பதில் சொல்லுங்கள்! ஆள் குறைப்புக்கு ஆளான கிரீவ்ஸ் காட்டன் தொழிலாளர்கள் கம்பெனியிடம் கேள்வியெழுப்பினர்!

தொழிலாளர்களைச் சந்திக்க அதிகாரிகள் மறுப்பு; தொழிலாளர்களை மிரட்டிய போலீஸ்!

கிரீவ்ஸ் காட்டன் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 60 தொழிலாளர்கள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு கூடினர். அவர்கள் ஆள் குறைப்பு நடவடிக்கையில் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக அவர்கள் வந்திருந்தனர். தொழிலாளர் துறை உதவி ஆணையர் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த காரணத்தால், பிரச்சனை இப்போது தொழிலாளர் நீதிமன்றத்திற்குச் செல்லவிருக்கிறது. இதற்கு முன்பு தொழிலாளர் துறையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாது நிர்வாகம் தவிர்த்து இருக்கிறது. சட்ட நடவடிக்கைகளைத் தாமதப்படுத்துவதுதான் நிர்வாகத்தின் நோக்கம். நீதிமன்றத்தை நிர்வாகம் மதிக்க வேண்டும், சட்டப்பூர்வ நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும், தாமதம் செய்யக் கூடாது என்ற உறுதிபெறுவதற்காகவே, தொழிலாளர்கள் தலைமையகத்துக்கு வந்திருந்தனர். தொழிலாளர்கள் வருகையைப் பற்றி தெரிந்திருந்த போதும் கூட அதிகாரிகள் வெளியே வர அல்லது எந்தவித உறுதிமொழியையும் தர மறுத்துவிட்டார்கள். அதற்குப் பதிலாக, தொழிலாளர்கள் வளாகத்தின் உள்ளே வருவதற்கு அனுமதி மறுத்து உள்ளூர் காவல்துறைக்குச் செய்தி கொடுத்துவிட்டனர். தொழிலாளர்களால் சட்டம் – ஒழுங்குப் பிரச்சனை ஏற்படவில்லை என்ற போதும், வளாகத்தின் அருகில்கூட அமைதியான முறையில் கூடக் கூடாது என்று போலீஸ் கூறியது. அதிகாரிகளைச் சந்திக்கவும், உறுதி பெறவும் வாய்ப்பற்று இருந்தத் தொழிலாளர்கள், ‘கைது செய்யப்படுவீர்கள்‘ என்று எச்சரிக்கை செய்யப்பட்ட காரணத்தால் கலைந்து செல்வதென்று முடிவு செய்தனர்.

சைதாப்பேட்டை தலைமை அலுவலகத்துக்கு முன்பு கிரீவ்ஸ் காட்டன் தொழிலாளர்கள்

கடந்த 2016 ஏப்ரல் 29 அன்று கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையை கிரீவ்ஸ் காட்டன் மூடியது. வழக்கு நிலுவையில் இருந்த நிலைமையில் தொழிற்சாலையில் இருந்த யந்திரங்களை அகற்றி எடுத்துச் சென்றது. ராணிப்பேட்டையிலும், இந்தியாவின் பிற இடங்களிலும் தொழிற்சாலைகள் இருந்தபோதும் கூட, தொழிலாளர்களைப் பிற இடங்களில் வேலைக்கு எடுத்துக்கொள்வதற்கு மாறாக, வலுக்கட்டாயமாகத் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியது. உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதுதான் மூடலுக்குக் காரணம் என்று நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகச் சொல்கிறது. ஆனால், மூடலுக்கான உண்மையான காரணம், DTUC தலைமையின் கீழ் உருவான தொழிற்சங்கத்தை உடைப்பதுதான். தொழிலாளர்கள் நிர்வாகத்தின் செயலுக்கு எதிராக தொழிலாளர் துறையிடம் முறையிட்டனர். தொழிலாளர் துறை சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு நிர்வாகத்தின் அதிகாரிகள் வராத காரணத்தால் பெருமளவு தாமதம் ஏற்பட்டது. இறுதியாகப் பேச்சுவார்த்தைமுறிவுஅறிக்கையை தொழிலாளர் துறை ஆணையர் நவம்பர் 24 அன்று தாக்கல் செய்தார்.

