கும்மிடிப்பூண்டி க்ரீவ்ஸ் காட்டன் தொழிலாளர்கள் வாழ்நிலை குறித்து ராணிப்பேட்டை தொழிற்சாலையில் வாயில் கூட்டம்

23 ஜுன் அன்று ராணிப்பேட்டை; க்ரீவ்ஸ் காட்டன் தொழிற்சாலையின் முன்னர் ஒரு வாயில் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் 45 கும்மிடிப்பூண்டி க்ரீவ்ஸ் காட்டன் தொழிலாளரகளும் அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையை நிர்வாகம் மூடியதனால் தங்களுடைய வாழ்வாதாரமும் வாழ்நிலையைப் பற்றியும் கும்டிடிப்பூண்டித் தொழிற்சங்கத்தின் தலைவர் தோழர் ஆறுமுகச் செல்வம் உரையாற்றினார். தொழிலாளர்களை சுரண்டி தங்கள் லாபத்தை அதிகரிக்கும் நிறுவனத்திற்கு எதிரே இரு தொழிற்சாலைத் தொழிலாளர்களும் ஒண்றிணைய அவர் கோரினார். ஆர்எஸ்எஸ்சுடன் இணைந்துள்ள பிஎம்எஸ்சின் தொழி;ற்சங்கமான க்ரீவ்ஸ் மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கணேசன் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார். 2016ல் இருந்து இவர் ராணிப்பேட்டைத் தொழி;ற்சாலையில் இருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர்களின் கூற்றுப்படி கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை மூடப்பட்ட போது ராணிப்பேட்டையில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வேலை பளு அதிகரிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்ததால் கணேசன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தொழிலாளர்கள் கூறுகின்றனர். ராணிப்பேட்டையில் உள்ள நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ராணிப்பேட்டை க்ரீவ்ஸ் தொழிற்சங்கம் கும்மிடிப்பூண்டித் தொழிலாளர்களுடைய பிரச்சனையில் ஆதரவு தர மறுத்துவிட்டது. ஆனாலும் ராணிப்பேட்டை தொழிலாளர்கள் சிலர் கும்மிடிப்பூண்டித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுடன் சிறிது நேரம் உரையாடினர். 45 நிமிடங்களுக்கு நடைபெற்ற இக்கூட்டம் அமைதியாக நடைபெற்றது. முன்னதாக இக்கூட்டத்தினால் வன்முறை நிகழ வாய்ப்புள்ளதாக குற்றம் சாட்டி கூட்டத்திற்கு அனுமதி மறுக்கக் கோரி க்ரீவ்ஸ் காட்டன் நிர்வாகம் காவல்துறையிடம் முறையிட்டனர்.

Arumugaselvam addressing workers at the Gate Meeting

இதற்கு முன்னர் ஜுன் 12 அன்று 15 கும்மிடிப்பூண்டித் தொழிலாளர்கள் ராணிப்பேட்டை தொழிற்சாலை முன்னர் தங்களுக்காக ஆதரவு கோரி துண்டுப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அப்போது பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் கணேசன் அவர்களை சந்தித்து ஆதரவு தந்து, இக்கூட்டத்தையும் ஒருங்கிணைத்துள்ளார். ராணிப்பேட்டை க்ரீவ்ஸ் தொழிற்சங்கம் ஊதிய பேச்சுவார்த்தை குறித்து எந்த விவரங்களையும் வெளியிடவில்லை என அவர் குற்றம் சாட்டினார். இச்சங்கத்தில் தொழிலாளர்கள் பெருவாரியாக உள்ளனர் மேலும் நிர்வாகம் தொழிற்சங்கத்தை அங்கீகரித்துள்ளது. கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையை மூடி ராணிப்பேட்டை தொழிலாளர்களின் வேலை பளுவை நிர்வாகம் அதிகரிதுள்ளதாகவும் அவர் கூறினார். சக தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுக்காத ராணிப்பேட்டை க்ரீவ்ஸ் தொழிற்சங்கத்தை அவர் சாடினார்.

