18 ஆண்டுகள் முடிந்தும் நீளும் சோகம்: நீதிக்காகக் காத்திருக்கும் Florin D மற்றும் UNISco தொழிலாளர்கள்

13 அக்டோபர் 2017

அது ஒரு மழைநாள். நூற்றுக் கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து ஆம்பூர்வாணியம்பாடியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 100 பேர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேலும் தாமதம் செய்யாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரினார்கள். 18 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லீம் பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் 360 பேர் அவர்கள் பார்த்து வந்த வேலையிலிருந்து விரட்டப்பட்டனர். அவர்களில் பலருக்கு, வீட்டு வேலைக்கு அடுத்துத் தெரிந்திருந்த ஒரே வேலை அதுதான்.

பல நீதிமன்றங்கள், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் வரை அவர்களின் வழக்கை விசாரித்திருக்கின்றன. அவர்கள் வேலை செய்த கம்பெனி நிர்வாக சட்டத்தை மீறியிருக்கிறது என்று அந்த நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன. தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருக்கின்றன. இருந்தபோதும், அவர்கள் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். வேலையை இழந்து 18 ஆண்டுகள் ஆன நிலையில், இனியும் தாமதம் இன்றி தங்களுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள்.

(வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர் போராட்டத்தில் பேசுகிறார்)

அந்தத் தொழிலாளர்கள் 2 தனியார் ஷூ தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்கள். புளூரின்ட் பிரைவேட் லிமிடெட் (FlorinD Shoes Pvt Ltd), யுனைடட் இந்தியா ஷூ கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் (யுனிஸ்கோ) (United India Shoes Corporation Pvt Ltd -UNISCo)என்பது அந்த நிறுவனங்களின் பெயர். அந்த இரண்டு நிறுவனங்களும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களுக்குச் சொந்தமானவை. அவற்றை அவர்களே நிர்வகித்தும் வந்தார்கள்.

அந்த இரண்டு நிறுவனங்களிலும் மொத்தமாக 3500 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். 1998ல் ஏறக்குறைய 1500 தொழிலாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு 3000 முதல் 6000 வரை மாதச் சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது. தொழிலாளர்களில் பலர் தங்களின் இளம் வயதில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். 15 முதல் 20 ஆண்டுகள் வரை கம்பெனியில் உழைத்திருக்கிறார்கள்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு அ. வெங்கடேசன் என்பவரின் தலைமையில் இயங்கிய தோல் தோல் பொருள் ஜனநாயக தொழிலாளர் சங்கத்தில் (Leather and Leather Goods Democratic Labour Union-LLGDLU) இணைந்திருக்கின்றனர். கூடுதல் கூலியும் நல்ல பணி நிலைமைகளும் வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை.

இருந்தாலும், தங்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான உறவு நல்ல முறையில் இருந்ததாகவும், குடும்ப உறவு போல் இருந்ததாகவும் தொழிலாளர்கள் சொல்கிறார்கள். “வேலை தரும்போது, உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை வைத்துக் காப்பாற்றுவேன் என்று முதலாளிகள் சொன்னார்கள். ஆனால், ஒரே நிமிஷத்தில் எங்களை ‘வேலையை விட்டுப் போ‘ என்று விரட்டிவிட்டார்கள்“ என்று 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சொன்னார்.

தொழிலாளர்களில் ஒரு பகுதியை வேலையை விட்டு நீக்கியதற்கு எந்தக் காரணமும் அளிக்கப்படவில்லை. “வயதானவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று முதலில் சொன்னார்கள். இருந்தாலும் இளம் தொழிலாளர்களைக் கூட வேலையைவிட்டு அனுப்பினர். வெளியே அனுப்பப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் யூனியனில் துடிப்பாக வேலை செய்தவர்கள். அனைத்துத் தொழிலாளர்களும் யூனியனில் உறுப்பினர்களாக இருந்தார்கள். ஆனால், அனைத்து உறுப்பினர்களும் துடிப்பாகச் செயல்படவில்லை“, என்று ரமணி என்ற தொழிலாளி சொன்னார். அவர் வழக்கின் மனுதாரர்களில் ஒருவர்.

வேலையை விடுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பொய் வழக்குப் போடுவோம் என்று தொழிலாளர்களை நிர்வாகம் மிரட்டியது. கம்பெனி சொன்னதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கம்பெனியின் அதிகாரிகளும், உள்ளூர் பெரிய மனிதர்களும் வலுக்கட்டாயப் படுத்தினார்கள். வேலை செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூபாய் 5 ஆயிரம் தருவதாக கம்பெனி சொன்னது. தங்களின் உரிமையை எழுத்துபூர்வமாக விட்டுக் கொடுக்கும்படி தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரிக்காமலேயே தொழிலாளர் துறை நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுத்தது. அதன்பின் உத்தரவுக்கு எதிராக தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதன்பின் நீதிக்கான கடும் போராட்டம் துவங்கியது.

