தொழிலாளர் துறையை முற்றுகை – 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள் கைது

மே 31 அன்று இளம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையத்தை முற்றுகையிட முயன்ற புரட்சிகர இளைஞர் இயக்கம் மற்றும் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சார்ந்த 100 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்:

  • சுரண்டலை அதிகரிக்கும் பயிற்சியாளர் முறையையும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையையும் ஒழிக்க வேண்டும்.
  • தொழிற்சாலையில் நிலையற்ற பணிகளின் எண்ணிக்கையை வரையறுக்கும் நிலையாணை திருத்தச் சட்டத்திற்கு ஏற்ப விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
  • கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கும் சடடத்தை இயற்றவேண்டும்.
  • அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத ஊதியமாக ரூ20000 உறுதி செய்ய வேண்டும்.
  • பன்னாட்டு நிறுவனங்களும் தேசிய நிறுவனங்களுக்கும் தரப்படும் வரி மற்றும் இதர சலுகைகள் குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே மார்ச் 23 அன்று இயக்கப் பிரதிநிதிகள் தொழிலாளர் துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படாததால் இயக்கங்கள் முற்றுகைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காலை 9 மணியளவில் டிஎம்எஸ் வளாகத்தில் கூடியிருந்தனர். 10மணியளவில் வளாகத்திற்குள் நுழைய முயன்ற மக்களை காவல்துறை தடுக்க ஆரம்பித்தனர். உள்ளே செல்ல முயற்சித்த மக்களின் அடையாள அட்டைகள் சோதிக்கப்பட்டன. இயக்கங்களின் பிரதிநிகளுடன் ஏசியன் பெயின்ட்ஸ், சான்மீனா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவின் தொழிலாளர்களும் சாலையில் சேர ஆரம்பித்தனர்.

போராட்டத் தோழர்கள் டிஎம்எஸ் வளாகத்திற்குள் நுழைய விடுமாறு காவல்துறையை கேட்ட போது காலல்துறை அடக்குமுறையை ஏவினர். அவர்களை தோழர்களை தடுப்பிற்கு அப்பால் வன்முறையாக தள்ளினர். இளம் வழக்கறிஞர் மாணவரும் புரட்சிகர இளைஞர் குழு உறுப்பினரும் ஆன தோழர் சீதாவை காவல்துறை பலவந்தமாக தூக்கி வேனில் அடைத்தனர்.

கூட்டத்தில் பேசிய தோழர் பாரதி தொழிலாளர் துறை முதலாளிகளுக்கான துறையாக மாறக் கூடாது என வலியுறுத்தினார். மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்க்காத மாநில அரசின் கொள்கைப்பாட்டை அவர் கடுமையாக சாடினார்.

This slideshow requires JavaScript.

தொழிலாளர் துறை வளாகத்தில் தொழிலாளர்களையே அனுமதிக்காத அரசு எந்த சட்;டத்தின் கீழி இவ்வாறு செய்வதாக ஏஐசிசிடியுவின் மாநிலத் தலைவர் தோழர் ஏஎஸ் குமார் சாடினார். ‘நாம் ஜனநாயகமற்ற அடக்குமுறை அரசின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது சாட்சி’ என அவர் குறிப்பிட்டார். அரசும் காவல்துறையும் அரசியல் சாசனத்தை ஏளனம் செய்வதாக தோழர் குமார் குறிப்பிட்டார். ‘பொதுமக்களும் தொழிலாளர்களும் கொடுக்கும் ஊதியத்தில் வேலை செய்யும் காவல்துறையினர் எவ்வாறு பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிராக வேலை செய்யலாம்?’ என அவர் காவல்துறைளினரை சாடினார்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் அமைச்சரை சந்தித்த 5 இயக்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளையும் சம வேலைக்கு சம ஊதியம் குறித்த உச்ச நீதி மன்ற ஆணை மற்றும் மஹாராஷ்ட்ரா மாதிரி நிலையாணை ஆகிய மற்ற ஆவணங்களையும் அமைச்சரிடம் சமர்ப்பித்தனர். இக்கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக அமைச்சர் கூறியுள்ளதாக புரட்சிகர இளைஞர் இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தனவேல் கூறினார். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஏஐசிசிடியு தொழிற்சங்கத்துடன் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

This entry was posted in Apprentice, Contract Workers, Factory Workers, Labour Laws, labour reforms, News, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.