காட்டன் கிரீவ்ஸ் தொழிலாளர் போராட்டம் பற்றி படிக்க இங்கே அழுத்தவும்.

ஒரு வருடத்துக்கு மேல் வேலையின்றி இருப்பதால், தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மிகக் கடுமையான பணப் பிரச்சனைகளையும், சமூகப் பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். தொழிலாளர்கள் சிலர் இன்னும் மோசமான வேலைகளில் சேர்ந்துள்ளனர். குறைவான கூலிக்கு வேலை செய்பவர்களாக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாறியிருக்கின்றனர். “30 நாட்கள் வேலை செய்த பின்னர் எங்களுக்கு ரூபாய் 8 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது. விடுமுறை கிடையாது. ஓவர் டைம் கிடையாது. எங்களுடைய 15 நாள் கூலி வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது. இப்படியே நாங்கள் எப்படி வாழ முடியும், என்று தொழிலாளர் ஒருவர் கேட்டார். வேலைநீக்கத்தைத் திரும்பப்பெற முடியாது என்று நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. இழப்பீட்டைச் சிறிது அதிகரிப்பது போன்ற சிறு பிரச்சனைகளைப் பேசத்தான் நிர்வாகம் தயாராக இருக்கிறது. தொழிலாளர் துறையும் நீதிமன்றங்களும் குறிப்பிட்ட காலத்தில் பிரச்சனையைத் தீர்ப்பதில் தோல்வி கண்டன; நிர்வாகம் செய்த காலதாமதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டன. 18 மாதங்களுக்குச் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. ‘நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம்என்று நிர்வாகம் சொன்ன பின்பு, தொழிலாளர் துறைமுறிவு அறிக்கைஅளித்தது. வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் இழுபடும் என்றும் அதன்பின்பு, மேல்முறையீடு என்று இழுத்தடிப்பார்கள் என்றும் தொழிலாளர்கள் அச்சப்படுகின்றனர். அதன் காரணமாக, கார்ப்பரேட் அலுவலகத்தில் பொது மேலாளரைச் சந்தித்து நீதிமன்ற வழக்கை மதித்து, உரிய காலத்தில் பதில் அளித்து நீதியை மதிப்பதாக உறுதி பெறுவதற்காக அவர்கள் வந்திருந்தனர்.

வாசலில் குழந்தைகளுடன் தொழிலாளர்கள்.

கம்பெனி எங்களை வெளியே தள்ளிய பின்பு எங்களுக்கு நிறைய இழப்பு. என் மனைவி என்னை விட்டுப் போய்விட்டாள். என் பெற்றோர்களை நான் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. ஆனால், எனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இரண்டாந்தர வேலையெல்லாம் பார்த்துவிட்டேன். எப்படியாவது வரவையும் செலவையும் சரிக்கட்டப் பார்க்கிறேன். கோர்ட்கேசு என்று என்னால் அலைய முடியாது. அதற்கு நேரமில்லை, என்று முந்தைய விவாதம் ஒன்றில் தொழிலாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். நீதி கிடைப்பதில் உள்ள தாமதம் தொழிலாளர்கள் உரிமையைப் பறிக்கிறது. ஏறக்குறைய 30 தொழிலாளர்கள் நிர்வாகம் அளித்த இழப்பீட்டைப் பெற்றுக்கொண்டு தொழில் தாவாவில் இருந்து விலக்கிக்கொண்டுவிட்டனர். இதுவரை தாக்குப் பிடித்து நிற்பவர்கள் காலதாமதம் தங்களை நோகடித்துவிடும் என்றும் நீதி கிடைக்காது போய்விடும் என்றும் பயப்படுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக, நீதிமன்றங்களில் இழுபடும் வழக்குகள் அவர்களின் பயத்தை அதிகப்படுத்துகின்றன.