இழுத்தடித்த நீதி பரிபாலனம்:

தொழிலாளர் துறை தாவாவைத் தீர்க்க முடியவில்லை என்பதால், தொழிலாளர்கள், வழக்கைத் தொழிலாளர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். நீதிமன்றம் 2000 ஆம் ஆண்டில் கம்பெனிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது. தொழிலாளர்கள் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். பத்தாண்டுகள் கழித்து 2010ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தொழிலாளர் சட்டங்களை நிர்வாகம் மீறியிருக்கிறது என்று உயர்நீதிமன்றம் கருதியது. நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், அந்தத் தொகையை தொழிலாளர் ஆணையர் தீர்மானிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்த நிர்வாகம், வழக்கை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது. அங்கே மூன்று ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. நீதி நிர்வாகத்தின் பாதையில் பிரச்சனை பயணப்பட்ட காலத்தில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இயற்கையாக, அல்லது வேறு வகையில் மரணமடைந்தனர். கால தாமதம் ஆவதால் கவலைப்பட்டத் தொழிலாளர்கள், விரைவில் நீதி வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குத் தந்திகளை அனுப்பி வைத்தனர். 2013ல் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என்று சொன்னது. அளிக்கப்பட வேண்டிய இழப்பீட்டின் அளவு என்ன என்பதைத் தீர்மானிக்கவும் அதனை விரைவாக வழங்கவும் ஒரு நபர் கமிட்டி ஒன்றை அமைக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொழிலாளர் துறை நியமித்த சென்னை ஆணையர் காலதாமதம் செய்ததால் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். கோயம்புத்தூரின் தொழிலாளர் ஆணையருக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த நியமனத்தை முதலில் நிர்வாகம் ஒப்புக்கொண்டாலும், உரிய காலத்தில் விசாரணைக்கு வராமலும் பிற வழிமுறைகளைப் பயன்படுத்தியும் இழுத்தடித்தது.

விசாரணை இன்னும் 3 ஆண்டுகள் நீண்டது. பின்னர், 2016ல், தொழிலாளர் ஆணையர் உத்தரவு ஒன்றை வழங்கினார். இழந்துபோன பணியாண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 12 ஆயிரம் என்று உத்தரவு சொன்னது. அதாவது, வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஆண்டு துவங்கி ஒரு தொழிலாளியின் பணி மூப்பு வயது வரையிலான ஆண்டுகள் மட்டுமே இழப்பீட்டுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வேலையிழப்பு ஏற்பட்ட ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூபாய் 1 லட்சம் வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரினர். தொழிலாளி ஒருவருக்குக் குறைந்தது 12 லட்சம் கொடுக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக தொழிலாளர்களின் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர் சொன்னதாகத் தொழிலாளர்கள் சொல்கின்றனர். ஆனால், உத்தரவு மிகவும் மாறுபட்டதாக இருந்தது. மிகக் குறைவான தொகையாக தொழிலாளி ஒருவருக்கு ரூபாய் 80 ஆயிரமும், மிக அதிகமான தொகையாக தொழிலாளி ஒருவருக்கு ரூபாய் 3 லட்சமும் என்பதாக உத்தரவு இருந்தது. பேச்சுவார்த்தை நடத்தியவரிடம் தொழிலாளர்கள் விளக்கம் கேட்டனர். அவர் அளித்த பதில் தொழிலாளர்களுக்குத் திருப்தியளிப்பதாக இல்லை.

17 ஆண்டுகள் நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பின்பு கிடைக்கவிருந்த தொகையைப் பெற்றுக்கொண்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரத் தொழிலாளர்கள் விரும்பினர். ஆனால், அதிர்ச்சி தரும் திருப்பம் ஒன்று நிகழ்ந்தது. ஆம்பூர் பகுதியைத் தன் அதிகார எல்லைக்குள் கொண்டிராத கோயம்புத்தூர் தொழிலாளர் ஆணையருக்கு இப்பிரச்சனையில் தலையிடுவதற்கு அதிகாரம் உள்ளவர் இல்லை என்று கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் தடையுத்தரவை நிர்வாகம் பெற்றது.

எத்தனை மேல்முறையீடுகளை நிர்வாகம் செய்யும்? எத்தனை மேல் முறையீடுகளை நீதித்துறை அனுமதிக்கும்? இன்னும் எத்தனை ஆண்டுகள் தொழிலாளர்கள் காத்திருக்க வேண்டும்? நீதி நிலைநாட்டப்படுவதற்கு முன்பு எத்தனை பேர் செத்துப்போக வேண்டும்?

தொழிலாளர் வர்க்கத்தைப் படுகொலை செய்யும்  யுத்தம்:

(வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர் போராட்டத்தில் பேசுகிறார்)

வழக்கைத் தாக்கல் செய்த தொழிலாளர்களில் 35 பேர் இதுவரை இறந்துவிட்டனர். உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்ட கால தாமதத்தினை ஒட்டி, நூற்றுக்கணக்கான பலர் வழக்கிலிருந்து விலகிவிட்டனர். மேலும் பலர் உயர் நீதிமன்ற வழக்கில் ஈடுபட விரும்பவில்லை. தற்போது, 360 பேரில் வெறும் 155 பேர்தான் மிச்சமிருக்கின்றனர். இன்னும் சில ஆண்டுகள் போனால், இன்னும் பலர் இறந்துபோவார்கள். மற்ற சிலர் ஆர்வமிழந்து போகலாம்.

