மோட்டோ கார்ப் தொழிற்சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் பீம்ராவ், ரிக்கோ தொழிற்சங்கத்தின் த்யாகி, மாருதி பவர் ட்ரெயின் தொழிற்சங்கத்தின் புத்திபிரகாஷ், ஆஹ்ரெஸ்டி தொழிற்சங்கத்தின் சஞ்சீவ் ஆகியோர் கூட்டத்தில் உரையாடினர். பேக்டரி ஆவணப்படத்தின் ஒரு பகுதியும் மற்ற தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்த ஆவணப்படமும் திரையிடப்பட்டன. தோழர்கள் ஜித்தேந்தர் மற்றும் சோம்நாத் ஆகியோர் எழுச்சிமிகு பாடல்களை பாடினர்.

This entry was posted in Factory Workers, News, Working Class Vision, தமிழ் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.