புளூரின் டி ஷூ தொழிலாளர்கள் 18 ஆண்டுகளாக நீதிக்குக் காத்திருக்கிறார்கள் என்ற கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

அலுவலக ஊழியர்கள் வளாகத்துக்குள் வந்த பின்னர், காலை 10.30 மணிக்கு தொழிலாளர்கள் அலுவலக வாயில் அருகே திரண்டனர். எந்த ஒருவரின் நடமாட்டத்தையும் அவர்கள் தடுக்கவில்லை. பொது மேலாளரைச் சந்திக்க வேண்டும் என்று மட்டும் கேட்டனர். கதவை மூடிய செக்யூரிட்டிகள் போலீசை அழைத்தனர். காவல்துறையினர் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தனர். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பு காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்று முதலில் தொழிலாளர்களிடமும் பின்னர் தொழிற்சங்கத் தலைவர்களிடமும் காவல் துறை உதவி ஆய்வாளர் வெகுநேரம் பேசினார். அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லையென்று செக்யூரிட்டி அலுவலர்கள் சாதித்தனர். சில மணி நேரம் கழித்து பிரதிநிதிகள் சிலரை அதிகாரி சந்திப்பார் என்றும், மற்றவர்கள் கலைந்துபோக வேண்டும் என்றும் அதிகாரி சொன்னார். அது சரிப்பட்டு வராது என்று தொழிலாளர்கள் கருதினர். இப்படியான இழுபறி சில மணி நேரம் நீடித்த பின்னர், ஆய்வாளர் வந்தார். கலைந்துபோகவில்லை என்றால், தொழிலாளர்களைக் கைது செய்யப் போவதாக மிரட்டினார். தாங்கள் அலுவலக வேலையைத் தடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் யாருக்கும் தொந்தரவு தரவில்லை என்றும் தொழிலாளர்கள் வாதாடினர். அங்கேயே இருப்பதற்குத் தங்களுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள். சட்டம் பற்றி எந்தப் பேச்சும் வேண்டாம் என்று காவல்துறை முடிவெடுத்தது. விவாதம் சூடு பிடித்தது. காவல்துறையினர் உரத்தக் குரலில் பேசி, தொழிலாளர் தலைவர்களின் வாயை மூடச் செய்தனர். கலைந்து செல்வது என்றும், ஒருவேளை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தைக்குத் தயார் இல்லையென்றால் திரும்பி வருவது என்றும் தலைவர்கள் முடிவெடுத்தனர்.

தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்திருப்பது பளிச்சென்று தெரிந்தது. காவல்துறைக்கு இந்தப் பிரச்சனையில் வேலை எதுவும் இல்லை. தொழிலாளர்கள் பொதுமக்களுக்கு எந்தத் தொந்தரவும் அளிக்கவில்லை. எந்த சட்டத்தையும் மீறவில்லை. ‘சட்டம் ஒழுங்குஎன்ற பெயரில் தலையை நுழைத்த காவல்துறை ஒரு பக்கச் சார்பாக நடந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. விடாப்பிடியாக நிற்பதை விடுத்து, கலைந்துபோக முடிவெடுத்தத் தலைமையின் மீதும் தொழிலாளர்கள் வெறுப்புற்றுள்ளனர். ஒன்று கூடுவதற்குத் தொழிலாளர்கள் பெரும் முயற்சியெடுத்திருக்கின்றனர். ஒரு நாள் கூலியை இழந்துள்ளனர். செலவு செய்து சென்னைக்கு வந்துள்ளனர். சில தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் வந்திருக்கின்றனர். எந்த சந்திப்பும் நடக்காமல், எந்தவித உறுதிமொழியும் இல்லாமல் கலைந்து போவது மன உளைச்சல் அளிப்பதாக இருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு விளைவு இருக்கும் என்று தலைவர்கள் உறுதியளித்தனர். நிர்வாகத்தின் செயலில் எந்த மாற்றமும் இல்லையென்றால் திரும்பவும் கூடுவோம் என்றும் தலைவர்கள் தொழிலாளர்களுக்குச் சொன்னார்கள்.

This entry was posted in Factory Workers, Labour Laws, Lock out/Closure, News, Workers Struggles and tagged , , . Bookmark the permalink.