ஆறுமுகச் செல்வம் கும்மிடிப்பூண்டித் தொழிற்சாலையில் தொழிற்சங்க நிலைமை குறித்து விவரித்தார். நிர்வாகம் தங்களுடைய பிரச்சனைகளை தீர்க்கும் என 2005ல் இருந்து 2013 வரை 8 வருடங்களுக்கு கும்மிடிப்பூண்டித் தொழிலாளர்கள் நம்பினர். தங்களுடைய கோரிக்கைகளை நிர்வாகம் புறக்கணித்ததை தாங்கமலேயே தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்தனர். ‘நாங்கள் ராணிப்பேட்டை தொழிற்சாலைக்கு ஈடாக ஊதியம் கேட்டதாக நிர்வாகம் பொய் பரப்புரை செய்து வருகின்றது. எங்களுடைய தொழிலாளர்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள அனுபவம் குறித்து நாங்கள் நன்றாக அறிவோம். நாங்கள் கேட்டதெல்லாம் எங்களுடைய உற்பத்தி திறனுக்கேற்ற முறையான ஊதியம். 2005-6ல் 45000 யூனிட்டுகளில் இருந்து 2008ல் நாங்கள் 1.5 லட்ச யூனிட்கள் தயாரித்து வந்தோம். 2008ல் இருந்து நிர்வாகம் எங்களுக்கு மூலப் பொருட்களை குறைத்து ராணிப்பேட்டை தொழிற்சாலைக்கு உற்பத்தியை மாற்ற ஆரம்பித்தனர். எங்களை பிளவுபடுத்த நிர்வாகம் இதைச் செய்தனர். இம்மாதிரியான நடவடிக்கைகளை ராணிப்பேட்டை தொழிற்சாலை எதிர்க்க வேண்டும்’ என ஆறுமுகச் செல்வன் கூறினார்.

Leaflets being distributed to Ranipet Workers

இரு ஷிப்டுகளுக்கு இடையே கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதால், தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய தொழிலாளர்களும், அடுத்த ஷிப்டிற்கு சென்ற தொழிலாளர்களும் கூட்டத்தை கவனித்தனர். அவர்களிடம் துண்டு பிரச்சாரங்களும் விநியோகிக்கப்பட்டன. தொழிலாளர்களிடையே பேச்சு தொடர்பை குறைப்பதற்கு நிர்வாகம் போக்குவரத்து வாகனங்களை வாயி;ல் அருகே நிறுத்தினர். ஆனாலும் சிலத் தொழிலாளர்கள் கும்மிடிப்பூண்டித் தொழிலாளர்களுடன் பேசி அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.ஆனால் கணேசன் குறித்து அவரகள் குற்றம் சாட்டினர். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை அவர் தேவையின்றி காலம் தாழ்த்தியதாக தொழிலாளர்கள் கூறினர். ஆனால் தற்போதைய தொழிற்சங்கம் ஆதரவு தெரிவிக்காத நிலையில் தொழிலாளர்களும் ஆதரவு கொடுப்பதற்கு முன்வரவில்லை. தொழிற்சங்கத் தலைமையின் குறுகிய மனப்பான்மையில் தொழிலாளர்களின் ஒற்றுமை அடிபட்டுக் கொண்டுள்ளது.

 

வாயிற் கூட்டம் குறித்து காவல்துறைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் முன்னரே அறிவித்து இருந்தனர். ஆனால் தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்தி சொத்து சேதம் விளைவிக்கக்கூடும் என நிர்வாகம் கூட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்க நிர்ப்பந்தம் செய்ததாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்கள் எந்த வித இடையூறும் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்த பின்னரே காவல்துறை வாயிற் கூட்டம் நடத்த அனுமதி அளித்தது. ராணிப்பேட்டைத் தொழிலாளர்களுக்கு தங்கள் பிரச்சனையை விளக்கி அவர்கள் ஆதரவு கோரவே கூட்டம் நடத்தப்பட்டதால், தொழி;ற்சாலைக்கு எந்த இடையூறும் விளைவிக்காத வண்ணம் கூட்டம் நடத்தப்பட்டது. தங்களுடைய கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்கும் வரை போராட்டத்தை தொடர கும்மிடிப்பூண்டி தொழிலாளர்கள் உறுதியுடன் உள்ளனர்.

 

This entry was posted in Factory Workers, Lock out/Closure, News, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.