அவர்கள் தங்களின் வேலையைத் தக்கவைத்துக்கொள்ளவே போராடத் துவங்கினர் . தொழிலாளர் துறையில் ஏற்பட்ட முதல் பின்னடைவிற்குப் பின்னால், இழப்பீட்டை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரித்தபோது பலருக்கும் வயதாகிவிட்டிருந்தது. திரும்பவும் வேலைக்குச் செல்லும் நிலையில் அவர்கள் இல்லை. அப்போது, ஆலையில் பணி மூப்பு வரை வேலை செய்திருந்தால் என்ன சம்பளம் கிடைத்திருக்குமோ, அந்த சம்பளத்தை வழங்கும்படி தொழிலாளர்கள் கோரினார்கள்.

நீதிமன்றத்தில் வழக்கு மேலும் நீண்டுகொண்டிருந்தபோது, ஏழு ஆண்டுகள் கழிந்திருந்த சமயத்தில் தாங்கள் கேட்ட இழப்பீட்டில் ஐந்தில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்ளத் தொழிலாளர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், 1998ல் இருந்தது போலவே நீதி என்பது அவர்களுக்கு கிடைக்காத ஒன்றாக உள்ளது. சின்னஞ் சிறு நீதி கிடைப்பதற்கு முன்பு, தொழிலாளர்கள் தங்களின் நம்பிக்கையை இழப்பதையும், பகுத்தாயும் நிலையை இழப்பதையும், தொழிலாளர்கள் தங்களின் உயிர்களை இழப்பதையும் நமது நீதி பரிபாலன முறை உறுதி செய்திருக்கிறது. இது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான படுகொலை யுத்தமாகும்.

துவக்க ஆண்டுகளில் தொழிலாளர்கள் மிகவும் சிறப்பான முறையில் அமைப்பாகச் செயல்பட்டனர். மிகத் திறமையாக அவர்களை வழிநடத்திய சங்கத் தலைவரான அ. வெங்கடேசன் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். போராட்டம் நடந்துகொண்டிருந்த ஆண்டுகளில் அவர் இறந்துபோனார். அதன் பின் வந்த தலைவர்கள் தங்களுக்கு நலனை பாதுகாக்கின்றனர் என்று வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நம்பிக்கை இல்லை. 2014-16 காலத்தில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய தலைவர்கள் தொழிலாளர்களின் நலனை விட்டுக்கொடுத்து குறைவான தொகைக்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அவர்களுக்கு வேறு வழியில்லை, அவர்களை எதிர்த்துக் கேட்கும் தெம்பும் இல்லை.

.வெங்கடேசனின் மரணத்துக்குப் பின்பு வெங்கடேசன் சார்ந்திருந்த ஜனநாயகத் தொழிலாளர் மையத்தின் (Democratic Trade Union Center-DTUC)தலைமையை விட்டு தொழிலாளர்கள் விலகி இருந்தனர். தற்போதைய யூனியனின் தலைமை நடத்திய பேச்சுவார்த்தையில் திருப்தியடையாத பின்னர், ஒப்புக்கொண்ட இழப்பீட்டைக் கூட நிர்வாகம் அளிக்காது என்பது தெளிவான பின்பு, DTUCயை திரும்பவும் அணுகினர். DTUCசங்கம் அவர்களுக்கு அரசியல் மற்றும் சட்ட உதவிகளைச் செய்து வருகிறது.

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மற்றும் பிற மத அமைப்புகள் இந்த மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொன்னாலும், முதலாளியும் தொழிலாளியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும், இந்த வர்க்கப் போராட்டத்தில் அமைப்புகளுக்கு ஆர்வம் இல்லை. (இக்கம்பெனிகளின் தொழிலாளிகளில் மிகப் பெரும் பகுதி முஸ்லீம்கள். தொழிலாளர்கள் அனைவருமே முஸ்லீம்கள் அல்ல) அடையாள அரசியல் வெளியில், இந்த அமைப்புகளின் முதலாளித்துவ சார்பு மிகத் தெளிவாக அம்பலப்பட்டுப் போயிருக்கிறது. போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி இந்த அமைப்புகளை அழைப்பதில் DTUC-யும் முன்முயற்சி எடுக்கவில்லை.

அதிகார வர்க்கம், நீதித்துறை என்ற நமது ஜனநாயக அமைப்புகளின் கட்டமைப்புத் (systemic) தோல்வி, தொழிற்சங்கத் தலைமை இல்லாமை, அரசியல் போராட்ட வடிவத்தைக் கண்டுபிடிப்பதில் தோல்வி போன்ற காரணங்களால், முதலாளிகள் மிகத் துணிச்சலுடன் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கின்றனர். தொழிலாளர்கள் இன்னமும் கட்டமைப்புகளின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், மிக விரைவாகவோ, அல்லது காலம் தாழ்ந்தோ அந்த நம்பிக்கை முழுவதும் போய்விடும்.

 

This entry was posted in Factory Workers, Garment Industry, Labour Laws, News, Women Workers and tagged , , , , . Bookmark the permalink.